மாவலி பதில்கள்

mavali answers

பிரதீபாஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

இனி எடப்பாடி ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என நம்பலாமா?

சிக்கல் வந்தாலும் அடுத்த 5 ஆண்டுக்கு மேலே இருப்பவர், தனக்கு மிச்சமிருக்கும் 2 ஆண்டுகளைப் பத்திரமாக பார்த்துக்கொள்வார் என நம்புகிறார் எடப்பாடி.

mavali answers

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-7

தமிழகம், கேரளம், ஆந்திரம் இந்த 3 மாநில மக்கள் மட்டும் ஏன் பா.ஜ.க.வை நிராகரித்தார்கள்?

கேரளாவில் பா.ஜ.க. அறுவடை செய்ய நினைத்த சபரிமலை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அறுத்துத் தள்ளிவிட்டது. சிறப்பு அந்தஸ்து தராத மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு வாக்குகளால் பதிலளித்து விட்டார்கள் ஆந்திர மாநிலத்து மக்கள். தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும் அரசியலுக்கும் பா.ஜ.க. நேரடி எதிரி. அதனுடன் கைகோர்த்ததால் அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும்கூட சேர்த்து பதம் பார்த்துவிட்டார்கள் தமிழக மக்கள்.

எம்.செல்லையா, சாத்தூர்

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை அநேக இடங்களில் மூன்றாவத

பிரதீபாஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

இனி எடப்பாடி ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என நம்பலாமா?

சிக்கல் வந்தாலும் அடுத்த 5 ஆண்டுக்கு மேலே இருப்பவர், தனக்கு மிச்சமிருக்கும் 2 ஆண்டுகளைப் பத்திரமாக பார்த்துக்கொள்வார் என நம்புகிறார் எடப்பாடி.

mavali answers

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-7

தமிழகம், கேரளம், ஆந்திரம் இந்த 3 மாநில மக்கள் மட்டும் ஏன் பா.ஜ.க.வை நிராகரித்தார்கள்?

கேரளாவில் பா.ஜ.க. அறுவடை செய்ய நினைத்த சபரிமலை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அறுத்துத் தள்ளிவிட்டது. சிறப்பு அந்தஸ்து தராத மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு வாக்குகளால் பதிலளித்து விட்டார்கள் ஆந்திர மாநிலத்து மக்கள். தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும் அரசியலுக்கும் பா.ஜ.க. நேரடி எதிரி. அதனுடன் கைகோர்த்ததால் அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும்கூட சேர்த்து பதம் பார்த்துவிட்டார்கள் தமிழக மக்கள்.

எம்.செல்லையா, சாத்தூர்

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை அநேக இடங்களில் மூன்றாவது நான்காவது இடங்களைப் பிடித்திருப்பது எதைக் காட்டுகிறது?

அ.ம.மு.க.விற்கு ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தைக் காட்டுகிறது.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கம்யூனிஸ்ட்டுகளின் நிலை?

சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலின் படத்தைக் கழற்றிவிட்டு, தமிழ்நாட்டின் மு.க.ஸ்டாலின் படத்தை மாட்டி கம்யூனிஸ்ட்டுகள் முழக்கமிடுவதாக கார்ட்டூன் வரையப்படுகிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் கம்யூனிசத்தின் தேவை எப்போதும் உண்டு. அதனை நடைமுறைப்படுத்துவதில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்கிற அணுகுமுறை தேவை. பழைய இறுக்கமே நீடித்தால், பாரம்பரியமிக்க மேற்குவங்க கம்யூனிஸ்ட் ஆதரவு வாக்குகள் பா.ஜ.கவுக்குப் போனது போன்ற நிலைமை உருவாகிவிடும். அது கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கும் ஆபத்தானது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றிபெற்றபோது, நடிகர் பிரகாஷ்ராஜ் படுதோல்வி அடைந்தது ஏன்?

