லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)
உதயநிதிக்கு பதவி தரப்போவது சரியா?
இந்தியா திரும்பிப் பார்க்கும் வெற்றியின் பெருமிதமான தருணத்தில், தானாகவே விமர்சன வலையில் சிக்க நினைக்கிறதோ தி.மு.க!
பி.ரம்யாமணி, வெள்ளக்கோவில்
பாரம்பரியமான தொகுதியில் ஸ்மிருதி இரானி யிடம் ராகுல் தோற்றதும், தேனியில் ஓ.பி.எஸ். ரவீந் திரநாத், ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனை வென்றதும் எப்படி?
அமேதி மீதான அதீத நம்பிக்கை ராகுலின் காலை வாரியது. அதற்கேற்ப ஸ்மிருதி இரானி சரி யான வியூகங்களை வகுத்தார். தேனி வாக்காளர் களை எப்படி கவர்வது என்பதற்கான வியூகங்களை வகுத்த ஓ.பி.எஸ். ரவீந் திரநாத்தை எதிர்கொள்வதில் இளங் கோவன் அலட்சியமாக இருந்து விட்டார். இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான அணுகுமுறையும் வெற்றி-தோல்விகளுக்கு ஒரு காரணம்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
எம்.ஜி.ஆரின் தாய்ப் பாசத்திற்கும் மோடியின் தாய்ப் பாசத்திற்கும் என்ன வித்தியாசம்?
தாய்ப்பாசம் என்பது அவரவர் தனிப் பட்ட உணர்வு. அது போற்றுதலுக்குரியது. மனி தர்கள் பலரு
லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)
உதயநிதிக்கு பதவி தரப்போவது சரியா?
இந்தியா திரும்பிப் பார்க்கும் வெற்றியின் பெருமிதமான தருணத்தில், தானாகவே விமர்சன வலையில் சிக்க நினைக்கிறதோ தி.மு.க!
பி.ரம்யாமணி, வெள்ளக்கோவில்
பாரம்பரியமான தொகுதியில் ஸ்மிருதி இரானி யிடம் ராகுல் தோற்றதும், தேனியில் ஓ.பி.எஸ். ரவீந் திரநாத், ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனை வென்றதும் எப்படி?
அமேதி மீதான அதீத நம்பிக்கை ராகுலின் காலை வாரியது. அதற்கேற்ப ஸ்மிருதி இரானி சரி யான வியூகங்களை வகுத்தார். தேனி வாக்காளர் களை எப்படி கவர்வது என்பதற்கான வியூகங்களை வகுத்த ஓ.பி.எஸ். ரவீந் திரநாத்தை எதிர்கொள்வதில் இளங் கோவன் அலட்சியமாக இருந்து விட்டார். இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான அணுகுமுறையும் வெற்றி-தோல்விகளுக்கு ஒரு காரணம்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
எம்.ஜி.ஆரின் தாய்ப் பாசத்திற்கும் மோடியின் தாய்ப் பாசத்திற்கும் என்ன வித்தியாசம்?
தாய்ப்பாசம் என்பது அவரவர் தனிப் பட்ட உணர்வு. அது போற்றுதலுக்குரியது. மனி தர்கள் பலரும் தாய்ப்பாசம் கொண்டவர்களே! எம்.ஜி.ஆர்-மோடி இருவர் விவகாரத்திலும் அது அதிக கவனம் பெற்றுள்ளது. அரசியல் களத்திலும் பயன்பட்டது. எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளைப் பார்க்க அவரது தாய் சத்யா உயிருடன் இல்லை. மோடியின் பதவியேற்பை டி.வி. நேரலை யில் பார்த்து மகிழ்கிறார் அவரது தாயார். எம்.ஜி. ஆர். தனது ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகத் திற்கு தனது அம்மா பெயரை வைத்தார். திட்டங் களுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் மோடியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்பதால் அம்மாவை வணங்குவது, சந்திப்பது, செல்ஃபி எடுப்பது என்ற அளவில் ஏழைத்தாயின் மகனுக்கு தேசிய முக்கியத்துவம் கிடைக்கிறது.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-7
"தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் தான் வெற்றி பெற்றுள்ளது' என்கிறாரே ரஜினி?
வடமாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றியை மோடியின் தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கும் ரஜினியால், தமிழ்நாட்டில் அதே மோடியின், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்களையும், அதை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி மக்களிடம் கொண்டு சேர்த்ததையும் வெளிப்படை யாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. "தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்' என்கிற இந்த நிலைப்பாடு, விரைவில் கட்சி தொடங்குவதாக கூறிவரும் ரஜினியிடம் அதற்கான அரசியல் பண்புகள் நெருங்கி வருவதைக் காட்டுகிறது.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
கோதாவரி-காவிரி இணைப்பு என்பது விஞ்ஞானப்பூர்வமாக இல்லாமல், அரசியல் கோஷமாக இருக்கிறது என்கிறாரே சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜன்?
தமிழக அரசின் ஓய்வு பெற்ற பொறியாளர் வீரப்பன், நீரியல் ஆய்வாளர் காமராஜ் ஆகியோரும் இதையே சொல்கின்றனர். தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்தான் முக்கியமானது. மத்திய-மாநில ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்வதேயில்லை.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
இளையராஜாவும் எஸ்.பி.பி.யும் ராசியாகிவிட்டனரே?
தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படுவதும், ராசியாவதும் புதிதல்ல. ஆனால், அவர்கள் இருவரும் பங்கேற்ற பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் காதுக்கு ராசியானவை.
______________
காந்திதேசம்
அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72
காந்திஜி-நேருஜி இருவருக் கிடையிலான நட்பு எப்படி இருந்தது? கருத்து வேறுபாடுகள் இருந்தனவா?
காந்தியைவிட 20 வயது இளையவர் நேரு. தலைவர்-தொண்டர் என்ற முறையில் அரசியல் உறவு அமைந்திருந்தாலும், தந்தை-மகன் என்கிற அளவுக்கு உள்ளார்ந்த உணர்வு இருந்தது. காந்திக்கும் நேருவுக்கும் இந்திய விடுதலையும், அதன் பிறகான வளர்ச்சியும் ஒரே இலக்காக இருந்தாலும், அது குறித்தான சிந்தனைகள் மாறுபட் டிருந்தன. இங்கிலாந்து சென்று படித்த போதும் தனது பாரம்பரிய வழக்கங்களைக் கைவிடாமல் பிடிவாதம் காட்டியவர் காந்தி. நேருவும், இங்கிலாந்தில் படித்தார். மேற்குலக நாடுகளுக்கும் கீழைத்தேசங்களுக்குமான ஒற்றுமை-வேற்றுமை களை உணர்ந்து, காலத்திற்கேற்ற சிந்தனைகளை மேம்படுத்திக் கொண்டவர். காந்தியின் பிடிவாத நிலைப்பாடு மீது நேருவுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தன. "தனது ஆசிரமத்துவாசிகளிடம் சத்தியம் வாங்கிய காந்தி, அவர்களை எப்படி வேண்டு மானாலும் நடத்தட்டும். சத்தியம் செய்யாத என் னைப் போன்ற காங்கிரஸ்காரர்களை ஏன் இழுத் தடிக்க வேண்டும்' என காந்தியை நேரு விமர்சித்திருக்கிறார். கிராமங்கள்தான் இந்தியாவின் ஆன்மா என்றார் காந்தி. விவசாயியின் ஏழ்மையான வாழ்க்கையை வானளாவப் புகழ்வதை நேரு விரும்ப வில்லை. நவீன தொழில்நுட்பத்தில் விவசாயம் மேம்பட்டு, நகர்ப்புறத்திற்கான வசதிகளுடன் விவசாயிகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என நினைத்தார்.
ராமராஜ்ஜியமாக இந்தியா இருக்க வேண்டும் என்றார் காந்தி. ஹிராகுட்-பக்ராநங்கல் போன்ற சுதந்திர இந்தியாவின் அணைகளே கோவில்கள் என்றார் நேரு. காந்தியின் தர்மகர்த்தா முறையை யும் நேரு ஏற்கவில்லை. எனினும், தந்தைக்கும் மகனுக்குமான தலைமுறை இடைவெளி எப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது தீர்வை நோக்கி நகருமோ அப்படித்தான் காந்தி-நேரு உறவு இருந்தது. குறைகளும் மாறுபட்ட சிந்தனைகளும் நேருவிடம் இருந்தபோதும், அவர் மீது அதிக நம்பிக்கை வைத்தார் காந்தி. அந்த நம்பிக்கையை காப்ôற்றக்கூடியவராக இருந்தார் நேரு.