பி.மணி, குப்பம், ஆந்திரா
மே 23-ந் தேதி எப்படிப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என மாவலியின் மனது நினைக்கிறது?
ஜனநாயகத்திற்கு உயிரோட்டம் கிடைக்கும் நாளாக உதயமாக வேண்டும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கிறது.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
சென்னை அணி தோற்றது யாரால், மும்பை அணி வென்றது யாரால்?
ஐ.பி.எல். கிரிக்கெட் என்பது கார்ப்பரேட் பணக்காரர்கள் ஆடும் பல்லாங்குழி ஆட்டம். சென்னை அணி எனப்படும் சி.எஸ்.கே. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் பணபலத்தைக் காட்டுவது. மும்பை அணி எனப்படும் எம்.ஐ. ரிலையன்ஸ் அம்பானியின் பணபலத்தைக் காட்டுவது. இரண்டு அணியிலும் ஆடுபவர்கள் தங்கள் ஏலத்தொகைக்கேற்ப ஆட்டத்தின் பலத்தைக் காட்டுகிறார்கள். ஆனாலும், இறுதிப் போட்டிக்கு எந்த அணி வரவேண்டும் என்பதுவரை எல்லாவற்றிலும் ஒரு கணக்கு உண்டு. அதை மீறி, இந்த முறை ஒரு ரன்னில் சென்னை அணி தோற்றதும் மும்பை அணி வென்றதும் இந்த கணக்குகளை அறியாத கிரிக்கெட் ரசிகர்களிடம் உணர்வுப்பூர
பி.மணி, குப்பம், ஆந்திரா
மே 23-ந் தேதி எப்படிப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என மாவலியின் மனது நினைக்கிறது?
ஜனநாயகத்திற்கு உயிரோட்டம் கிடைக்கும் நாளாக உதயமாக வேண்டும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கிறது.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
சென்னை அணி தோற்றது யாரால், மும்பை அணி வென்றது யாரால்?
ஐ.பி.எல். கிரிக்கெட் என்பது கார்ப்பரேட் பணக்காரர்கள் ஆடும் பல்லாங்குழி ஆட்டம். சென்னை அணி எனப்படும் சி.எஸ்.கே. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் பணபலத்தைக் காட்டுவது. மும்பை அணி எனப்படும் எம்.ஐ. ரிலையன்ஸ் அம்பானியின் பணபலத்தைக் காட்டுவது. இரண்டு அணியிலும் ஆடுபவர்கள் தங்கள் ஏலத்தொகைக்கேற்ப ஆட்டத்தின் பலத்தைக் காட்டுகிறார்கள். ஆனாலும், இறுதிப் போட்டிக்கு எந்த அணி வரவேண்டும் என்பதுவரை எல்லாவற்றிலும் ஒரு கணக்கு உண்டு. அதை மீறி, இந்த முறை ஒரு ரன்னில் சென்னை அணி தோற்றதும் மும்பை அணி வென்றதும் இந்த கணக்குகளை அறியாத கிரிக்கெட் ரசிகர்களிடம் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
மணிமேகலை நாயகன், வேலூர்
"அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்' என்கிறாரே ஓ.பி.எஸ்.?
தம் மக்கள் எனத் திருத்தி வாசிக்கவும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
நடிகைகள் ஷூட்டிங்கில் பயன்படுத்தும் கேரவனுக்கும், தலைவர்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வேனுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுமே தங்களின் ஃபெர்பார்மன்ஸைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் சகல வசதிகளும் கொண்ட வாகனங்கள். கேரவனுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பாதுகாப்பது மார்க்கெட் ரகசியம். பிரச்சார வேனுக்குள் நடக்கும் சில மறைக்கப்படுவதும், சில திட்டமிட்டே வெளிப்படுத்தப்படுவதும் ஓட்டு சேகரிப்பிற்கான வியூகம். இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துபவர்களும் மக்களைக் கவர மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள்.
கௌசிக், திண்டுக்கல்
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா, இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறாரே?
பொதுவாழ்வில் போராட்டங்களை சந்தித்த பெண் தலைவர்கள் உண்டு. போராட்டமே பொதுவாழ்வு என்பது இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையாக அமைந்தது. மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த சிறப்பு ராணுவச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் அவர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் ஆட்சியாளர்களை உலுக்கினாலும், தேர்தல் அரசியலில் இரோம் ஷர்மிளாவுக்கு படுதோல்விதான். டெபாசிட்கூட தேறவில்லை. அத்துடன் அவரது காதல் வாழ்க்கைகூட அந்த மண்ணில் சர்ச்சையான நிலையில், காதலருடன் தமிழ்நாட்டிற்கு வந்தார். திருமணம் செய்துகொண்டார். அமைதியான இல்லற வாழ்வை மேற்கொண்டார். அதற்கு அன்னையர் தினத்தில் கிடைத்துள்ள பரிசு, இரட்டைக் குழந்தைகள். 46 வயதில் தாயாவதும் பொதுவாழ்வைப் போலத்தான்! வலியும் இன்பமும் கலந்தே இருக்கும் என்பதை இரோம் ஷர்மிளா உணர்ந்திருப்பார்.
நித்திலா, தேவதானப்பட்டி
"தி.மு.க.வை ஒழிப்பதுதான் என் முதல் வேலை' என்கிறாரே சீமான்?
இன்னொரு கட்சியை ஒழிப்பதைவிட தன் கட்சியை வளர்ப்பதுதான் தலைமைப் பண்பு.
____________
காந்தி தேசம்
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என்று எந்த அடிப்படையில் கமல் சொன்னார்?
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பாகிஸ்தான் என்ற புதிய நாடும் உருவானது. இந்தப் பிரிவினையால் ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தன. இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் பலரும், பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் பலரும் தாக்கப்பட்டனர். இது மதரீதியான உணர்ச்சியால் ஏற்பட்ட கொடூர வன்முறை. அதைத் தணிக்க காந்தி முயற்சித்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர உணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை இந்துத்வா சக்திகள் விரும்பவில்லை. "இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடட்டும். அந்த நாடு முஸ்லிம் நாடு என்றால், இந்தியா இந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தின. காந்தி அதனை ஏற்கவில்லை. "இந்தியா என்பது இந்துக்கள் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து மதத்தினருக்குமான நாடு' என்றார்.
காந்தியின் நிலைப்பாடு, இந்துத்வா சக்திகளுக்கு எரிச்சலைத் தந்தது. காந்தியின் கதையை முடிக்க ஓர் அணி தயாரானது. இந்து மகா சபையின் முன்னாள் உறுப்பினரைக் கொண்டு அதனை நிறைவேற்றத் திட்டமிட்டனர். இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியில் பயிற்சி எடுத்தவன், 1948 ஜனவரி 30-ந் தேதி மாலையில் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்த காந்தியை சுட்டுக் கொன்றான்.
சுற்றியிருந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த அவன் ஒரு முஸ்லிம் என்றுதான் முதலில் தகவல் பரவியது. கையில், முஸ்லிம் பெயரை பச்சைக் குத்தியிருந்ததாகவும் தகவல் வந்தது. ஆனால், அப்போதைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனும், பிரதமர் நேருவும்தான், காந்தியைக் கொன்றவன் முஸ்லிம் அல்ல, அவன் இந்து மதத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பதை வெளிப்படுத்தினர். சுதந்திர இந்தியாவில் திட்டமிட்டு குறி வைத்த முதல் தீவிரவாத செயல், காந்தி படுகொலை. இதில் கோட்சேவின் மதத்தைவிட, மதவாதக் கொள்கைதான் முதன்மையானது. அது எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் ஆபத்துதான்.