வைரபாலா, மன்னார்குடி

யு-டியூபில் வரும் ரீல்ஸ்கள் மற்றும் ஷார்ட்ஸ்களை மத்திய அரசு தணிக்கை செய்தால் நன்மைபயக்குமே?

Advertisment

அவர்களுக்கு தங்கள் அரசுக்கு எதிராக வரும் செய்தி களையும் யூ டியூப் வீடியோக் களையும் தடைபண்ணவே நேரம் போதவில்லை. அதையும் தாண்டி நேரமிருக்கும்போது கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீது ஏதாவது தேசத்துரோக வழக்கு போட்டு உள்ளே தள்ள முடியுமா எனப் பார்க்கிறார்கள். இடையில் பொதுமக்கள் கிளுகிளு ஷார்ட்ஸ்கள் பார்த்து அரசுக்கு இடையூறு கொடுக் காமல் இருந்தால் சரிதான் என கண்டும்காணாமல் போய்விடு வார்கள்.

mavali1

என். இளங்கோவன், மயிலாடுதுறை. 

ஓய்வுபெறும் காலத்தில் கட்சி தொடங்கிவிட்டு இமா லய சாதனை செய்ததுபோல பேசுகிறார் விஜய் என்று கூறுகிறாரே எடப்பாடியார்?

Advertisment

அரசியலுக்கு வருவதற் கென சரியான வயது என எதுவும் இருக்கிறதா? நாளைக்கு நிலவரம் மாறி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது மாதிரி யான சூழல் கனிந்துவந்தால் எடப்பாடியும் வேறு மாதிரிப் பேசுவார். விஜய்யும் வேறுமாதிரிப் பேசுவார். அப்போது நாமெல்லாம் வடிவேலுவின் பேமஸ் டயலாக்கான, “அது வேறவாய்... இது நாறவாய்” டயலாக்கை நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

சிவா, கல்லிடைக்குறிச்சி 

உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலையை திபெத்தில் சீனா தொடங்கவிருப்பது பற்றி?

மிகப்பெரிய வல்லரசுகளின் பக்கத்தில் அமைந்திருக் கும் குட்டி நாடுகள் துரதிர்ஷ்டம் மிக்கவை. ஒன்று, மாறாத எல்லைப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கவேண்டியிருக்கும். இல்லை மொத்தமாகவே, இதுவும் என் நாட்டின் ஒரு பகுதிதான் என சுருட்டிக்கொண்டு போய்விடுவார்கள். திபெத்தும் அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நாடுதான். அதனால் திபெத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தலாய்லாமாவுக்கு இந்தியா புகலிடமும் ஆதரவும் அளித்துவந்தது. இப்போதிருக்கும் இந்தியத் தலைவர்கள் தங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கிறார்கள். தலாய் லாமா விஷயத்தில்கூட இந்தியாவின் நிலைப்பாடு மாறினாலும் ஆச்சரியமில்லை. எத்தனை மின்னுற்பத்தி ஆனாலென்ன? திபெத்தின் சுதந்திரம் என்கிற வெளிச்சம்போய் வெகுநாளாகிறது.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ஒரு முட்டாள் எப்போது மேதை என்று போற்றப் படுகிறான்?

Advertisment

அரசியலில் உயர்பதவிக்கு வரும்போது, கையில் அளவுகடந்த செல்வம் குவியும்போது, வரம்புகடந்த அதிகாரம் அவன் கையிலிருக்கும்போது, அந்த முட்டாளால் நமக்கு ஆதாயம் இருக்கிறது எனும்போது.

ஆர்.விஜய், திருப்பூர்

ஒரு சினிமா கிசுகிசு?

சினிமா கிசுகிசு என்ன, கேரள நடிகையே சொன்ன கிசுகிசுவைச் சொல்கிறேன். விளம்பரப் படங்கள், 916 குஞ்சூட்டன் படத்தில் நடித்தவர் ரினி ஆன் ஜார்ஜ். இவர் சமீபத்தில் ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னுடன் நட்புடன் பழகிய ஒரு அரசியல் வாதி என்னை ஹோட்டலுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அழைத்தார். எனக்கு மட்டுமில்லை, வேறு பெண்களுக்கும் இப்படி மோசமான எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என ஆள் பெயரைக் குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் புகார் சொன்னார். அரசியல் சம்பந்தப்பட்ட கிசுகிசுவால் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரும் பாலக்காடு எம்.எல். ஏ.வுமான ராகுல் மம்கூடத்தில்தான் அந்த எஸ்.எம்.எஸ். புள்ளி என கேரள மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். பிறகென்ன, கட்சி அவரை கழுத்தைப் பிடித்து பதவியிலிருந்து வெளியே தள்ளியிருக்கிறது.

செ.சிவராமன், புளியரை

திடீரென சீனாவுடன் நெருக்கமான போக்கை இந்தியா கடைப்பிடிக்கிறதோ?

ஆமாம், அமெரிக்கா டேரிஃப் விவ காரத்தில் இந்தியாவை சுளுக்கெடுத்துவருவ தால் நமது பிரதமர் சீனாவுக்குப் பயணம் செய்தார். அதையெடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் அத்தியாவசியமான அரிய வகை கனிமங்களை இந்தியாவுக்கு அளிக்க சீனா இறங்கிவந்திருக்கிறது. இந்தியா- சீனாவுக்கிடையான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வருகிறது. தைவான் விவகாரம், சீனாவின் உள்விவகாரம் என்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர். எல்லாம் சரி, அமெரிக்காவுடன்தான் இந்தியாவின் ஏற்றுமதி அதிகம். சீனாவுக்கு இந்திய ஏற்றுமதி சொற்பம்தான். அந்த இடை வெளியை இந்தியா எப்படி சரிக்கட்டும்?

சி. கார்த்திகேயன், சாத்தூர் 

அமித்ஷா நரித்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது என்கிறாரே ஆர். ராசா?

அதை வரும் சட்டமன்றத் தேர்தலில் அல்லவா பார்க்கவேண்டும்!