த.சத்தியநாராயணன், அயன்புரம்

சிறுபான்மையினரைக் குறிப்பிட்டு துரோகிகள் வாக்குத் தேவையில்லை என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேசியிருப்பது குறித்து?

Advertisment

பீகார் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வேண்டுமா... வேண்டாமா என்பது... அந்தந்த கட்சியின் சௌகரியம். அதற்காக அவர்களைத் துரோகிகள் என்று அழைப்பது அத்துமீறல். இதற்காக பேருக்கா வது இரண்டு நாள் சம்பந்தப் பட்ட அமைச்சரின் பிரச் சாரத்துக்கு தடை விதிக் காதபோதோ, எதிர்ப்புத் தெரிவிக்காதபோதோ தான் தேர்தல் ஆணை யத்தின்மீது சந்தேகம் வருகிறது. சந்தேகமெல்லாம் வேண்டாம், நாங்கள் அரசின் கைப்பிள்ளைகள்தான் என்பது போல தேர்தல் ஆணையம் முரட்டு மௌனத்தில் இருக்கிறது.

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கண்மூடித்தனமான ஆதரவு எது?

உங்களுக்குப் பிரியமானவரோ, வேண்டிய கட்சியோ, அபிமானத்துக்குரிய நடிக- நடிகையரோ தப்பு செய்யும்போது, அதற்கு ஆதரவாக உங்கள் மனதில் எழும் தர்க்கம் தான். கன்றை ஏற்றியது மகனே என்றாலும், பசுவுக்கு நீதி செய்ய மகனைத் தேர்க்காலில் இட்ட மரபில் வந்தவர்கள் நாம் என்ற நினைப்பு இருந்தால் சரிதான். 

எஸ்.இளையவன், சென்னை

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்த தற்காக நார்வேயிலுள்ள தங்கள் நாட்டின் தூதரகத்தை மூடுவதாக அறிவித்துள்ளதே வெனிசுலா?

Advertisment

வெனிசுலாவின் ஆட்சியிலுள்ளவர் களை எதிர்த்துத்தான் மரியா போராடுகிறார். ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை இப்படி அற்பத்தனமாக வெளிக்காட்டுகிறார்கள்.

வண்ணை கணேசன், கொளத்தூர் 

டெல்லிக்கு இந்திரபிரஸ்தா என பெயர் மாற்றவேண்டுமென விஸ்வஇந்து பரிஷத் கோரிக்கை வைத்துள்ளதே?

டெல்லிக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயர்கள் இருந்துள்ளன. பாண்டவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தமும், துரியோதனனின் நகரான அஸ்தினாபுரமும் டெல்லிதான் என்பவர்கள் உண்டு. இதுபோக வரலாற்றுக் காலகட்டத்தில் யோகினிபுரா, லால்கோட், கிலா ராய் பித்தோரா, மெஹ்ராலி, துக்ளக்காபாத் என பல பெயர்கள் உண்டு. இந்திரப்பிரஸ்தம் என்றால் இந்திரனின் நகரம் எனப் பொருள். எப்போதும் குடித்துக்கொண்டும் காமக் களியாட்டத்திலும், போரிலும் இருக்கும் நகரம் என்பது டெல்லிக்குப் பொருத்தமாகவா இருக்கிறது?

mavali1

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப் பட்டுள்ளாரே?

தீபிகாவின் அழகைப் பார்த்து எத்தனையோ பேர் மனநலம் பிசகும்போது, அவரை எப்படி இந்தியாவின் மனநல தூதராக நியமிக்கலாம் என எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்களா? அல்லது இப்படியொரு அழகுத் தூதரைப் பார்த்து மனநலம் பிசக இருப்பவர்கள் கூட தெளிவாகிக் குணமாகிவிடுவார்கள் என்கிறீர்களா?

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

வெடிகுண்டு புரளி கலாச்சாரம் அதிகரித்து வருகிறதே?

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இத்தனை புரளிகளைக் கிளப்புகிறவனைத் தூக்கி உள்ளே வைத்திருக்க வேண்டாமா? சைபர் க்ரைம் போலீசாரை விட, மிரட்டல் விடு கிறவர்கள் தொழில்நுட்பத்தில் ஓங்கியிருக் கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

ஆர். ஹரிகோபி, புது டெல்லி

மதுவை அறிந்திராத ஒரு தமிழ் சமுதா யத்தை உருவாக்க எந்த அரசியல் கட்சியாவது முன்வருமா?

எல்லா கட்சியும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது முன்வரும். ஆளுங்கட்சியானதும் பின்வாங்கி விடும். தவிரவும், இந்தியாவில் எந்த மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருக்கிறது என்று கூறுங்கள். மதுவிலக்கு இருப்பதாகச் சொல்லப்படும் குஜராத்தில், ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது டெலிவரி கிடைக்கும் என்கிறார்கள். மாநிலங்களின் வருவாய்த் தேவையை ஈடுசெய்யும் அட்சயபாத்திரம் மது விற்பனை வருவாய்தான். வேண்டிய மாநிலங்களுக்கு அள்ளியும், வேண்டாத மாநிலங்களுக்கு கிள்ளியும் கொடுக்கும் ஒன்றிய அரசு இருக்கும்போது மதுவிலக்கு சாத்தியமில்லை. 

ப. ரவிக்குமார், கோவை

அடேங்கப்பா உதாரணம் ஒண்ணு சொல்லமுடியுமா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு ஆய்வுநடத்தி அதனோட முடிவை வெளி யிட்டிருந்துச்சு. எந்தக் கட்சியில வாரிசு அரசியல் அதிகம்கிறது ஆய்வோட கருப்பொருள். எப்பவும் காங்கிரஸை வாரிசு அரசியல் கட்சின்னு மட்டம் தட்டுற பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்வாதிகள் 387 பேர், காங்கிரஸில் வாரிசு அரசியல்வாதிகள் 285 பேர்தான்னு அந்த ஆய்வில் தெரிய வந்துருக்கு. தேர்தல் நிதி வசூலில்தான் பா.ஜ.க. முதலிடம்னு பார்த்தா, வாரிசு அரசியலிலும் முதலிடம். அடேங்கப்பா, காங்கிரஸே தேவலாம்போல இருக்கேன்னு ஒருநிமிஷம் தோணவைச்சுடுச்சு.