Skip to main content

மாவலி பதில்கள்

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

அரசு தலைமைச் செயலகங்களில் தேர்தல் முடிவுக்கு முன்பே திடீர் திடீரென்று தீப்பற்றுவது ஏன்?

அடிவயிற்றில் பயநெருப்பு எரிந் தால் அது அரசு அலுவலகங்களில் தீ விபத்தாக மாறும். அல் லது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்குள் அதிகாரிகளை ரகசியமாக நுழைக்கும்.

m


கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

கஜா புயல் நேரத்தில் தமிழ்நாட்டின் எடப்பாடி அரசு, ஃபானி புயல் நேரத்தில் ஒடிசாவின் நவீன் பட்நாயக் அரசு- ஒப்பிடுக.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறி விப்புகளை எடப்பாடி அரசின் அமைச் சரே விடிய விடிய முன்னின்று வழங்கி னார். ஆனால், புயல் பாதுகாப்பு நடவடிக் கைகளில் போதிய கவனம் செலுத்தப்பட வில்லை. அதனால், நாகையில் தொடங்கி கொடைக் கானல்வரை சுழன்றடித்த சூறாவளி ஏற்படுத்திய கொடூ ரத் தாக்கத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. மக்களின் கோபத்தால் மாவட்ட அமைச்சர் தெறித்து ஓடவேண்டியிருந்தது. முதல்வரும் துணைமுதல்வரும் நேரில் வராமல் ஹெலிகாப்டரில் பறக்கவேண்டியிருந்தது. ஒடிசாவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என இங்குள்ள ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அங்கும் நிலைமை சீராக இல்லை. பூரி பகுதி யில் உள்ள மக்கள் தங்களுக்கு உணவு இல்லை, தண்ணீர் இல்லை எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். நவீன் பட்நாயக் அரசின் அலட்சியப் போக்குகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. புயல், சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை எந்த மாநில அரசும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் துயரத்தில் பங்கேற்கும் வகையில், மத்திய அரசின் நிதியுதவி அவசியம். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வராத பிரதமர் மோடி, ஃபானி புயல் வீசி முடித்த கொஞ்ச நேரத்தில் அங்கே பறந்து சென்றது, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் அப்பட்டமான போக்கை அம்பலப்படுத்தியது.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமையாததற்கு மூல காரணம் யார்?

மாநிலத்திற்குத் தகுந்தவாறு பா.ஜ.க. வகுத்த வியூகமும், மாநில அளவில் கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு உள்ள பலவீனமும்.கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77

மம்தா கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிறார் மோடி. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 40 பேர் அ.தி. மு.கவுக்கு ஆதரவு என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்த ஒற்றுமை குறித்து?

மோடியை "டாடி' என்றவர் ராஜேந்திர பாலாஜி. அதனால் "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பதுபோல, டாடி சொன்ன தையே, தமிழ்நாட்டுக்குத் தகுந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அது மட்டுமா? இந்தி படிக்கவிடாமல் தி.மு.க. தடுத்ததால்தான் ரயில்வே யில் தமிழர்களுக்குப் பதில் வடநாட்டவர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் என்று தாய்மொழி குறித்த அடிப்படை அறிவே இல்லாமல் உளறியிருக் கிறார். இவர்களையெல்லாம் மந்திரியாக்கிய ஜெயலலிதாவை நிர்வாகத்திறன் வாய்ந்த "இரும்புப் பெண்மணி' என்கிறோம்.

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை

நடிகர் யோகிபாபு நடிப்பில் "தர்மபிரபு' என்ற படம் வருகிறதே?

எம"தர்மபிரபு'வாக நடிகர் திலகம் சிவாஜி முதல் கவுண்டமணிவரை பலரும் நடித்திருக்கிறார்கள். இப்போது யோகிபாபுவுக்கு யோகம். இளம் இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தர்மபிரபு டீசர், யோகிபாபுவின் திறமையைக் காட்டுகிறது.பி.மணி, வெள்ளக்கோவில்

மது, மாது, பணம், பதவி, ஆசை இவற்றில் எது மனிதனை அதிகம் சீரழிக்கிறது?

ஆசையின் விளைவுதான் மற்ற அத்தனைக்கும் ஆசைப்படுவதும், அதனால் விளையும் சீரழிவுகளும்.

--------------------------
காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மகாத்மா காந்தியின் நவகாளி யாத்திரையின் போது தமிழ்நாட்டு பத்திரிகையாளர் சாவி உடன் சென்றாரா?
mm
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உச்சத்தை எட்டிய நிலையில், தற்போதைய பங்களாதேஷில் (அன்றைய வங்காளம்) இந்துக்கள் அதிகமாக வசித்த பகுதிகளில் முஸ்லிம்களின் தாக்குதல் அதிகமானது. அதன் எதிரொலியாக, முஸ்லிம்கள் உள்ள பிற பகுதிகளில் இந்துக்கள் தாக்குதலைத் தொடங்கினர். இந்த மோதல்களைக் கண்டு கவலையடைந்த காந்தி, நவகாளி என்ற இடத்திற்குச் சென்று, பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்களை சந்தித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அமைதிக்கு விதையிட்டார். அப்போது, சின்ன அண்ணாமலை என்பவர் நடத்திய "வெள்ளிமணி' பத்திரிகைக்காக நவகாளிக்கு சாவி நேரில் சென்றார். காந்தியின் போராட்ட முறையையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நேரடியாகப் பார்த்து பதிவு செய்தார்.

""சாவி இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்தபோதிலும் பலகணி வழியாகப் பார்ப்பதுபோல பார்த்து, மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்டமிட்டு எழுதியிருக்கிறார். வெகுரசமாகவும் எழுதியிருக்கிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல, வெறும் பிரயாணக் கட்டுரை களும் அல்ல. சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள், காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத் தையும் எல்லோரும் அறிய தெளிவாக்கித்தரும் கட்டுரைகள். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் சாவி சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார்'' என்று எழுத்தாளர் கல்கி இரா.கிருஷ்ண மூர்த்தி 20-2-1948 அன்று சாவியின் பயணம் குறித்துப் பதிவு செய்திருப்பதிலிருந்து, அந்தப் பயணத்தினைப் புரிந்து கொள்ள முடியும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...
 
×