மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

"காவிரியின் குறுக்கே பில்லிகுண்டுவிலிருந்து வங்காள விரிகுடாவரை தமிழ்நாடு எத்தனை அணை கட்டினாலும் கர்நாடகம் தடுக் காது' என அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக் குமார் தெரிவித்திருக்கிறாரே?

சோற்றுப்பானையை கர்நாடகம் தன்வசம் வைத்துக்கொண்டு, தமிழ்நாடு தனது பந்தியில் எத்தனை இலை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் எனத் தாராளம் காட்டுவது, அம்மாநில அமைச்சரின் திமிர்த்தனத்தையே காட்டுகிறது.

mmm

Advertisment

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

அ.தி.மு.க.வுக்கு வலுவான தலைமை ஏற்பட்டு கட்சி மறுஅவதாரம் எடுக்கும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறுகிறாரே?

தற்போதைய இரட்டைத் தலைமை உருவா வதற்கான கடைசி நேர பஞ்சாயத்தை டெல்லி உத்தரவுப்படி நடத்தியவராயிற்றே.. டெல்லியின் அடுத்த அசைன்மெண்ட்டை நிறைவேற்ற ரெடியாகியிருப்பார். அ.தி.மு.க.வுக்கு ஏற்கனவே போயஸ்கார்டனிலிருந்து ஓர் அவதாரம் தலைமை ஏற்றது. அதே ஏரியாவிலிருந்து அடுத்த அவதா ரத்தை அடையாளம் காண்கிறாரோ என்னவோ!

சி.கார்த்திகேயன், சாத்தூர்

பா.ம.க.வுக்கு அ.தி.மு.க. ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் போட்டதற்கும், ம.தி. மு..வுக்கு தி.மு.க. ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் போட்டதற்கும் என்ன வித்தியாசம்?

தேர்தல் நேர விருந்தாளிக்கு கொடுப்பதற்கும், கொள்கைரீதியாக முட்டி மோதிய பங்காளிக்கு கொடுப்பதற்குமான வித்தியாசம்தான்.

செ.க.சாமி, திருப்பத்தூர், வேலூர்

மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழியினரிடம் தமிழ் மொழியின் மேல் ஒருவகை ஒவ்வாமை இருப்பது ஏன்?

அது ஒவ்வாமை அல்ல அறியாமை. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி, தமிழ். அதிலிருந்து கிளைத்தவையான மற்ற மொழி களின் மீது வடமொழியின் ஆதிக்கம் அதிகம். தமிழ் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நின்று சீரிளமைத் திறத்தோடு, காலத்திற்கேற்ற வளர்ச்சி யுடன் செம்மொழித் தன்மையுடன் சிறந்து விளங்குகிறது. மொழி ஆதிக்கமே பண்பாட்டு ஆதிக்கத்திற்கும், அதன் வழியே அரசியல் ஆதிக் கத்திற்கும் வழி வகுக்கும். அதனைக் காலந்தோறும் தமிழ் உணர்ந்தே செயல்பட்டிருப்பதால், பண்பாட்டு-அரசியல் ஆதிக்கங்கள் அதிகளவில் அண்டவிடாமல் தடுத்து நிற்கிறது. அதனால் தமிழர்களிடம் தனித்தன்மை வெளிப்படுகிறது. இந்தத் தனித்தன்மை ஒரு நேரத்தில் மற்றவர்களுக்கு ஒவ்வாமை போல இருந்தது. இப்போது, திராவிடக் குடும்பத்தின் பிற மொழிகளும் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற தமிழின் வழியைப் பின்பற்ற முயற்சிக்கின்றன.

நித்திலா, தேவதானப்பட்டி

இயற்கையின் ஓரவஞ்சனை என்றால் என்ன?

சென்னைவாசிகள் ஒரு குடம் நீருக்காக அலைகிறார்கள். மும்பைவாலாக்கள் வெள்ளத்தில் தவிக்கிறார்கள்.

______________

காந்தி தேசம்

Advertisment

சங்கரசுப்ரமணியன், பாளையங்கோட்டை, நெல்லை

இஸ்ரேல் நாட்டு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படம் அச்சிடப் பட்ட விவகாரம் இந் திய நாடாளுமன்றத்தில் பரபரப் பாக விவாதிக்கப்பட்டிருக்கிறதே?

இஸ்ரேல் நாட்டின் 71-வது சுதந்திர தின விழாவையொட்டி, தலைவர்களைப் பெருமைப்படுத்துவ தாக நினைத்து, மது பாட்டில்களில் அவர்களின் படங்களை அச்சிட்டிருக் கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் மூன்று பேர் படங்கள், யூத தத்துவாசிரியர் ஒருவர் என அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் படங்கள் மது பாட்டில்களில் அச்சிடப் பட்டன. அத்துடன், காந்தி படத்தை மல்கா பீர் பாட்டிலில் அச்சிட்டு விட் டார்கள். மது பாட்டிலில் அச்சிடப்பட்ட தலைவர்களில் இஸ்ரேல் நாட்டைச் சேராதவர் காந்தி மட்டுமே. இது, காந்திக்கு செய்யப்படும் "பெருமை' என நினைத்துவிட்டது இஸ்ரேல் மது தயாரிப்பு நிறுவனம். ஆனால், இந்தியா வில் காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை யில் எம்.பிக்கள் இதனைக் குறிப்பிட்டு ஆட்சேபம் எழுப்பினர். இதையடுத்து, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி னார். இந்தியாவின் வலியுறுத்தலை யடுத்து, மல்கா பீர் கம்பெனி மன் னிப்பு கோரியதுடன், காந்தி படம் கொண்ட மதுபாட்டில்கள் தயாரிப்பதை நிறுத்தியது. கடைகளில் இருந்த பாட்டில்களையும் திரும்பப் பெற்றுள் ளது. மது, புகை, புலால் இவற்றிற்கு எதிராக இருந்தவர் காந்தி. அத னால்தான், அவர் பிறந்த மாநிலமான குஜராத்தில் இன்றளவும் மதுவிலக்கு சட்டப்பூர்வமாக இருக்கிறது. (நடைமுறையில் மதுபான விற்பனை கள்ளத்தனமாக நடைபெறுகிறது). இறைச்சிக் கடைக்கோ, மதுபானங் களுக்கோ காந்தி பெயர் வைக்கப் படுவதில்லை. ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில், ஒரு சுருட்டு கம்பெனி, காந்தி சுருட்டு என்ற பெயரில் விற்பனை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவே, "காந்தி' சுருட்டு என்பதை "சூரியகாந்தி' சுருட்டு எனப் பெயர் மாற்றி விற்பனை செய்தது. காந்தியை வணிகமாக்குவதில் அரசியல்வாதிகளுக்கும் வியாபாரி களுக்கும் போட்டாபோட்டிதான்.