Advertisment

மாவலி பதில்கள்

dda

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்திரராசன் ஒப்பிடுக.

முன்னவர், விரல் நோகாமல் வெல்லம் சாப்பிடுபவர். அடுத்தவர், வெல்லம் என நினைத்து விரலைக் கடித்துக்கொண்டவர்.

Advertisment

mm

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாய்கள் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, "இதுதான் இந்தியா' எனக் கிண்டல் செய்துள்ளாரே ராகுல்காந்தி?

யோகாவை மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெரும் விளம்பரத்துடன் கையாளும் மோடி சர்க்காரை கிண்டல் செய்ய ராகுல் அந்தப் படத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார். உண்மையான யோகா என்பது, மோடி போல கேமராவைப் பார்த்து போஸ் கொடுப்பதல்ல, ராகுலின் கொள்ளு தாத்தா ஜவகர்லால் நேரு, தலைகீழ் நிலையில் செய்து காட்டி மற்றவர்களுக்கு தண்ணி காட்டியதுபோல, உடலையும் மனதையும் சீராக வைப்பது.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கொள்கை முடிவு என்கிறார்களே அப்படின்னா?

அறிவிக்கின்ற கொள்கைக்கு

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்திரராசன் ஒப்பிடுக.

முன்னவர், விரல் நோகாமல் வெல்லம் சாப்பிடுபவர். அடுத்தவர், வெல்லம் என நினைத்து விரலைக் கடித்துக்கொண்டவர்.

Advertisment

mm

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாய்கள் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, "இதுதான் இந்தியா' எனக் கிண்டல் செய்துள்ளாரே ராகுல்காந்தி?

யோகாவை மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெரும் விளம்பரத்துடன் கையாளும் மோடி சர்க்காரை கிண்டல் செய்ய ராகுல் அந்தப் படத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார். உண்மையான யோகா என்பது, மோடி போல கேமராவைப் பார்த்து போஸ் கொடுப்பதல்ல, ராகுலின் கொள்ளு தாத்தா ஜவகர்லால் நேரு, தலைகீழ் நிலையில் செய்து காட்டி மற்றவர்களுக்கு தண்ணி காட்டியதுபோல, உடலையும் மனதையும் சீராக வைப்பது.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கொள்கை முடிவு என்கிறார்களே அப்படின்னா?

அறிவிக்கின்ற கொள்கைக்கும் எடுக்கின்ற முடிவுக்கும் சம்பந்தமிருக்கிறதா, அப்படித்தான். எடுத்துக்காட்டாக, "நீட் தேர்வை எதிர்ப்பது எங்கள் கொள்கை' என்கிறது அ.தி.மு.க. அரசு. ஆனால், நீட் தேர்வுக்கான பயிற்சி நிலை யங்களைத் திறக்கும் முடிவெடுத்ததும் அதே அரசுதான்.

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக நூறு வயதை நிறைவு செய்வது இந்தியாவில் மகத்தான சாதனைதானே?

நிச்சயமாக. அதை கேரளாவைச் சேர்ந்த கவுரி அம்மா சாதித்திருக் கிறார். கேரள மாநிலம் உருவானபிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். ஈழவா சமுதாயத்திலிருந்து வழக்கறி ஞர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி அவர் என்பதுடன் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தலைமையிலான இடதுசாரி அமைச்சரவையில் இடம் பெற்றவர். கேரளாவில் நிலசீர்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத் தியவர். ஈ.கே.நாயனார் தலைமை யிலான இடதுசாரி அமைச்ச ரவையிலும் இடம்பெற்றவர். கட்சி எடுத்த நடவடிக்கையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டிலிருந்து அவர் நீக்கப்பட்டபோது, "ஜனாதிபதிய சம்ரக்ஷன சமிதி' என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியுடன் தேர்தல் களம் கண்டு, ஏ.கே. அந்தோணி -உம்மன்சாண்டி அமைச்ச ரவைகளிலும் பொறுப்பு வகித் தவர். எளிமையும் நேர்மையும் பொதுவாழ்வில் அவர் சம்பாதித்த சொத்துகள். அதனால்தான், கட்சியிலிருந்து கவுரி அம்மா நீக்கப்பட்டாலும், கேரளாவின் இடதுசாரி அரசுக்கு தலைமை தாங்கும் முதல்வர் பினரயி விஜயன் உள்ளிட்டோர் நேரில் சென்று கவுரிஅம்மாவுக்கு நூற்றாண்டு வாழ்த்து தெரிவித்து, சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

