சிவா, கல்லிடைக்குறிச்சி
கூட்டணிக்கு விஜய் வந்தாலும் பழனிச்சாமிதான் முதல்வர் என நடிகை கௌதமி கூறியிருக்கிறாரே?
பீகாரில் தேர்தலுக்கு அப்புறம்தான் முதல்வர் யாரென முடிவுசெய்வோம் என் கிறார் அமித்ஷா. தமிழகத்தில் விஜய்யை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள மல்லுக்கட்டுகிறது பா.ஜ.க. பதற்றமிருக்காதா மனிதருக்கு? அதனால் முன்கூட்டியே கௌதமியைவிட்டு குரல்கொடுத்து, தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப் படுத்திக்கொள்கிறார்போல!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு உங்கள் மகள் சென்றால், பெண் பிள்ளைகள் கால்களை பெற்றோர் உடைக்கவேண்டும்' என்று பா.ஜ.க. எக்ஸ் எம்.பி. பிரக்யா தாக்கூர் கூறியுள்ளாரே..?
நியாயமாக இந்த தர்க்கத்தை நீட்டினால், இந்தியாவுக்கு வெளியில் சென்று சம்பாதிப்பவர்களும் அடங்காதவர்கள்தான். கிறித்துவ, முஸ்லிம் நாட்டில் போய் சம்பாதித்த காசில் இந்தியா செலவு பண்ணவேண்டுமா? வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்து அனுப்புபவர்களின் காசை பாவக்காசு என்று இந்தியா வேண்டாம் என சொல்லிவிடுமா என பிரக்யாவிடம் கேட்கவேண்டும்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதே..?
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில் சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர் பரிந்துரைகளை அளித்து சட்டம் வரட்டும். அதன் நடைமுறைப் பயன்பாடு எப்படியிருக்கிறதென பார்த்துவிட்டு கருத்துத் தெரிவிக்கலாம்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
பாகிஸ்தானை உருவாக்கத் தெரிந்த எங்களுக்கு அதை அழிக்கவும் தெரியும் என ராஜ்நாத்சிங் கூறியிருக் கிறாரே?
பாதி உண்மை என்பது இதுதான். பாகிஸ்தானை உருவாக்கியது சுதந்திர இந்திய அரசு இல்லை. நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர். இரண்டாவது பாகிஸ்தானை அழிக்கவும் முடியும் என போகிறபோக்கில் சொல்கிறார். இந்திய ராணுவம், பாகிஸ்தானை தாக்கவோ, சேதாரம் விளைவிக்கவோ முடியலாம். பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்கும். கூடவே, அந்நாட்டின் கையிலும் அணு ஆயுதமிருக்கிறது. மறைமுகமாக துருக்கி, சீனா போன்ற நாடுகள் அதன் உதவிக்கு வரும். ஏதோ, கரும்பலகையில் எழுதிய எழுத்தை அழிப்பதுபோல் ஒரு நாட்டை அழித்துவிடவெல்லாம் முடியாது. வல்லரசாக இருக்கும் ரஷ்யாவே, உக்ரைன் போரில் சிக்கி தண்ணி குடித்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
நடிகர் ரஜினிகாந்த் இனி வெறும் கமர்ஷியல் படம் மட்டும்தான் போல் தெரிகிறதே?
எப்போது ரஜினிகாந்த் கலைப்படங்களாக நடித்துத் தள்ளினார்? அவர் நடித்த படங்களில் "முள்ளும் மலரும்', "ஜானி', சமீபத்தில் "ஆறிலிருந்து அறுபதுவரை' மாதிரி நடிப்புத் திறனைக் காண்பிப்பதற்கான படங்கள் சிலவும் இருந்தன. மற்றபடி அவர் எப்பவும் சூப்பர் ஸ்டார்தான். கமர்சியல் ஹீரோதான். தயாரிப்பாளர் காசில் சோதனை முயற்சிகள் கூடாதென்பது ரஜினியின் நம்பிக்கை என்பதால், அமிதாப்பச்சன் மாதிரி ரோல்களெல்லாம் ரஜினி முயற்சி செய்வார் என எதிர்பார்ப்பது வீண்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/mavali1-2025-10-23-17-58-41.jpg)
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
மக்கள் நலன் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன?
வரிச்சலுகைகளை கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்காமல் மக்களுக்குக் கொடுப்பது, புதிய சட்டங்கள், நடப்பிலிருக்கும் சட்டங்களுக்கு திருத்தம் என்ற பெயரில் இருக் கும் அடிப்படை உரிமைகளைப் பறித்து சர்வாதிகாரத் துக்கு அடித்தளம் போடாமல் இருப்பது, ஜனநாயகத் துக்கான வாக்குரிமையிலே கைவத்து பெயர்களை நீக்கிச் சேர்த்து விளையாடாமலிருப்பது. இப்படி அடுக்கியபடியே போகலாம்.
சு.மோகன், நாமக்கல்
"நோ கிங்ஸ்'’பேனருடன் அமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் குறித்து?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் போன்றில்லாமல், வழிவழியாக வரும் அரசர்களைப் போன்று நடந்துகொள்கிறார் என்ற எதிர்ப்புணர்வைக் காட்டும்விதமாக "நோ கிங்ஸ்' என்ற பேனருடன் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நடந்த மக்கள் போராட்டங்கள் அமெரிக்காவையும், கூடவே ட்ரம்பையும் அதிரவைத்திருக்கின்றன. தலைநகரான வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் 50 பெரிய நகரங்களில் நடந்த இந்தப் போராட்டம் ட்ரம்ப் கட்சியினருக்கான ஒரு எச்சரிக்கை மணி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/mavali-2025-10-23-17-56-56.jpg)