சி. கார்த்திகேயன், சாத்தூர் 

காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளைச் சரிசெய்யும் பணி இன்னும் நிறைய இருப்பதாக பிரதமர் மோடி கூறுவதுபற்றி?

Advertisment

எதைத் தவறு என்கிறார்? காங்கிரஸ் ஆரம்பித்த பொதுத்துறை நிறுவனங்களையா? இப்போதைய அரசு அந்த பொதுத்துறை நிறுவனங்களை குறிப்பிட்ட சதவிகிதம் விற்று விற்று நிதிப்பற்றாக்குறையை சரிசெய்துகொள்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் செய்துதான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து, அந்தச் சட்டத்தையே முடமாக்கிவிட்டது. 

Advertisment

mavali1

வாசுதேவன், பெங்களூரு

அவதார் நெருப்பும், சாம்பலும்..?

அவதார் முதல் பாகம் வரும்போது ஜேம்ஸ் கேமெரூன் நெருப்பாக இருந்தார். மூன்றாம் பாகத்தில் நெருப்பெல்லாம் எரிந்து அவரிடம் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

தூய சக்தி, தீய சக்தி இவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கட்சியும், தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சியும் தூய சக்திகள். பிற எதிர்க் கட்சிகளெல்லாம் தீய சக்திகள். மற்றபடி எது தீய சக்தி, தூய சக்தி என்பதை உங்கள் கொள் கைக்கும், சிந்தனைத் திறனுக் கும் ஏற்ப நீங்கள் முடிவுசெய்து கொள்ள வேண்டியதுதான். 

Advertisment

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்கிறாரே மோகன் பகவத்..?

ஒவ்வொரு படியாய் முன் னேறிவருகிறார்கள். இந்தியா இந்து நாடு என அறிவிக்க அரசியலமைப்பின் அனுமதி தேவையில்லை என்று குரல் கொடுக்கிறார். அது ஆட்சியிலிருப்பவர்களுக்கு கொடுக்கும் சிக்னல். இதை மாற்றமுடியுமெனில், இந்தியா ஜனநாயக நாடு என்பதையும் மேலேயிருப்பவர்களால் மாற்றமுடி யும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் எனப் பெருமைப்படும் முதல்வர் கடனைப் பற்றி பேசுவதில்லையே ஏன்?

எல்லா மாநில அரசுகளும் தங்களுக்குச் சாதகமான விவரங்களையே பேசும். முன்னெடுத்து வைக்கும். 2024 கணக்குப்படி இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாங்கிய கடன்தொகையின் கூடுதல் சுமார் 83.3 லட்சம் கோடி. இதில் தமிழகத்தின் கடன் அளவு 8.3 லட்சம் கோடி. இரண்டாமிடத்தில் உத்தரப்பிர தேசம். வாங்கிய கடன் உருப்படி யாக மாநில வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்படுவதுதான் முக்கியமானது. அதேசமயம் ரிசர்வ் வங்கியின் தகவல்படி, தமிழகத்தின் இவ்வாண்டு பொரு ளாதார வளர்ச்சி இந்தியாவி லேயே முதன்மையாக 16% ஆக வளர்ந்துள்ளது. ஆக, எல்லாம் சரியான திசையில் செல்வதாக நம்பவேண்டியதுதான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஒரே ஆண்டில் ரயில்வே கட்டணம் இருமுறை உயர்த்தப் பட்டுள்ளது என கார்கே கூறியிருக்கிறாரே?

2025 பிறந்ததும் ஜூலை 1, 2025 எக்ஸ்பிரஸ், ஏ.சி., மெயில் போன்ற ட்ரெய்ன்களில் கிலோ மீட்டருக்கு 1-லிருந்து 2 பைசா உயர்த்தப்பட்டது. தற்போது டிசம்பர் 26, முதல் 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்புக்கு 1 பைசாவும், ஏ.சி., மெயில்/எக்ஸ்பிரஸ் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே ஒரேயாண்டில் இரு முறை ரயில் கட்டணத்தை உயர்த்தி சாதனை செய்த புரட்சிக் கட்சியாக பா.ஜ.க. மாறியிருக்கிறது.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்,தேனி

த.மா.க. + கா.ம.க. இணைப்பு யானை பலம் என்று ஜி.கே. வாசன் கூறியிருக்கிறாரே?

வாசனும் தமிழருவி மணிய னும் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக யானைகள் மான நஷ்ட வழக்கா போட்டுவிடப் போகிறது என்ற தைரியம்தான்.

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

ஒவ்வொரு ஆண்டும் போரினால் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளில் அதிக உயிர்கள் பலியாகின்றன என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளாரே?

நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் சாலை விபத்தில் இறப்பதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, உலகிலேயே சாலை விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடும் இந்தியாதான். அதைக் குறைப்பதற்கும் துறை அமைச்சராக அவர்தானே நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அடுத்த ஆண்டு, இதைக் குறைத்துக்காட்டிவிட்டு, அதையும் நாடாளுமன்றத்தில் பேசுவார் என நம்புவோம்.