எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு
அ.தி.மு.க.வின் வாக்குகள் விஜய்க்கு விழாது என கவுதமி கூறியிருக்கிறாரே?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/27/mavali1-2026-01-27-12-32-37.jpg)
சரியாகத்தான் சொல்லியிருக் கார். அ.தி.மு.க. துணை பிரச்சாரச் செயலாளராக இருந்துகொண்டு, கௌதமி வேறென்ன பதில் சொல் வார் என எதிர்பார்க்கிறீர்கள்?
ப.தூசிமாடன், சங்கரன்கோவில்
ஒரு சினிமா கிசுகிசு ப்ளீஸ்....?
கிசுகிசுவெல்லாம் தெரியாது. ஒரு சினிமா செய்தி வேண்டுமானால் சொல்கிறேன். சமீபத்தில் பாலிவுட் அழகி யான குஷி முகர்ஜியின் ஜாதகக் கட்டத்தில் சனி மோசமான இடத்தில் வந்து உட்கார்ந்து விட்டதுபோல. பல கிரிக்கெட் வீரர்கள் தனக்கு மெசேஜ் அனுப்புவர். அதிலும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் நிறைய அனுப்புவார் என பிராங்க் பண்ணியிருக்கிறார். விஷயம், சூர்யகுமார் கவனத்துக்குப் போக, உடனடி யா
எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு
அ.தி.மு.க.வின் வாக்குகள் விஜய்க்கு விழாது என கவுதமி கூறியிருக்கிறாரே?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/27/mavali1-2026-01-27-12-32-37.jpg)
சரியாகத்தான் சொல்லியிருக் கார். அ.தி.மு.க. துணை பிரச்சாரச் செயலாளராக இருந்துகொண்டு, கௌதமி வேறென்ன பதில் சொல் வார் என எதிர்பார்க்கிறீர்கள்?
ப.தூசிமாடன், சங்கரன்கோவில்
ஒரு சினிமா கிசுகிசு ப்ளீஸ்....?
கிசுகிசுவெல்லாம் தெரியாது. ஒரு சினிமா செய்தி வேண்டுமானால் சொல்கிறேன். சமீபத்தில் பாலிவுட் அழகி யான குஷி முகர்ஜியின் ஜாதகக் கட்டத்தில் சனி மோசமான இடத்தில் வந்து உட்கார்ந்து விட்டதுபோல. பல கிரிக்கெட் வீரர்கள் தனக்கு மெசேஜ் அனுப்புவர். அதிலும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் நிறைய அனுப்புவார் என பிராங்க் பண்ணியிருக்கிறார். விஷயம், சூர்யகுமார் கவனத்துக்குப் போக, உடனடி யாக தன் புகழுக்குக் களங்கம் விளைவித்த தாக குஷி முகர்ஜி மீது வழக்குப் பதிவுசெய்து, களங்கமான புகழுக்கு ஈடாக 100 கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டிருக்கிறார். ஜாலியா பேச றதா நினைச்சு, வேலியில போற ஓணானைப் பிடிச்சு மடியில விட்டுக்கிட்டோமே என திகைத்து நிற்கிறார் குஷி.
கே. வல்லவன், பேரணாம்பட்டு
இறந்த மகன் அக்னிவேஷ் அகர்வாலின் நினை வாக வருமானத்தில் 75% தானம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறாரே அனில் அகர்வால்?
ஒரு நிறுவனத்துக்கு 100 ரூபாய் வருமானம் வந்தால் அதில் 35 அல்லது 40 ரூபாய்தான் லாபமாக இருக்கும். அதிலும் வருமான வரி உள்ளிட்ட வரிகளை அரசுக்குச் செலுத்தியாக வேண்டும். மிச்சமுள்ள பணத்தில் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முதலீடு செய்யவேண்டும். அதனால் வருமானத்தில் 75% அல்ல லாபத்தில் 75% தானம்கூட சாத்தியமில்லை. மகனின் மறைவால் உணர்ச்சிவசப்பட்டு அனில் அகர்வால் பேசியிருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
சத்தீஸ்கரில் 26 லட்சம் கிலோ நெல்லை எலிகள் தின்றதாக புகார் வந்திருக்கிறதே?
தின்றது இரண்டு கால் ஊழல் பெருச்சாளிகளாக இருக்கலாம். எலி மீது பழி சொல்லப்பட்டிருக்கலாம்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
அது யூகமா,… தீர்க்கதரிசனமா,… எதிர் பார்ப்பா,… ஏக்கமா… என்று நமக்குத் தெரியவில்லையே. ஒருவேளை எதிர்காலத்துக்கு தொழிலொன்று கைவசம் இருக்கட்டுமென ஆரூடம் சொல்லிப் பழகுகிறாரோ... என்னவோ?
ஆ.ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
கெடுவான் கேடு நினைப்பான் -என்பதெல்லாம் இப்போதும் சாத்தியம்தானா?
விதைத்ததைத்தான் அறுவடை செய்யமுடியும் என்பது பழமொழி. இப்போதும் நெல் விளைவித்தால் நெல்தானே விளைகிறது. நீங்கள் பிறருக்கு கேடு நினைப்பதென்பதும் ஒரு விதையைப் போன்றதுதான். விதை முளைத்துவர கொஞ்சம் காலமெடுக்கலாம். ஆனால் நிச்சயம் முளைக்கும்.
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என்கிறாரே சுந்தர்பிச்சை?
நிஜம்தான். எந்திரம் உத்தரவிட்டதைத்தான் செய்யும். பகுத்தறியாது. நாலா திக்குகளையும் நோக்கி பரிசீலித்து முடிவெடுக்காது. இன்னொன்று, மனிதனின் உடலுழைப்பு வேலைகளைக் குறைப்பதற்காக எந்திரங்களும் தொழில்நுட்பமும் வந்தது. இன்றைக்கு உடலுழைப்பின்மையே மனிதனின் பிரச் சனையாகிவிட்டது. சிந்தனைக்கு மாற்றாக, ஏ.ஐ.யைப் பயன்படுத்தும் தலைமுறையின் சிந்தனைத் திறனும்கூட பாதிக்கப்படும் சூழல் விரைவில் வரலாம்.
எச்.முருகன், மன்னார்குடி
மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?
நாங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறோம் என்பதுதான் செய்தி. அதற்குமேல் என்ன பேசினோம் என்பதைக் கிளறி வாயைப் பிடுங்கும் கேள்விகளைக் கேட்காதீர்கள் என்பது அதன் அர்த்தம்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளாரே?
ஏற்கெனவே பா.ம.க., அன்புமணி பா.ம.க., ராமதாஸ் பா.ம.க.வாக பிளவுபட்டுக் கிடக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். இப்போது ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை விருதாம்பிகை தொடங்கிவிட்டார். வன்னியர் சமூகம் என்கிற குளம் இருக்கிறது. குளத்தில் அவரவர் சாமர்த்தியத்துக்கேற்ப எவ்வளவு முகர முடியுமோ… அத்தனைக்கு முகர்ந்துகொள்ளட்டும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us