பா.ஜ.க. அலை வீசிய கர்நாடகாவில் சுமலதா, தனக்கு சீட் தராத காங்கிரஸ் மீதான அதிருப்தியில் போட்டியிட்டார். பிரகாஷ்ராஜோ மத்திய பா.ஜ.க ஆட்சி மீதான அதிருப்தியில் போட்டியிட்டார். காற்றின் திசையில் பயணிப்பதற்கும், எதிர்நீச்சல் போடுவதற்கும் வேறுபாடு உண்டு.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

ஆட்சி காப்பாற்றப்பட்டது என்பதற்காகத் தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அ.தி.மு.க.வினர் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்களே?

ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுதானே இரண்டாண்டுகாலமாக அ.தி.மு.கவினரின் ஒரே வெற்றி. இடைத்தேர்தல் களத்திலும் அதே நடந்திருப்பதால், அதிக இடங்களில் தோற்றது பற்றிக் கவலையோ, எதிர்கட்சிகளிடம் 12 தொகுதிகளை பறிகொடுத்தது பற்றி வெட்கமோ படாமல், மெஜாரிட்டியைத் தக்க வைக்க சீட் கிடைத்ததே மாபெரும் வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

பிரியங்கா?

படுதோல்வியைத் தழுவியுள்ள காங்கிரசுக்கு மிச்சமிருக்கும் நம்பிக்கை அவர்தான். முதலில், சகோதரனைத் தேற்றட்டும். பிறகு, காங்கிரசை மீட்கட்டும்.

______________

காந்தி தேசம்

மல்லிகா அன்பழகன், சென்னை-78

ராமராஜ்ஜிய கனவு கண்ட காந்திஜிக்கு அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் என்ன நிலைப்பாடு இருந்தது?

அயோத்தி கோவில் விவகாரமெல்லாம் சுதந்திர இந்தியாவில்தான் கவனம் பெற்றது. அதுவும் 1980களுக்குப் பிறகு அது அரசியல் களத்தில் சர்ச்சையாகி, 1992 டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத அரசியலாக உக்கிரமானது. காந்தியின் ராமராஜ்ஜியம் என்பது ராமர்-சீதை-லட்சுமணன்-ராவணன் ஆகிய ராமாயணக் கதாபாத்திரங்களைக் கொண்டது அல்ல. இந்து-முஸ்லிம்-பார்சி-கிறிஸ்துவர்-சீக்கியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் இறைவனின் ஆட்சியையே அவர் ராமராஜ்ஜியம் என்றார். அதில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் ஆகியவை இருக்க வேண்டும் என்பது காந்தியின் பெருங்கனவு. எந்த ஒரு அரசும் அப்படி இருக்க முடியாது. ராமர் பிறந்த போது இருந்த அயோத்தியோ, அவரது அரசாட்சி காலத்திலோ கூட அது அத்தனை சுத்தபத்தமாக இருந்ததில்லை என்பதற்கு ராமாயணத்தில் பல காட்சிகள் உண்டு. சிறந்த நிர்வாகத்தின் மூலம்தான் ஒரு நாட்டின் குறைகள் களையப்படும் என்பதை ராமாயணம்-மகாபாரதம் மட்டுமல்ல, காந்தியை மிகவும் கவர்ந்த திருக்குறளும் தெளிவாக விளக்குகிறது.

காந்தி முன் வைத்த ராமராஜ்ஜியம் என்ற சொல், இன்றைய சூழலில் அவரை இந்துத்வாகாரராக மற்ற மதத்தினரின் மனதில் பதியச் செய்கிறது. இந்துத்வா அமைப்பினரோ அவர் எல்லோரையும் ராமரின் பெயரால் குழப்புகிறார் என்ற கோபத்துடன் காந்தியின் வாழ்வையே முடித்துவிட்டனர். ""மதம் பல கிளைகளைக் கொண்ட மரமாகும். கிளைகளைக் கொண்டு பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். ஆனால், மரமாக இருக்கும் மதம் என்னவோ ஒன்றுதான்'' என்கிறார் காந்தி. "கடவுளே உண்மை என்ற தத்துவத்திலிருந்து உண்மையே கடவுள்' என்ற நிலைக்கு நகர்ந்தவர் காந்தி என்கிற பேராசிரியர் பிபின்சந்திரா "பொதுவாழ்வில் காந்தி சந்தித்த மிகப் பெரிய தோல்வி மதவாத களத்தில்தான்' என்கிறார்.

nkn040619
இதையும் படியுங்கள்
Subscribe