கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

கமல் பேசியதும், ராஜேந்திர பாலாஜி பேசியதும்?

dd

கமல் பேசியது, காந்தி படுகொலை எனும் கொடூர நிகழ்வின் ஒரு துண்டு. ராஜேந்திர பாலாஜி பேசியது பதவிக்கான எலும்புத்துண்டு.

Advertisment

கே.முரளி, விழுப்புரம்

"நான் ஒரே ஜாதியைச் சேர்ந்தவன், அது ஏழை ஜாதி' என்கிறாரே மோடி?

இந்தியாவில் மதம் மாற முடியும். ஆனால், சாதி மாற முடியாது. எனினும், தேர்தல் பிரச்சாரத் தில், ஓட்டுகளைக் குறிவைத்து, தன்னை பிற்படுத் தப்பட்ட ஜாதி, மிக பிற்படுத்தப்பட்ட ஜாதி என்றெல்லாம் சொல்லி, கடைசியாக ஏழை ஜாதி என தனக்குத்தானே மாற்றி... மாற்றி கம்யூனிட்டி சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டார் மோடி.

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

சாதிமத அரசியலை இனி தவிர்க்கவே முடியாது போலத் தெரிகிறதே?

பதவியில் நீடிக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்ய நினைப்பவர்கள் சாதி, மதம், மொழி, இனம் இவற்றில் எதெல்லாம் ஓட்டாக மாறுமோ அதையெல்லாம் அரசியலாக்குவார்கள். கிடைத்த பதவியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். ஈரோடு நகரசபைத் தலைவராக 1917 முதல் 1919 வரை பதவி வகித்தார் பெரியார். அப்போது குடிநீருக்காக குடத்தைத் தூக்கிக் கொண்டு மக்கள் அலையும் நிலையை மாற்றுவதற்காக, இந்தியாவி லேயே முதன்முறையாக, குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி னார். இதற்காக பெரிய நீர்த்தொட்டி கட்டி அதிலிருந்து இரும்புக்குழாய் மூலம், ஒடுக்கப் பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கச் செய்தார். ஈரோட்டில் பெரியார் நிறைவேற்றிய திட்டத்தைப் பார்த்து, சேலத்தில் சேர்மனாக இருந்த ராஜாஜியும் அதைப் பின்தொடர்ந்தார். திட்டத்தை நிறைவேற்றிய பெரியார், காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் எந்தப் பதவிக்கும் வரவில்லை. ஆனால், 100 ஆண்டு கடந்தும் அவர் கட்டிய குடிநீர்த் தொட்டி ஈரோட்டின் தாகம் தணிக்கிறது.

பா.சத்ரியன், பாகாநத்தம்

ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் பலமுனைத் தாக்குதலுக்கு தி.மு.க உள்ளாவது ஏன்?

அதற்குக் காரணம், அதன் அடிப்படைக் கொள்கையால் மிரண்டிருப்பவர்களின் பயமும், அந்தக் கொள்கைகளை சொந்தக் கட்சிக்காரர் களே உணராதபோது ஏற்படும் பிழையும்!

mav

மல்லிகா அன்பழகன், சென்னை-78

மேடைப் பேச்சில் வைகோவின் வாரிசு என்று சீமானைச் சொல்லலாமா?

அனல் தெறிக்கும் ஆவேசத்தில் இருவர் பேச்சும் ஒன்றுபோலத் தெரிந்தாலும், வைகோவின் பேச்சில் உண்மையான வரலாற் றுப் பார்வை இருக்கும்.

மா.சந்திரசேகர்,மேட்டுமகாதானபுரம்

ஆட்சியைக் கலைக்க நினைப்பவர் தலைவராக இருக்க முடியாது என்கிறாரே சரத்குமார்?

அவருக்கு ஜெ. மீதான பழைய கோபம் இன்னமும் மாறவில்லைபோலும்.

____________

காந்தி தேசம்

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

அகிம்சையை இலட்சியமாகக் கொண்ட காந்தி, தூக்குத் தண்டனை குறித்து வாய் திறக்காதது ஏன்?

இலட்சியம் மட்டுமல்ல, அதை அடையும் வழியிலும் கவனம் கொண்டவர் காந்தி. ஆயுதப் புரட்சி வழியிலான விடுதலையை அவர் ஆதரிக்கவில்லை. அது தனது சத்யாகிரக முறைக்கு எதிரானது என்பதால், அதனைக் கையாண்டவர்களையும் காந்தி ஆதரிக்கவில்லை. குறிப்பாக, பகத்சிங்-ராஜகுரு-சுகதேவ் ஆகிய 3 புரட்சிகர இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்தபோது, இந்தியாவே அதிர்ந்தது. அவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. மக்களிடம் அவர்கள் நாயகர் களானார்கள். பகத்சிங்கின் பெயர், சுதந்திரப் போராட்டக் களத்தில் காந்தியின் பெயரையும் புகழையும் மீறி பொதுமக்களால் உச்சரிக்கப்பட்டது. பகத்சிங் உள்ளிட் டோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய முயற்சிக்கும்படி காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காந்தி அப்போது வைசிராய் இர்வினுடன் இந்தியர்களின் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த காலம். ஆனாலும், அவர் இந்தப் பேச்சுவார்த்தையில், பகத்சிங் உள்ளிட்ட மூவரின் விடுதலையை ஒரு நிபந் தனையாக வைக்கத் தயாராக இல்லை. பேச்சுவார்த்தைக் குப் பின், பகத்சிங் உள்ளிட்டோரின் தண்டனை குறித்து கோரிக்கை வைத்தார். அதுவும், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்பதாக இல்லாமல், அதனைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற அளவில் காந்தியின் கோரிக்கை இருந்தது. பிரிட்டிஷ் அரசின் சட்ட நடவடிக்கைக்கு நெருக்கடி ஏற்படக்கூடாது என்பது காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. தண்டனையை ஒத்திவைப்பது தொடர்பாக இர்வின் பரிசீலிக்க முன்வந்தபோது, பஞ்சாப் மாநில பிரிட்டிஷ் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைத்தனர். மக்களின் கொந்தளிப்பு அதிகமானது. இந்நிலையில், 23-3-1931 அன்று, உங்ஹழ் எழ்ண்ங்ய்க் எனக் குறிப்பிட்டு இர்வினுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், "மக்களின் உணர்வு கருதியும், வன்முறை வெடிக்காமல் தடுக்கவும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும்' என வலியுறுத்தினார். ஆனால், அதேநாள் மாலையில் பகத்சிங் உள்ளிட்ட மூவருக்கும் அவசர அவசரமாக தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.