_____________

காந்திதேசம்

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

காந்தியின் "ஹேராம்...' பா.ஜ.க.வின் "ஜெய்ஸ்ரீராம்' என்ன வித்தியாசம்?

dd

ராமர் மீது காந்திக்கு இருந்தது பக்தி. அதனை அரசியலில் அனைவரையும் இணைக்கும் சொல்லாகப் பயன்படுத்த முயன்றார். ராமரை மதவாதக் கண்ணோட்டத்துடன் பா.ஜ.க. பயன்படுத்துவது தேர்தல் அரசியலுக்காக. அதை, பிறரிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டும் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் "தமிழ் வாழ்க', "பெரியார் வாழ்க' என்று தமிழ்நாட்டு எம்.பிக்கள் சொன்னால், அதற்கு எதிர்ப்புக் குரலாக, "ஜெய்ஸ்ரீராம்' என பா.ஜ.க.வினர் கூச்சலிடுவதிலிருந்தே அவர்கள் ராமரை எந்தளவுக்கு அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். வால்மீகியின் வடமொழி ராமரைவிட, கம்பரின் தமிழ் ராமர் பண்பாட்டுத் தளத்தில் சிறந்த நாயகனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அனுமன் கதாபாத்திரத்தையும் பக்தி -விசுவாசம் -பொறுப்புணர்வு கொண்டதாக கம்ப ராமாயணம் சித்தரிக்கும். அப்படியிருந்தும் "தமிழ் வாழ்க' என்ற முழக்கத்திற்கு எதிராக "ஜெய்ஸ்ரீராம்' கோஷம் கிளம்புவது, வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. அதன் உச்சகட்டம்தான், ஜார்கண்டில் நடந்திருக்கும் கொடூரம்.

தப்ரீஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞர் ஜாம்ஷெட்பூரில் தன் உறவினரைப் பார்த்துவிட்டு, ஜூன் 18-ந் தேதி இரவு தட்கிதி என்ற கிராமத்தின் வழியாக வந்தபோது, அவரைத் திருடன் என சந்தேகித்தவர்கள் அவரது கன்னத்தில் சரமாரியாக அறைந்தனர். அதன்பிறகு, அவரது பெயரைக் கேட்க, அது முஸ்லிம் பெயர் என்றதும், மதவெறியும் வெறுப்புணர்வும் அதிகமாகி, ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்து, இரவில் நெடுநேரம் அடித்து உதைத்துள்ளனர்.அதன்பிறகு அவரைப் பக்கத்திலிருந்த ஒரு புதர் பகுதிக்கு இழுத்துச்சென்று, "ஜெய்ஸ்ரீராம்', "ஜெய்அனுமான்' என கோஷம்போடச் சொல்லி அடித்துள்ளனர். அதன்பிறகே போலீஸ் வந்துள்ளது. திருடன் எனக் குற்றம்சாட்டப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்ட தப்ரீஸ் குறித்த எஃப்.ஐ.ஆரில் அவர் மீதான காயங்கள் பற்றி எந்தப் பதிவும் இல்லை. கடுமையாகத் தாக்கப்பட்ட தப்ரீஸின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். காந்தியின் "ஹேராம்' அவரது உதட்டிலிருந்து வந்த சொற்கள். "ஜெய்ஸ்ரீராம்' என்பது உயிரை வதைக்கும் வகையில் கட்டாயப்படுத்தும் ஆபத்தான கோஷமாகிவிட்டது.

nkn020719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe