ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

ராகுல்காந்தியின் அறிக்கைகளும், அவர் எழுப்பும் கேள்விகளும் அதிக முக்கியத்துவம் பெறாமல் போவது ஏன்?

ஊடகங்கள் ஆளும் கட்சியின் செய்தி, அறிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவதால்தான். தவிரவும், கடந்த பத்தாண்டுகளில் செய்திகளைக் கொண்டுசேர்க்க சமூக ஊடகங் களில் பெருமளவில் முதலீடு செய்யும் கட்சியே பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் உருவாகியிருக்கிறது. அதற்கேற்ப காங்கிரஸ் தகவமைத்துக்கொள்ளாததும் ஒரு காரணம்தான்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கமலை மன்னிப்பு கேட்கவைப்பது உயர் நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று கூறி யுள்ளதே உச்சநீதி மன்றம்...?

எல்லாம் சரிதான். இப்போது தீர்ப்பு வந்து என்ன செய்ய? இனி கர்நாடகத்தில் மட்டும் படத்தை வெளியிட்டு கமல் அள்ளிக் கட்டிவிடப் போகி றாரா என்ன?

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என திருமாவளவன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறாரே?

அவரவர்க்கு ஒரு கொள்கை நிலைப்பாடு இருக்கும். அதன்படி தன் நிலைப்பாட்டை அறிவிக்க திருமாவளவனுக்கு உரிமையிருக்கிறது. பா.ஜ.க.வின் அன்புப்பிடியில் இருக்கும் அன்புமணி தற்போதைக்கு அங்கிருந்து இந்தப் பக்கம் தாவ வழியில்லை. கட்சியில் கலகத்தைக் கிளப்பும் ராமதாஸும் அணியை உடைத்துக்கொண்டு தி.மு.க. பக்கம் வந்துசேர்வதுபோல் தெரியவில்லை. அதனால் தி.மு.க.வோ வி.சி.கவோ கவலைப்படத் தேவை யில்லை.

மல்லிகா அன்பழகன், சென்னை

யோகா தினம் கொண்டாடினீர்களா?

யோகா செய்வதாக இருந்தால் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் அதன் பலன் நமக்குக் கிடைக்கும். யோகா தினத்தன்று மட்டும் யோகா செய்வதற்கு நாமென்ன பிரதமரா? அல்லது பொங்கல், தீபாவளி போன்று கொண்டாட்டத்துக்கான பண்டிகையா யோகா தினம்?

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்

கள்ளுக்கடைகளைத் திறந்தால் என்ன?

திறக்கலாம். அண்டை மாநிலங்களில் எல்லாம் திறந்துதான் இருக் கிறது. ஒரேயொரு பிரச் சனை வரும், கள்ளில் சிலர் போதைக்காக மாத்திரைகளைக் கலந்து, குடிப்பவர்கள் சிலருக்கு ஒத்துக்கொள் ளாமல் போகலாம். சிலர் கள்ளுக்கடை என்ற பெயரில், ரகசியமாக கள்ளச்சாராயமும் விற்கலாம். அந்தத் தலைவலி எதற்கு என்று மாநில அரசு நினைக் கிறது. மற்றபடி கள்ளுக்கடை திறப்பதால் அரசுக்கு பெரிய இழப்பு வந்துவிடாது.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வாக்கைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது என் கிறாரே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்?

செல்வாக்கை அளப்பதற்குத்தான் தேர்தல் இருக்கிறது. ஆளாளுக்கு செல்வாக்கைத் தீர்மானிப்பதைவிட, பொதுமக்கள் மனப்போக்கை வைத்து செல்வாக்கைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

விராட், ரோஹித், அஸ்வின் இல்லாத இந்திய அணி இங்கிலீஷ் மண்ணில் சாதிக்குமா..?

அதற்கென்ன செய்ய... இன்றைய இந்திய அணியில் கவாஸ்கர் இல்லை, கபில்தேவ் இல்லை, அனில் கும்ப்ளே இல்லை, சச்சின் இல்லை, டிராவிட் இல்லை, கங்குலி இல்லை... ஷேவாக் இல்லை... எத்தனையோ ஜாம்பவான்கள் இல்லை. அப்போதும் சாதிக்கத் தானே செய்தது. இந்த மூன்று பேர் இல்லாமலும் இந்திய அணி சாதிக்கும்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

உலகில் கவலையில்லாத பிரதமர் யார்?

பிரதமர் பதவியிலிருந்துகொண்டு கவலையில்லாமலிருக்க முடியாது. ரயில் கவிழ்ந்தாலும், விலை உயர்ந்தாலும், அண்டை நாடு வம்புக் கிழுத்தாலும், பூமி அதிர்ந்தாலும், சொந்த நாட்டின் கரன்சி மதிப்பு தேய்ந்தாலும் பதில் சொல்லியாக வேண்டும். கற்பனையில் மட்டும்தான் கவலையில்லாத பிரதமர் இருக்கமுடியும்.

எஸ்.இளையவன், சென்னை

டாடா நிறுவனம் ஏர் இந்தியா விமானங்களை வாங்கும்பொழுது சோதனை செய்யாமலா வாங்கி யிருப்பார்கள்?

விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து விமானங்களுமே அதற்குச் சொந்தமானவை இல்லை. பெரும்பகுதி விமானங் களை இதற்கென வாட கைக்குவிடும் நிறுவனங்களி டம் வாடகைக்கு எடுத்துத்தான் ஓட்டும். 2022-ல் இந்திய அரசிட மிருந்து டாடாவால் ஏர் இந்தியா வாங்கப்பட்டது. அதன்பின் அடுத்த ஆண்டு அந்த விமானம் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டது. விபத் துக்குள்ளான விமானத்தின் இரு எஞ்ஜின் களில் ஒன்று சமீபத்தில் புதிதாக மாற் றப்பட்டது. மாற்றப்படாத எஞ்ஜினும் நன்றாகவே இருந்தது என்பது டாடாவின் தகவல்.

Advertisment