மாவலி பதில்கள்

dd

அருங்கரை வாசன், மதியாக்கூடலூர்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளில் ஒருவருக்குக்கூடப் பொருந்தி வரவில்லையே?

dd

சட்டமும் நீதியும் அதனைக் கையாள்பவர்களின் தன்மையைப் பொறுத்தது. ஜெ. மரணம் வரை காத்திருந்த சட்டமும் நீதியும், சசிகலா பதவியேற்பதற்குமுன் செயலாற்றியது. ராஜீவ் காந்தி கொலையிலும் சட்டத்தின் மூலம் தேடப்படவேண்டிய நீதி எங்கெங்கோ மறைந்திருக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"துரோகத்தை வேரறுக்க உருவான இயக்கம்தான் அ.ம.மு.க.' என்கிறாரே தினகரன்?

அண்ணாவுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்றார் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு ஜானகி துரோகம் செய்துவிட்டார் என்றார் ஜெயலலிதா. துரோகம் செய்தது ஜெயலலிதாதான் என்றனர் அவரது எதிரணியினர். ஜெயலலிதாவுக்கு சசிகலா துரோகம் செய்துவிட்டதாகவும், அந்த சசிகலாவுக்கே தினகரன் துரோகம் செய்து விட்டதாகவும் விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. பதவி கொடுத்தவர்களுக்கே

அருங்கரை வாசன், மதியாக்கூடலூர்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளில் ஒருவருக்குக்கூடப் பொருந்தி வரவில்லையே?

dd

சட்டமும் நீதியும் அதனைக் கையாள்பவர்களின் தன்மையைப் பொறுத்தது. ஜெ. மரணம் வரை காத்திருந்த சட்டமும் நீதியும், சசிகலா பதவியேற்பதற்குமுன் செயலாற்றியது. ராஜீவ் காந்தி கொலையிலும் சட்டத்தின் மூலம் தேடப்படவேண்டிய நீதி எங்கெங்கோ மறைந்திருக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"துரோகத்தை வேரறுக்க உருவான இயக்கம்தான் அ.ம.மு.க.' என்கிறாரே தினகரன்?

அண்ணாவுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்றார் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு ஜானகி துரோகம் செய்துவிட்டார் என்றார் ஜெயலலிதா. துரோகம் செய்தது ஜெயலலிதாதான் என்றனர் அவரது எதிரணியினர். ஜெயலலிதாவுக்கு சசிகலா துரோகம் செய்துவிட்டதாகவும், அந்த சசிகலாவுக்கே தினகரன் துரோகம் செய்து விட்டதாகவும் விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர்கள்தான் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் என்கிறார் தினகரன். அ.தி.மு.க.விலும் அதன் கிளை அமைப்புகளிலும் துரோகம் என்பது, அதிகாரத்தை கைப்பற்றியவர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் "கெட்ட வார்த்தை.'

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"மேற்கு வங்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை' என்கிறாரே பா.ஜ.கவின் பிரியங்கா சர்மா?

ஆமாம்... அங்கு மட்டும்தான் இல்லை. மகாராஷ்ட்ராவில் நரேந்திர தபோல்கர், கர்நாடகாவில் கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் எல்லாருமே பா.ஜ.க. நிர்வாகத்தில் கருத்து சுதந்திரம் அதிகமாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு, தற்கொலை செய்துகொண்டவர்கள்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

மாநில முதல்வர்களில் எத்தனை பேருக்கு பிரதமராகும் ஆசை இருக்கிறது?

யாருக்குத்தான் இல்லை. மாநில முதல்வர்களுக்கு மட்டுமா? எதிரணியில் இருப்பவர்கள், வருங்கால முதல்வர்கள் உள்பட பலருக்கும் அடுத்த பிரதமராகும் ஆசை அளவுக்கதிகமாக இருக்கிறது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கடன் வாங்கியாவது பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்கிற நடுத்தர குடும்பத்தினரின் ஆசை நியாயமானதுதானா?

தன்னுடைய நிகழ்கால உழைப்பும் அதில் கிடைக்கின்ற பலன்களும் தனது வாரிசுகளின் எதிர்கால நலனுக்கானவை என நினைப்பவர்கள் இந்திய சமூகத்தினர். அதிலும், நடுத்தர வர்க்கத்தினர் தங்களை விட பொருளாதார நிலையில் மேலே உள்ளவர்களைப் போல ஆக வேண்டும் என நினைப்பதால், அவர்களைப் போன்ற கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குத் தர வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த எண்ணம் இன்று ஏழைகள் வரை பரவிவிட்டது.

செ.கா.சாமி, திருப்பத்தூர், வேலூர்

வருண ஜெபம் செய்தால் மழை வருமா, அல்லது மழை வரும் காலம் பார்த்து வருண ஜெபம் செய்கிறார்களா?

வானிலை ஆய்வு மையங்களும் வருண ஜெபங்களும் நம் நாட்டில் தவிர்க்க முடியாத முரண்கள்.

_______________

காந்தி தேசம்dd

ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம், சாரங்கன், கும்பகோணம்

பிரதமர் மோடியை "பிரித்தாளும் தலைவர்' என தலைப்பிட்டு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "டைம்' பத்திரிகை எழுதியுள்ளதே? காந்தியைப் பற்றி புகழ்மிக்க அந்தப் பத்திரிகையின் பார்வை என்ன?

"டைம்' பத்திரிகையின் அட்டைப் படத்தில் ஒருவரின் படம் இடம்பெறுவது என்பது, இந்தக் காலத்தின் பிரேக்கிங் நியூஸ், "ஆண்டின் சிறந்த மனிதர்' போன்றவற்றைவிட கவனத்திற்குரியது. "1930ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்' என காந்தியை அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது "டைம்' பத்திரிகை. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதில், சத்யாகிரகம் என்கிற புதிய பாணியை, அகிம்சை முறையில் கையாண்டு, மதம் -சாதி -மொழி என பல வகைகளிலும் பிளவுபட்டிருக்கும் சொந்த நாட்டு மக்களை ஒன்றிணைத்து அவர்களைத் தன் போராட்ட வழிக்குத் திருப்பிய காந்தி, பூனா சிறையில் இருந்தபோது "டைம்' பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றார்.

"20ஆம் நூற்றாண்டின் உலகின் சிறந்த மனிதர்' என 1999ஆம் ஆண்டு இறுதியில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அட்டைப் படத்தில் வெளியிட்டது "டைம்' பத்திரிகை. அவருக்கு அடுத்த இடத்தில், காந்திதான் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். அந்த ஐன்ஸ்டீன்தான், "காந்தி என ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தார் என்பதை எதிர்காலம் நம்புவதற்கு யோசிக்கும்' எனக் கூறியவர். அதாவது, காந்தியைப்போல ஒரு மனிதன் வாழ முடியுமா என உலகம் ஆச்சரியப்படும். அதனால் நம்புவதற்கு யோசிக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். 2011ஆம் ஆண்டு "டைம்' இதழில், காலத்தை வென்று நிற்கக்கூடிய உலகின் 25 அரசியல் தலைவர்களின் பட்டியலில் காந்தியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாழ்கின்ற காலத்தில் சிறப்பையும், தன் வாழ்க்கைக்குப் பிறகும் வரலாற்றில் பெருமையையும் கொண்டிருந்தவர் காந்தி என்பதுதான் "டைம்' பத்திரிகை மூலம் வெளிப்படுகிறது. ஆனால், 2014ஆம் ஆண்டில் பிரதமர் ஆவதற்கு முன் ‘Modi Means Business’’என அரசியல்வாதி மோடியை வணிகத்துடன் ஒப்பிட்டுத் தலைப்பிட்டு வெளியிட்ட "டைம்' இதழ், அவர் பிரதமராகி 5 ஆண்டுகள் கழித்து, ‘உண்ஸ்ண்க்ங்ழ்’ எனத் தலைப்பிடுகிறது என்றால், வரலாற்றில் என்ன இடம் என்பதை உணர முடிகிறது.

nkn240519
இதையும் படியுங்கள்
Subscribe