அ.ராஜாரகுமான், கம்பம்
தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்பதில் எடப்பாடி பழனிசாமி அவ்வளவு உறுதியாக உள்ளாரே?
பீகாரில் ஒருங்கிணைந்த ஜனதா தளமும், பா.ஜ.க.வும் நீண்ட காலம் கூட்டணியில் இருக்கின்றன. 2015 தேர்தலில் 115 தொகுதிகளை வென்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம், 2020 தேர்தலில் வெறும் 43 இடங்களை மட்டுமே வென்றது. மாறாக, பா.ஜ.க. 74 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்தால் பா.ஜ.க. ஆட்சியில் அமரும், துணை முதல்வர்போல பா.ஜ.க தரும் ஏதோ பதவியை வாங்கிவிட்டு ஜனதா தளம் கைகட்டி நிற்கவேண்டியதுதான். மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த சிவசேனா கட்சியே இரண்டாகிவிட்டது. தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணிகூட வைக்கவில்லை. ஆனால் தெலுங்
அ.ராஜாரகுமான், கம்பம்
தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்பதில் எடப்பாடி பழனிசாமி அவ்வளவு உறுதியாக உள்ளாரே?
பீகாரில் ஒருங்கிணைந்த ஜனதா தளமும், பா.ஜ.க.வும் நீண்ட காலம் கூட்டணியில் இருக்கின்றன. 2015 தேர்தலில் 115 தொகுதிகளை வென்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம், 2020 தேர்தலில் வெறும் 43 இடங்களை மட்டுமே வென்றது. மாறாக, பா.ஜ.க. 74 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்தால் பா.ஜ.க. ஆட்சியில் அமரும், துணை முதல்வர்போல பா.ஜ.க தரும் ஏதோ பதவியை வாங்கிவிட்டு ஜனதா தளம் கைகட்டி நிற்கவேண்டியதுதான். மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த சிவசேனா கட்சியே இரண்டாகிவிட்டது. தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணிகூட வைக்கவில்லை. ஆனால் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை, பா.ஜ.க.வுடன் இணைக்க நெருக்கடி வருவதாக சந்திரசேகர ராவின் மகள் குற்றம்சாட்டுகிறார். எடப்பாடி பழனிசாமி மட்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து முதல்வராகக் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறார். “"லட்டுல வெச்சேன்னு நினைச்சியா... நட்டுல வெச்சேன்'னு ஒரு டயலாக்கை எடப்பாடி சீக்கிரமே கேட்பார்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
காதல் திருமணம் செய் வோர் கமலாலயம் வரலாம் என அழைப்பு விடுத்துள்ளாரே பா.ஜ. மு. மா.த.?
பிடித்துவைத்து, ஆணவக் கொலை செய்வோரின் கைகளில் ஒப்படைத்து சேவை செய்வோம் எனச் சொல்கிறார்போல.
க.அருச்சுனன், செங்கல்பட்டு
தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்தாலே எண்ணிக் கை ஒரு ஆண்டில் மிகக் குறைந்து விடும், ஏன் அரசு கண்டு கொள்வதில்லை?
அது சரிதான். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக்கொண் டால் எத்தனை லட்சம் தெருநாய்கள் இருக்கிறதோ. இவையனைத் தையும் பிடித்து கருத்தடை செய்ய எத்தனை ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள், எத்தனை கோடி பணம் தேவைப்படும்... அங்கேயிருக்கிறது சிக்கல்!
க.இசக்கிராஜா, கோவில்பட்டி
சுதந்திரம் தேவையெனில் திருமணமே செய்திருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்வது சரிதானா...?
ஆணோ, பெண்ணோ திருமணம் செய்துகொள்வது என்பது பொறுப்பேற்றுக் கொள்வதாகும். பதின்பருவத்தில் பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிச் செலவழித்து இருந்ததுபோல இருக்கமுடியாது. நீங்களே ஒரு குடும்பத்தின் தலைவராக ஆகிறீர்கள். புதிய பொறுப்புகள் வருகின்றன. அப்போதும் சுதந்திரம் என்ற பெயரில் விட்டேத்தியாய் இருந்துவிட்டு திருமணத்தில் சுதந்திரமில்லை என்று நீதிமன்றத்துக்கு வரக்கூடாது. அனைத்தையும் யோசித்து திருமணம் மேற்கொள்ளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கலாம்.
வாசுதேவன், பெங்களூரு
ஆறு மொழிகள் அறிந்த கமல், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளாரே..?
ஆறு மொழிகள் தெரியாவிட்டாலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றச் சொல்வதில் தவறில்லை. ஒன்றிய அரசு நீக்கும், சேர்க்கும் பாடத்திட்டங்களைப் பார்த்தால் கல்வி மாநில அரசின்வசம் இருப்பதுதான் சிறப்பானதெனப்படுகிறது.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
அமெரிக்காவிற்கான குறிப்பிட்ட சில அஞ்சல் சேவைகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளதே..?
இந்தியாவின் மீதான 50% வரிவிதிப்புக்கு எதிராக அமெரிக்கா வுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக் குத்தான், இந்தியாவிலிருந்து அஞ்சல் சேவை தேவை. பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு அது தேவைப்படாது. ஆக, அமெரிக்காவின் வரி விதிப்புக்காக, இந்தியர்களையே தண்டிக்கலாமா? தவிரவும், சமீபத்தில் பதிவுத் தபால் சேவையை இந்திய அஞ்சல் துறை நிறுத்திவிட்டு, விரைவு அஞ்சல் மட்டுமே நடைமுறையிலிருக்கும் என அறிவித்தது. பதிவு அஞ்சலை எந்த வரிவிதிப்பு காரணமாக இந்தியா நிறுத்தியது?
ஆர். கார்த்திக், கானாத்தூர்
"கூலி' படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு 2 கோடி சம்பளமாமே?
இருக்கட்டுமே. நானும் நீங்களும் பத்து லட்சத்துக்கு ஆட வருகிறோம் எனச் சொன்னாலும், நம்மை புக் செய்யவா போகிறார்கள்?