மாவலி பதில்கள்

r

கௌசிக், திண்டுக்கல்

இந்த முறையாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமா பா.ஜ.க.?

கோவில் கட்டுவது என்பது அயோத்தி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்தது. ராமர் கோவில் விவகாரத்தில் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களிலும் கட்சிக்கான அடித்தளத்தைப் பலமாகக் கட்டிவிட்டது பா.ஜ.க.

m

மல்லிகா அன்பழகன், சென்னை - 78

"இஸ்லாத்தின் ஐ.எஸ். இயக்கம் போன்றதுதான் இந்து மதத்தின் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்' என்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்பீடு சரியா?

இரண்டின் செயல்பாட்டு வழிமுறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. எனினும், "இந்து தேசம்' என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலட்சியமும், "இஸ்லாமிக் ஸ்டேட்' என்கிற ஐ.எஸ்.இயக்கத்தின் சித்தாந்தமும் மற்ற மதத்தினரை மட்டுமல்ல, தங்கள் சொந்த மதத்தில் அமைதியை விரும்புகிறவர்களுக்கும்கூட ஆபத்தை உருவாக்கக்கூடியவை. "ஷாகா பயிற்சி' மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், "ஆயுதத் தாக்குதல்' மூலம் ஐ.எஸ். அமைப்பும் இதனை விதைத்து, வளர

கௌசிக், திண்டுக்கல்

இந்த முறையாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமா பா.ஜ.க.?

கோவில் கட்டுவது என்பது அயோத்தி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்தது. ராமர் கோவில் விவகாரத்தில் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களிலும் கட்சிக்கான அடித்தளத்தைப் பலமாகக் கட்டிவிட்டது பா.ஜ.க.

m

மல்லிகா அன்பழகன், சென்னை - 78

"இஸ்லாத்தின் ஐ.எஸ். இயக்கம் போன்றதுதான் இந்து மதத்தின் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்' என்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்பீடு சரியா?

இரண்டின் செயல்பாட்டு வழிமுறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. எனினும், "இந்து தேசம்' என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலட்சியமும், "இஸ்லாமிக் ஸ்டேட்' என்கிற ஐ.எஸ்.இயக்கத்தின் சித்தாந்தமும் மற்ற மதத்தினரை மட்டுமல்ல, தங்கள் சொந்த மதத்தில் அமைதியை விரும்புகிறவர்களுக்கும்கூட ஆபத்தை உருவாக்கக்கூடியவை. "ஷாகா பயிற்சி' மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், "ஆயுதத் தாக்குதல்' மூலம் ஐ.எஸ். அமைப்பும் இதனை விதைத்து, வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்

1990-களில் சோவியத் யூனியன் சிதறுண்டது போல, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்திருப்பது உலக அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

சோவியத் யூனியனின் சிதைவு என்பது உலக அளவில் ஒற்றை வல்லரசாக அமெரிக்கா மட்டுமே நிலைத்திருக்க வழி செய்தது. அதில் அரசியல்-பண்பாட்டு-பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்திருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணம், பொருளாதார நெருக்கடிகள்தான். அதன் தாக்கம் பல நாடுகளிலும் இருக்கும்.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

தேசிய அளவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கு விரிய ஆரம்பித்துவிட்டதே?

அவரது அயராத உழைப்பு-தோழமைக் கட்சிகளுடனான அரவணைப்பு-பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளின் ஒருங்கிணைப்பு. இதுதான் மு.க.ஸ்டாலினை இந்திய அளவில் கவனிக்க வைத்துள்ளது. இதனைத் தக்க வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைக் கொண்டு வருவதில்தான் அவரது முழு வெற்றி உள்ளது.

மணி, மதுரை

"இந்த வெற்றி மோடி அலையால் அல்ல, இந்துத்வ அலையால்' என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?

இரண்டு அலையையும் இந்தத் தேர்தல் களத்தில் பிரித்துப் பார்க்க முடியாது. வாஜ்பாய், அத்வானி, மோடி, யோகி என ஆட்கள் மாறலாம். அந்தந்த காலத்திற்கான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதே இந்துத்வா சித்தாந்தம்.

