Advertisment

மாவலி பதில்கள்! 270925

mavali

ப.இசக்கிராஜ், சேலம்.

ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி நடனமாடியது சர்ச்சையாகியுள்ளதே...?

Advertisment

நம் பாரம்பரியத்தில் மரணத்தில் இசை உண்டு (ஒப்பாரி). சில இடங்களில் ஆழியாட்டம் போன்ற நட னங்களும் உண்டு. குடும்பத்தின் மூத்த உறவுகள் மரணிக்கும்போது பட்டாசு வெடித்து, காசுகளை அள்ளி வீசி நடனமாடியபடி சுடுகாட்டுக்குச் செல்வ தும் வழக்கம்தான். இதில் எந்த வழக்கத்தை மீறிவிட் டார் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர்? இருவரும் நடனக் கலைஞர்கள், சங்கர் நகைச் சுவைக் கலைஞரும்கூட. வெளியில் இருப்பவர் களையே இப்படிச் சிரிக்கவைத்த அந்த கலைஞன், தன் சொந்த மனைவியை எப்படி சிரிக்கச் சிரிக்க பார்த்துக்கொண்டிருப் பான். தங்கள் கனவுகளையும், லட்சியங் களையும் பகிர்ந்துகொண்டு, ஒருவருக் கொருவர் துணை நின்ற அந்த ஜோடி யில் ஒருவர் பிரியாவிடை பெற்றுவிட் டார். அவரை இனி என்றைக்கும் மன

ப.இசக்கிராஜ், சேலம்.

ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி நடனமாடியது சர்ச்சையாகியுள்ளதே...?

Advertisment

நம் பாரம்பரியத்தில் மரணத்தில் இசை உண்டு (ஒப்பாரி). சில இடங்களில் ஆழியாட்டம் போன்ற நட னங்களும் உண்டு. குடும்பத்தின் மூத்த உறவுகள் மரணிக்கும்போது பட்டாசு வெடித்து, காசுகளை அள்ளி வீசி நடனமாடியபடி சுடுகாட்டுக்குச் செல்வ தும் வழக்கம்தான். இதில் எந்த வழக்கத்தை மீறிவிட் டார் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர்? இருவரும் நடனக் கலைஞர்கள், சங்கர் நகைச் சுவைக் கலைஞரும்கூட. வெளியில் இருப்பவர் களையே இப்படிச் சிரிக்கவைத்த அந்த கலைஞன், தன் சொந்த மனைவியை எப்படி சிரிக்கச் சிரிக்க பார்த்துக்கொண்டிருப் பான். தங்கள் கனவுகளையும், லட்சியங் களையும் பகிர்ந்துகொண்டு, ஒருவருக் கொருவர் துணை நின்ற அந்த ஜோடி யில் ஒருவர் பிரியாவிடை பெற்றுவிட் டார். அவரை இனி என்றைக்கும் மனைவியால் பார்க்க முடியாது. தன்னை அவருக்குப் பிடிக் கக் காரணமான நடனத் தால், தனது அஞ்சலி யைச் செலுத்துவதுதான் பொருத்தமானது என பிரியங்கா நினைத்தால் அதை தவறெனச் சொல்ல யாருக்கு உரிமையிருக்கிறது? 

Advertisment

mavali1


ஆண்கள் சுடுகாடுவரை ஆடிக்கொண்டுதான் செல்கின்றனர். பெண் என்பதனால் விமர்சனமா? இன்றைக்கு ஆண் வாரிசு இல்லாத பெற்றோருக்கு, பெண்களே இறுதிக் காரியங்கள் வரை செய்ய ஆரம்பித்துவிட்டனர். கோளாறு அந்த நடனத்தில் இல்லை... பார்ப்பவர்களின் எண்ணங்களில்தான் கோளாறு. 

சிவா, கல்லிடைக்குறிச்சி
 

நேபாளத்தைபோல இந்தியாவிலும் கலவரத்தை ஏற்படுத்த ராகுல், இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார் என பா.ஜ.க. கூறுகிறதே?

