ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 37 பேரும் தங்களது சொத்துகளை விற்றாவது, கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என் கிறாரே பொன்.ராதா கிருஷ்ணன்?
"ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடு வோம்' என்ற வாக் குறுதியை நிறைவேற்று வதற்காக மோடி, அமித்ஷாவில் தொடங்கி பொன்னார், தமிழிசை வரை தங்கள் சொத்து களை விற்று, மக்களின் வங்கிக் கணக்கில் போட்டது போலவா?
ஜி.நீலமேகம், குடவாசல்
தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டி.ஆர்.எஸ். கட்சிக்குத் தாவு கிறார்கள். ஆந்திராவில் தெலுங்கு தேச ராஜ்ய சபா எம்.பி.க்கள், பா.ஜ. க.வுக்குத் தாவுகிறார்கள். கட்சித்தாவல் நடவடிக்கையின் கீழ் இவர்களின் பதவி பறிக்கப்படாதா?
கட்சித் தாவல் தடைச்சட்டம் என்பது 400-க்கும் அதிகமான எம்.பி.க்களுடன் 1984-ல் வெற்றி பெற்று பிரதமரான காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, தனது எம்.பி.க்களைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள உருவாக்கிய சட்டம். 1985-ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின்படி ஒரு கட்சியின் சார்பில் தேர
ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 37 பேரும் தங்களது சொத்துகளை விற்றாவது, கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என் கிறாரே பொன்.ராதா கிருஷ்ணன்?
"ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடு வோம்' என்ற வாக் குறுதியை நிறைவேற்று வதற்காக மோடி, அமித்ஷாவில் தொடங்கி பொன்னார், தமிழிசை வரை தங்கள் சொத்து களை விற்று, மக்களின் வங்கிக் கணக்கில் போட்டது போலவா?
ஜி.நீலமேகம், குடவாசல்
தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டி.ஆர்.எஸ். கட்சிக்குத் தாவு கிறார்கள். ஆந்திராவில் தெலுங்கு தேச ராஜ்ய சபா எம்.பி.க்கள், பா.ஜ. க.வுக்குத் தாவுகிறார்கள். கட்சித்தாவல் நடவடிக்கையின் கீழ் இவர்களின் பதவி பறிக்கப்படாதா?
கட்சித் தாவல் தடைச்சட்டம் என்பது 400-க்கும் அதிகமான எம்.பி.க்களுடன் 1984-ல் வெற்றி பெற்று பிரதமரான காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, தனது எம்.பி.க்களைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள உருவாக்கிய சட்டம். 1985-ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் வேறு கட்சிக்கு மாறினால், அவர்களின் பதவி பறிக்கப்படும். அதேநேரத்தில் கட்சியின் மொத்த எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்தால், அது கட்சி பிளவுண்டதாகக் கருதப்பட்டு, பதவி நீடிக்கும் என கட்சித் தாவல் தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், 91-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு என்பது மூன்றில் இரண்டு பங்கு என மாற்றப்பட்டது. தெலங்கானாவில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேரும், ஆந்திராவில் 6 தெலுங்கு தேச எம்.பி.க்களில் 4 பேரும் கட்சி மாறிய தால் மூன்றில் இரண்டு பங்கு என்ற எண் ணிக்கையின் அடிப் படையில் அவர்களின் பதவிகள் தப்பித்திருக் கின்றன.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வெற்றி-தோல்வி முடிவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடுமா?
சினிமா என்கிற கலைத்துறையும் ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியில் பங்குள்ள துறைதான். எனினும், நடிகர் சங்கத் தேர்தல் மோதல்களும் அதில் உள்ள அரசியலும் குறைந்தபட்சம் சினிமா நடிகர்-நடிகைகளுக்காவது தொலை நோக்குப் பார்வையுடன் உதவுமா என்ற கேள்விக்கு அவர்களிடமே சரியான பதில் இல்லை.
தூயா, நெய்வேலி
ஆந்திராவில் படிப்படியாக மதுவிலக்காமே, தமிழ்நாட்டில்?
இங்கே மதுவிலக்கை வலியுறுத்தி மதுரை மாணவி நந்தினியும் அவரது அப்பா ஆனந்தனும் தொடர்ச்சியாகப் போராடுவதும் சிறை செல்வதும் வழக்கமாக இருக்கிறது. தங்கள் மீதான ஒரு வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரானபோது, "இந்தியன் பீனல் கோடு 328-ன்படி அரசே டாஸ்மாக்கில் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா' என வாதாடியதற்காக கோர்ட் அவமதிப்பின் கீழ் தந்தையும் மகளும் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
லட்சுமிதாரா பவானி (வேலூர்) நாமக்கல்
பட்ஜெட் புத்தகம் தயாரிப்பதற்கு முன் அல்வா தயாரிக்கிறார்களே?
இதைத்தான் மக்களுக்கு தரப் போகிறோம் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்கள்.
______________
காந்திதேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காந்திஜி எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார். அவர் நீண்ட காலம் சிறையில் இருந்தது எப்போது?
முதன்முதலாக காந்தி சிறை சென்றது 1908-ஆம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குடியுரிமைப் பதிவு தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 20 நாட்கள் சிறைப்பட்டார். அதன்பிறகு, 1913-ஆம் ஆண்டுவரை தென்னாப்பிரிக்காவில் 6 முறை சிறை சென்றிருக்கிறார். அதில் அதிகபட்ச சிறைவாசம் என்பது 1909-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு 3 மாதகாலம் சிறைப்பட்டதுதான். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி சத்யாகிரகப் போராட்டத் தைத் தொடங்கிய காந்தி, 1919-ஆம் ஆண்டிலிருந்து 1942-ஆம் ஆண்டுவரை 6 முறை சிறைப்பட்டிருக் கிறார். இதில் ஒரேநாளில் விடுதலை செய்யப் பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்ததும் உண்டு. 1922-ல் 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட காந்தி, 2 ஆண்டுகளுக்குள்ளாக விடுவிக்கப்பட்டார். 1942-ல் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கியபோது, ஆகஸ்ட் 9-ந் தேதி அதிகாலையில் கைது செய்யப் பட்டு, ஆகாகான் அரண்மனை சிறையில் வைக்கப் பட்ட காந்தி, 1944 மே 6-ந் தேதி காலை 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.
பிரிட்டிஷார் காந்தியை அரசியல் கைதிக்குரிய மரியாதைக்கும் சற்று கூடுதலாகவே நடத்தினர். எரவாடா சிறையில் தனக்கு அளிக்கப்பட்ட வசதிகள் குறித்து காந்தியே தெரிவித்திருக்கிறார். ஆட்டுப்பால், வெண்ணெய், கைராட்டை வழங்கப்பட்டதுடன், சொந்தச் செலவில் பத்திரிகைகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டார். சொந்தமாக சப்பாத்தி செய்து சாப்பிடவும் அனுமதி கிடைத்தது. சிறைக்குள் கைதிகள் கத்தி வைத்துக்கொள்ளக்கூடாது. எனினும், வெண்ணெய் தடவுவதற்காக காந்திக்கு சிறப்பு அனுமதியுடன் கத்தி வழங்கினர். அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தனக்கான மருத்துவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார் காந்தி.