மணிமேகலை நாயகன், வேலூர் (நாமக்கல்)

"அக்காவும் - நானும்' என்ற தலைப்பில் சின்னம்மா சசி சிறையில் புத்தகம் எழுதி வருகிறாராமே?

சிறை ஒரு போதி மரம். புத்தர்களையும் புத்தகங்களையும் உருவாக்கும்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

நல்லகண்ணு?

எளிமையும் நேர்மையும் இன்றைய தேர்தல் அரசியல் களத்தில் பலன் தராது என்பதை அனுபவரீதியாக அறிந்த பொதுவுடைமைத் தலைவர்.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தில் முதல்வர் பழனிசாமி உறுதியாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும்?

ஒப்பந்ததாரர்களாக இருக்கும் அவரது உறவினர்களிடம் கேட்டால் தெரியும்.

____________

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன்

காங்கிரஸ் கட்சியின் கொடியில் காந்தியின் ராட்டை சின்னம் எவ்வாறு இடம்பெற்றது? எப்போது நீக்கப்பட்டது?

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கான வேலை உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்காக வெள்ளைக்காரரான ஆலன் ஆக்டேவியன் ஹூயூம் என்பவரும் இந்தியப் பிரமுகர்களும் இணைந்து 1885-ல் காங்கிரசை உருவாக்கினார்கள். அப்போது, சுதந்திர கோரிக்கை எல்லாம் முன்வைக்கப்படவில்லை. அதன்பின் சில ஆண்டுகளில் விடுதலைப் போராட்ட இயக்கமாக காங்கிரஸ் மெல்ல மெல்ல மாறிய நிலையில், 1904, 1906ஆம் ஆண்டுகளிலேயே கொடி உருவாக்கும் முயற்சி தொடங்கியது. நீலம்-மஞ்சள்-சிவப்பு நிறங்களுடன் நட்சத்திரம், சூரியன், பிறை உள்ளிட்டவை இடம்பெற்ற அந்தக் கொடியில் "ஜெயபாரதம்' என்ற வார்த்தைகளும் இந்தி எழுத்துகளில் இடம்பெற்றன. எனினும் 1907ஆம் ஆண்டு பாரீஸில் மேடம் காமா என்பவர் ஏற்றிய கொடிதான், காங்கிரஸ் கொடியாகவும் இந்திய விடுதலைக்கான கொடியாகவும் கவனம் பெற்றது. அடுத்தடுத்து பல வடிவங்கள் பெற்ற காங்கிரஸ் கொடி, காந்தியின் தலைமைக்குப் பிறகு, 1921-ல் மேலே வெள்ளை, நடுவில் பச்சை, கீழே சிவப்பும், நடுவில் நீலநிற ராட்டை சின்னமும் கொண்ட கொடியை பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். இது காங்கிரஸ் கொடி, காந்தி கொடி, சுயராஜ்ஜியக் கொடி எனப் பலவிதங்களில் குறிப்பிடப்பட்டது. ராட்டையை தேசிய அடையாளமாக்குவதில் காந்தி தனி கவனம் செலுத்தினார்.

தற்போது பயன்படுத்தப்படும் காங்கிரஸ் கொடி என்பது 1931 ஆகஸ்ட் 31-ல் முதன் முதலில் ஏற்றப்பட்டது. அந்த நாளை "கொடி நாள்' என ஆண்டுதோறும் கொண்டாடினர். இந்துக்களின் அடையாளமாக மேலே காவி, முஸ்லிம்களின் அடையாளமாக கீழே பச்சை, இவற்றின் நடுவே கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரைக் குறிக்கும் வகையில் வெள்ளையும், அதில் நீல நிற ராட்டையும் இடம்பெற்றது. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்தபோது, ராட்டை போட்ட கொடி காங்கிரஸ் கட்சியின் கொடியானது. ராட்டைக்குப் பதில் அசோக சக்கரம் பொறித்த கொடி தேசியக் கொடியானது.

nkn310519
இதையும் படியுங்கள்
Subscribe