Advertisment

மாவலி பதில்கள் 31.12.25

mavali


மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"தகுதியற்றவர்கள் தமிழ்நாட்டை ஆள் கிறார்கள்' என்கிறாரே ஹெச்.ராஜா?

என்ன தகுதி வேண்டுமாம்? நீதிமன்ற மாவது... கேசமாவது எனப் பேசும் துணிச்ச லா? ஆர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் சொல்வதற் கெல்லாம் தலையாட்டும் தகுதியா? நாட்டை ஆள் வதற்கான தகுதி, தேர்தலில் போதுமான தொகுதிகளில் மக்கள் வாக்கைப் பெரும்பான் மையாகப் பெற்று ஆட்சிக்கு வருவதுதான். அதையும் தாண்டி பல தகுதிகளை தற்போ தைய தமிழக அரசு பெற்றிருக்கிறது.

Advertisment

mavali1

எஸ்.இளையவன், சென்னை

தனது உரையை திரித்து வெளியிட்ட பி.பி.சிக்கு எதிராக ட்ரம்ப் 90,000 கோடி இழப் பீடு கேட்டுள்ளாரே?

Advertisment

ட்ரம்போ, ஜெயலலிதாவோ, மோடியோ, அரசியல்வாதிகள் யாராயிருந்தாலும் பத்திரிகைகள் உண்மையைப் பேசுவதையும், தைரியமாகக் குரல் கொடுப்பதையும் விரும்புவதில்லை. அதுமாதிரி சமயங்களில் வழக்க


மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"தகுதியற்றவர்கள் தமிழ்நாட்டை ஆள் கிறார்கள்' என்கிறாரே ஹெச்.ராஜா?

என்ன தகுதி வேண்டுமாம்? நீதிமன்ற மாவது... கேசமாவது எனப் பேசும் துணிச்ச லா? ஆர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் சொல்வதற் கெல்லாம் தலையாட்டும் தகுதியா? நாட்டை ஆள் வதற்கான தகுதி, தேர்தலில் போதுமான தொகுதிகளில் மக்கள் வாக்கைப் பெரும்பான் மையாகப் பெற்று ஆட்சிக்கு வருவதுதான். அதையும் தாண்டி பல தகுதிகளை தற்போ தைய தமிழக அரசு பெற்றிருக்கிறது.

Advertisment

mavali1

எஸ்.இளையவன், சென்னை

தனது உரையை திரித்து வெளியிட்ட பி.பி.சிக்கு எதிராக ட்ரம்ப் 90,000 கோடி இழப் பீடு கேட்டுள்ளாரே?

Advertisment

ட்ரம்போ, ஜெயலலிதாவோ, மோடியோ, அரசியல்வாதிகள் யாராயிருந்தாலும் பத்திரிகைகள் உண்மையைப் பேசுவதையும், தைரியமாகக் குரல் கொடுப்பதையும் விரும்புவதில்லை. அதுமாதிரி சமயங்களில் வழக்கு, நஷ்டஈடு என தரைமட்ட லெவலுக்கு இறங்கிவிடு கிறார்கள். அரசியல்வாதிகளின் கால் எப்போதும், பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை அழுத்திக் கொண்டிருப்பதைத்தான் விரும்புகிறது.

ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

களத்தில் தி.மு.க. மட்டும்தான் இருப்பதாக விஜய் கருதுவது சரியா?

அது ஒரு யுக்தி. தாங்கள் மட்டுமே வலுவாக இருப்பதாகக் காட்டி மக்களை ஏய்ப்பது. 30 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. களத்தில் இல்லை யாம். இவர்கள் மட்டும்தான் களத்தில் இருக்கிறார் களாம். தான் என்ற அகந்தை கொண்டவர்களுக்கு காலம் சரியான பாடம் புகட்டாமல் விடுவதில்லை.

எச்.மோகன், மன்னார்குடி

கனவுகளை விற்பனை செய்வது சாத்தியமாகுமா?