பா.ஜ.க.வினரின் கூற்றில் இரண்டு பிழையிருக்கிறது. நேபாளத் தில் யாரும் கலவரத்தைத் தூண்டிவிடவில்லை. அங்கிருந்த அரசியல் நிலவரமும், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியும், விமர்சிக்கிறார்களே என்ற எரிச்சலில் சமூக ஊடகங்களுக்குத் தடைவிதித்ததும்தான் இளைஞர்களின் கோபத்துக்கு தூபம்போட்டது. ராகுல் எந்தவிதத்திலும் இளைஞர்களைத் தூண்டிவிடவில்லை. வாக்காளர் பட்டியலில் ஆளும் கட்சிக்கு சௌகரியமாக ஆயிரக்கணக்கில் பேர்கள் சேர்க்கப்பட்டதும் நீக்கப்பட்டதும் எப்படியென தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறார். அதற்கு தேர்தல் ஆணையம் முறையான பதில்களை அளிக்காமலிருக்க, பா.ஜ.க. ஏன் பொங்குகிறது? 


மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பால் மக்கள் கையில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

ஒவ்வொரு குடிமகனும் ஏதோ லட்சக்கணக்கில் ஆதாயமடை யப் போவதுபோல் பிரதமரும் நிதியமைச்சரும் பேசுகிறார்கள். இதையெல்லாம் கணக்குப்போட்டு ஊடகவியலாளர் ரன்விஜய் சிங் சொல்லிவிட்டார். இந்திய மக்கள் ஒரு வருடத்தில் பயன்பெறப் போகும் ஒட்டுமொத்தத் தொகை 2 லட்சம் கோடி. அதை 140 கோடி மக்களுக்குப் பிரித்து, 12 மாதங்களுக்குக் கணக்கிட்டால் ஒருவருக்கு மாதம் 119 ரூபாய் வரும். இந்த 119 ரூபாயைவிட அதிக லாபம் வேண்டுமென்றால் கார், ஃப்ரிட்ஜ், ஆன்ட்ராய்ட் டி.வி. மாதிரி லட்சக்கணக்கில் விலையுள்ள பொருட்கள் வாங்கவேண்டும். லட்சக்கணக்கான ரூபாய் இருந்தால் நான் எதற்கு ஜி.எஸ்.டி.யை நீக்கச் சொல்லி கேட்கப்போகிறேன்?


என். இளங்கோவன், மயிலாடுதுறை.

ஏழு போர்களை நிறுத்தியதால் தனக்கு ஏழு நோபல் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாரே டிரம்ப்..?

தாத்தாவும் பாட்டியும் அடித்துக்கொள்ளாத குறையாய் சண்டை யிட ஆயத்தமாக இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நடுவில் பேரனோ, பேத்தியோ வந்துவிட்டால்,  குழந்தை முன்னால் சண்டை எதற்கு என்று ஒதுங்கிவிடுவார்கள். அதற்காக அந்தக் குழந்தை, தாத்தா -பாட்டி போரை நிறுத்தினேன். நோபல் வேண்டுமெனக் கிளம்பினால் நோபல் கமிட்டியின் நிலை என்னவாகும்?

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை


கூடங்குளத்தைப்போல இந்தியாவில் பெரிய, சிறிய அணு உலைகளை அமைக்கத் தயாராக உள்ளது என்று கூறுகிறதே ரஷ்யா?


ரஷ்யாவுக்கு என்ன அணு உலையைக் கட்டித் தந்து விட்டு காசை வாங்கி பையில் போட்டுக் கொண்டு போய்விடும். அணு உலை வழி மின்சாரம் பெரிய அளவில் வெற்றிகரமாக இல்லை யென விஞ்ஞானிகள் கூறுகிறார் கள். அணுக்கழிவு மேலாண்மை யோ, எந்த நாட்டுக்கும் சிக்க லானது. இந்தியா அணுகுண்டை யும் தயாரித்துவிட்டது. பிறகெதற்கு சும்மா சும்மா அணு நிலையங்களை கட்டிக்கொண்டே செல்ல வேண்டும்?


எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்  

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்பாக்கெட் அடித்துவரு கிறது என்ற அ...மலையின் பேச்சு?

ராமரை வைத்து இந்திய மக்களை மொட்டையடிக்கும் படலம்தான் பா.ஜ.க. ஆட்சி என கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால் இவர் எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வார்.

nkn270925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe