ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்
விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சாதா ரண பயணிகளைப் போல் வரிசையில் வரவழைத்து சோதனை செய்தது பற்றி?
ஆட்சி அதி காரத்தில் இருப்பதற் கும், ஆளுங்கட்சி யைப் பகைத்துக் கொண்டு எதிர்க்கட்சி யாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மத்திய அரசு எடுத்த முயற்சியாக இருக்கும்.
நித்திலா, தேவதானப்பட்டி
குஜராத் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் உயரதிகாரி சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ்.ஸுக்கு லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டி ருக்கிறதே?
சட்டப்படி நீதிமன்றம் வழங்கிய தண் டனை எனினும், அதில் சஞ்சீவ் பட் சிக்க வைக்கப் பட்டதில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை முழுமையாக இருக்கிறது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு கொடூரத் திற்குப் பிறகு நடந்த, முஸ்லிம் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்கு தலுக்கும் அதில் ஏற்பட்ட ஆயிரக் கணக்கான உயிர்ப் பலிகளுக்கும் மோடி அரசு எந்த வகையில் மதவெறியர்களுக்கு உதவியது என்பதை அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட். குஜராத்தில் முஸ்லிம்களை குறி வைத்து அழித்
ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்
விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சாதா ரண பயணிகளைப் போல் வரிசையில் வரவழைத்து சோதனை செய்தது பற்றி?
ஆட்சி அதி காரத்தில் இருப்பதற் கும், ஆளுங்கட்சி யைப் பகைத்துக் கொண்டு எதிர்க்கட்சி யாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மத்திய அரசு எடுத்த முயற்சியாக இருக்கும்.
நித்திலா, தேவதானப்பட்டி
குஜராத் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் உயரதிகாரி சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ்.ஸுக்கு லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டி ருக்கிறதே?
சட்டப்படி நீதிமன்றம் வழங்கிய தண் டனை எனினும், அதில் சஞ்சீவ் பட் சிக்க வைக்கப் பட்டதில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை முழுமையாக இருக்கிறது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு கொடூரத் திற்குப் பிறகு நடந்த, முஸ்லிம் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்கு தலுக்கும் அதில் ஏற்பட்ட ஆயிரக் கணக்கான உயிர்ப் பலிகளுக்கும் மோடி அரசு எந்த வகையில் மதவெறியர்களுக்கு உதவியது என்பதை அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட். குஜராத்தில் முஸ்லிம்களை குறி வைத்து அழித்தொழித்த சம்பவங்கள், போலி என்கவுண்ட்டர்கள் மூலம் சொராபுதீன், இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட் டது போன்ற கொடூரங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட் டன. மோடியும் அமித்ஷா வும் குஜராத்தை மதவெறி மண்ணாக மாற்றியதை வெளிப்படையாக சொன்னவர் சஞ்சீவ் பட். அவர்தான், 1990-ல் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி.யாக இருந்தபோது நடந்த லாக்கப் டெத் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண் டனை வழங்கப்பட்டிருக்கிறார். உயிர்ப்பலியான பிரபுதாஸ் வைஷ்னானி, அத்வானியின் ரத யாத்திரையையொட்டி கலவரம் செய்த இந்துத்வா கும்பலைச் சார்ந் தவர். சிறைவாசத்துக்குப் பின் இறந் தார் என்றும், லாக்கப் மரணத்திற் கான வாய்ப்பில்லை என்றும், அவரது கைதுக்கும் அப்போதைய எஸ்.பி.சஞ்சீவ் பட் டீமுக்கும் தொடர்பில்லை என ஆதாரங்களை முன்வைக்கிறார் சஞ் சீவ்பட்டின் மனைவி ஸ்வேதா. இந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மவுனம் காக்கிறார்கள். அப்பீல் வழக்கில் உண் மைகள் தெரியவரலாம்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதற்கான நிரந்தரத் தீர்வு காணமுடியாமல் தடையாக இருப்பது?
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உருவாக்கப்படும் அரசாங்கங்கள்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டது குறித்து?
2009-ல் திருமாவளவன், 2014-ல் பொன்.ராதாகிருஷ்ணன் என இதற்கான முன்மாதிரிகள் நிறைய உண்டு. ஆனால், இந்தமுறை அது கவனம் ஈர்த்ததற்கு காரணம், "தமிழ் வாழ்க', "பெரியார் வாழ்க' என தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டபோது, அதை எதிர்ப்ப தாக நினைத்து "ஜெய்ஸ்ரீராம்', "பாரத்மாதாகி ஜே' போன்ற முழக்கங்களை பா.ஜ.க. எழுப்பியதுதான்.
வி.கார்மேகம், தேவகோட்டை
"தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்திற்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம்' என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
ஆவின் பாலில் தண்ணீருக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறதே, அந்த தைரியத்தில் பேசியிருப்பார்.
___________
காந்திதேசம்
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
ஒரு கட்டத்தில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் மோதல் ஏற்பட்டது ஏன்?
ஒரு கட்டத்தில் அல்ல. கொள்கை அடிப்படையிலேயே காந்திக்கும் அம்பேத்கருக்கும் முரண்பாடுகளும் உடன்பாடுகளும் உண்டு. அம்பேத்கர் வலியுறுத்தியது சட்டத்தின் வழியிலான சமத்துவம். காந்தி கடைப்பிடித்தது அகிம்சை வழியிலான நல்லிணக்கம். இந்து மதம் மற்றும் அதன் வருண-சாதிப் பிரிவுகள் குறித்து காந்தி கொண்டிருந்த கருத்துகளுக் கும் அம்பேத்கர் கொண்டிருந்த கருத்துகளுக் கும் நிறைய மாறுபாடுகள் உண்டு. சாதியை ஒழிப்பது பற்றி அம்பேத்கர் பேசினார், எழுதினார். 'ஆய்ய்ண்ட்ண்ப்ஹற்ண்ர்ய் ர்ச் ஸ்ரீஹள்ற்ங்ள்' என்று அம்பேத்கரின் புத்தகமே வெளியாகியுள்ளது. காந்தியோ, வர்ணம்-சாதி இவற்றை வலியுறுத்தும் இந்துமதக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, அகிம்சை முறையில் மனமாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி உயர்வு-தாழ்வில்லா சாதியச் சமுதாயத்தைக் கனவு கண்டவர்.
1931-ல் லண்டனில் நடந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயப் பிரதிநிதிகளுடன் காந்தியும் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். அதனடிப் படையில், 1932-ல் இரட்டை வாக்குரிமையுடனான தனித் தொகுதி களை பிரிட்டிஷ் இந்திய அரசு உருவாக்கியது. அம்பேத்கரும் தலித் தலைவர்களும் இதனை வரவேற்ற நிலையில், "இது தாழ்த்தப்பட்டோரையும் மற்ற இந்துக்களையும் பிரிக்கும் சூழ்ச்சி' என புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி அதனை எதிர்த்ததுடன், காலவரையற்ற உண்ணாவிரதத்தையும் தொடங்கினார். காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவானது. அதனால் அம்பேத்கர் மீது நெருக்கடி திணிக்கப்பட்டது. எரவாடா சிறையில் காந்தியை சந்தித்து பேசியபின், தனித் தொகுதிகள் எப்படி அமைய வேண்டும் என்ற புனே ஒப்பந்தம் இருவருக்குமிடையே கையெழுத்தானது. இதில் காந்தி காட்டிய பிடிவாதமும், தன்னை நம்பியிருக்கும் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அம்பேத்கரின் தவிப்பும் எதிரெதிர் நிலையில் இருந்தன. பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்ததைவிட, காந்தியுடனான புனே ஒப்பந்தம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்ற தொகுதிகள் அதிகம் என்பது காந்தியவாதிகள் வாதம். காந்தியின் உண்ணாவிரதம் என்பது, ஆதரவற்ற மக்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த வாய்ப்பை பறிக்கும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார் அம்பேத்கர்.