கே.ராமதாஸ், ராஜபாளையம்
ரஜினி- கமல் சேர்ந்து நடிக்க என்னிடம் அருமையான கதையிருக் கிறது. என்னை அவர்களிடம் அழைத்துப்போவீரா?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/mavali1-2026-02-27-10-45-10.jpg)
நல்லா இருக்கிறதே கதை. ஏற்கெனவே இரண்டொரு வாசகர்கள் ராஷ்மிகா- தேவரகொண்டா கல்யா ணத்தில் பங்கேற்க அனுமதி வாங்கித் தரமுடியுமா என்று கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள். நீங்கள் ஆச்சு, கோடம்பாக்கம் ஆச்சு. ஒருவேளை நெல்சன் இன்னும் ஒருவரிக் கதையுடன் போராடிக்கொண்டிருக்க வாய்ப்பிருக் கிறது. நேராக நெல்சனைப் பிடித்து அவரது காதை கடித்துப் பாருங்கள். சான்ஸ் கிடைக்கலாம்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
இந்தியாதான் அமெரிக்காவுக்கு வரி செலுத்தும். அமெரிக்கா இந்தியா வுக்கு வரி செலுத்தாது என்று கூறுகிறாரே ட்ரம்ப்?
அமெரிக்கா சண்டியர் அல்லவா, அதனால் இந்திய பிரதமர் வாய்திறக்க மறுக்கிறார். தற்போதைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதலாக வந்துள்ளது. தொட்டதற்கெல்லாம் 56 இஞ்ச் மார்பு என தைரியத்தைப் பற்றிப் பாடம் நடத்தும் பா.ஜ.க. அமெரிக்கா, சீனா என்றால் பஞ்சாரத்துக்குள் பதுங்கிக்கொள்கிறது.
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
தி.மு.க.வை சீண்டாமல் விஜய்க்கு பொதுக்கூட்டத்தில் பேசத்தெரியாதா?
ஆட்சியிலிருக்கும் கட்சி தி.மு.க. காய்த்த மரம்தான் கல்லடி படும்! தவிரவும் பா.ஜ.க.வைப் பேசப் போய் ஜனநாயகனுக்கான தணிக்கையில் மறுபடியும் சிக்கல் வந்தால் என்ன செய்வது?. விஜய்க்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருப்பவர்களைப் பாருங்கள்... ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்குமார், இவர்கள் வேறு யோசனை சொல்லித் தருவார்கள் என நினைக்கிறீர்களா என்ன?
கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.
தமிழகத்தில் புதிய கட்சி தொடங்குவது, காபி சாப்பிடுவதுபோல அதிகரித்துவிட்டதே?
தொடங்கிவிட்டுப் போகிறார்கள். நமக்கென்ன நஷ்டம்! சொல்லப்போனால், புதிய கொடி, கொடிக்கம்பம் தயாரிக்கவேண்டிவரும். துணிக்கடை, இரும்புக்கடை, தையற்கடைக்காரர்களுக்கு வரும்படி வரும். பொதுக்கூட்டம், மாநாடு நடத்தினால் சவுண்ட் சிஸ்டம், நாற்காலி வாடகை விடுபவர்களுக்கும், தனியார் பேருந்து வைத்திருப்பவர்களுக்கும் வரும்படி. கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவு, குவார்ட்டர் போக ஏதோ கொஞ்சம் பேட்டா வரும். மக்கள் நடுவில் கொஞ்சம் காசுப்புழக்கம் அதிகரித்துவிட்டுப் போகட்டுமே!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பகுத்தறிவாளர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டி கள் என்று கூறுகிறாரே சுவாமிநாதன்...?
குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறி வாளர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்பது சுவாமி நாதன் கருத்து. என்ன செய்ய, நிறைய குருக்கள் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். பெண் பித்தர்களாக இருக்கிறார்கள். உலகின் பெருஞ்செல்வம் குவிந்து கிடக்குமிடம் இத்தகைய குருக்களின் மடங்களாகத் தான் இருக்கிறது. ஆசையைத் துறந்துவிட்டேன் என்றபடியே செல்வத்தில் திளைக்கிறார்கள். காமத்தை நுகர்கிறார்கள். கடவுளின் ஸ்தானமும் வேண்டும், மனிதனின் அற்பத்தனத்தையும் விடமாட்டார்கள். பிறகு அவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டு மிராண்டி என்றல்லாமல் எப்படி அழைப்பது?
அன்னூரார், பொன்விழி அன்னூர்
நடிகர் விஜய் வரும் சட்டமன் றத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய எத்தனை நாள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்?
இது விஜய்யின் கால்ஷீட் மேனேஜரைக் கேட்கவேண்டிய கேள்வி. மாவலியைக் கேட்கவேண்டி யது அல்ல. ஆனால் கட்சிக் கூட் டத்துக்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கும் அவர் சினிமாவுக்கு கால்ஷீட் ஒதுக்குவதுபோல அளந்து நேரம் ஒதுக்கி வந்துபோவது, யாரையும் இப்படித்தான் யோசிக்கவைக்கும்!
பி. ஷர்மிளா, திருத்தணி
10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு அமெரிக்கா வில் ஈஷா போட்ட வழக்கு தோல்வியடைந்திருக்கிறதே?
பாதிக்கப்பட்ட குடும்பமும் ஈஷாவில் இருந்த குடும் பம்தான். 20 ஆண்டுகளுக்குப் பிறகு புத்திவந்து அங்கிருந்து வெளியேவந்து தங்களுக்கு ஈஷாவால் நேர்ந்த பாதிப்பை, பண இழப்பை, அவமானங்களை பத்திரி கைகள், பாட்காஸ்ட்டில் வெளிப்படுத்தினர். வழக்குத் தொடர்ந்தனர். உடனே மானநஷ்ட ஈடு வழக்குப் போட்டு முடக்கிவிடலாம் எனப் பார்த்தது ஈஷா. அமெரிக்க கோர்ட் ஈஷாவை மண்டையில் குட்டி வழக்கில் முகாந்திர மிருக்கிறது எனச் சொன்ன துடன், ஈஷாவின் வழக்கால் பாதிக்கப்பட்ட தரப்புக்குச் செலவான தொகையையும் கொடுக்க உத்தரவிட் டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/mavali-2026-02-27-10-44-57.jpg)