இன்றைக்கு சந்தையில் விற்பனையாகும் ஒவ் வொரு கண்டுபிடிப்பும், ஒவ்வொரு அறிவியலாளரின் கற்பனையில் இருந்ததுதான். அதேபோல பொற்காலம் தருவோம் என வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனது கனவுகளைத்தான், மக்களிடம் விற்பனை செய்கிறான். கனவுகளை விற்பனை செய்வதுதான் உலகின் மிகப்பெரும் லாபகரமான தொழில்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

நடிகைகளிடம் ரசிகர்கள் அத்துமீறும் செயல் அதிகரித்து வருவது பற்றி?

நடிகர், நடிகை இருவரைப் பார்த்தாலும் ரசிகர் கள் அத்துமீறுவது வாடிக்கையாக நடப்பதுதான். அதேசமயம், நடிகைகள் எனில் அந்த ரசிகர்களில் பலர் பொறுக்கிகளாகவும் மாறிவிடுகிறார்கள். அதனால் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் வரும்போது, அவர்கள் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும்.

சிவா, கல்லிடைக்குறிச்சி 

ஆந்திராவில் 50 சதவீத மக்கள் அதிருப்தியில் இருப்ப தாக நாயுடு வருத்தம் தெரிவித்திருப்பது பற்றி?

"மக்கள் எங்களைப் பற்றி மகிழ்ச்சியாக இல்லை' என சந்திரபாபு நாயுடுவே வருத்தம் தெரிவித்திருப்ப துடன், நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களும், தம் கட்சியினரும் இன்னும் சிறப்பாகச் செயல்படவேண்டும் என அழுத்தம் தந்திருக்கிறார். வெறும் வார்த்தைச் செயல்பாடாக இல்லா மல், உண்மையிலே செயல்பட்டார் எனில் மக்களுக்கும் நல்லது, தேர்தல் வரும்போது சந்திரபாபு நாயுடுவுக் கும் நல்லது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

ஒருபுறம் கிறிஸ்துமஸ், சமூக நல்லிணக்கத் தை உண்டாக்கும் என்று கூறுகிறார் மோடி, மறுபுறத்தில் கிறிஸ்துவர்கள்மீது தாக்குதல் நடைபெறுகிறதே...?

இதுமாதிரியான செயல்களைக் குறிப்பிடத் தான் தமிழில் "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை யும் ஆட்டிவிடுவது' என்றொரு பழமொழி இருக்கிறது.

க.முருகேசன், மேல்மருவத்தூர்

த.வெ.க. தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாரே?

தவறான அணுகுமுறை. விஜய் செய்தது சரியோ தவறோ, தன்னை ஒதுக்கியவர்கள் முன்பு கம்பீரமாக வாழ்ந்துகாட்டுவதுதான் சரியான அணுகு முறை. அதை அதே கட்சியிலிருந்தும் செய்துகாட்ட லாம், இல்லை மிகுந்த மன வருத்தமிருந்தால் வேறு கட்சிக்குப் போய், தன்னைத் தவறவிட்டது எத்தனை தவறான அணுகுமுறையென்றும் நிரூபிக்கலாம். தற்கொலையால் எதுவும் நடக்கப்போவதில்லை.

ஆர்.ஜெயந்தி, புதுக்கோட்டை

ஒரு சுவாரசியமான அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிச் சொல்லுங்களேன்?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய தாவரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் இலைகள்... சூரிய ஒளி, நீர், கார்பன்-டை- ஆக்சைடைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் அது தயாரிப்பது ஒருவகை எரிபொருள். பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். நிலத்திலும் நீரிலும் பயிரிடலாம். இப்போது கண்டுபிடிப்பு ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறதாம். இதே ரேஞ்சில் போனால் எண்ணெய்க் கிணறு வைத்து பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் வயிற்றில் அடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே.

nkn311225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe