தே.மாதவராஜ், கோயமுத்தூர்
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் எப்படி இருக்கும்?
ஏற்கெனவே தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் முஸ்-ம்கள் பெரும்பான் மையாக உள்ள தொகுதிகளில் நிறைய குழப்படிகள் செய்து வைத்திருக்கிறது பா.ஜ.க. மூலைக்கு மூலை ராணுவ வீரர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக் கும் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸின் முகமாக இருந்த குலாம்நபி ஆசாத், பிரிந்து சென்று ஜனநாயக முற்போக்கு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர் களான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து தேர்தலில் களம் காணக்கூடும். தனித்துக் களம் காணவுள்ளதாக அறிவித் திருக்கும் பா.ஜ.க., தன் கையிலிருக்கும் அதிகாரம் மூலம் தேர்தலில் முந்துவதற்கான சில வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். முடிவு எப்படியிருந்தாலும், தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்கதே. அது முறைகேடின்றி நியாயமாக நடந்தால் இன்னும் சிறப்பு.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவுசெய்ய கவர்னர் அனுமதியளித் திருப்பது குறித்து?
வழக்கு பதிவுசெய்ய ஆளுநர் அனுமதி மறுத்திருந்தால்தானே ஆச்சரியம்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
உண்மையில் பா.ஜ.க.வின் "பி' டீம் தி.மு.க.தான் என்கிறாரே சீமான்..?
என்ன செய்யமுடியும்? இத்தனை நாள் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் "பி' டீம் என விமர்சித்து வந்தது தி.மு.க. திடீரென முடிவை மாற்றிக் கொண்டு, ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதன் மூலமும், கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்ததன் மூலமும் இப்போது எதிர்க்கட்சிகள் அதே விமர்சனத்தை தி.மு.க. மீது வைக்கின்றன. சொல்லால் பதிலளிக்காமல் மௌனமாக இருந்து, வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இப்போதைய இந்தியா கூட்டணியுடன் தொடர்வதன் மூலம் செயலால் பதிலளிக்க வேண்டியதுதான்.
எம். செந்தில்குமார், மதுரை.
உயர் நிர்வாகப் பணிக்கான ஆட்களை, யு.பி.எஸ்.சி மூலம் எடுக்காமல் லேட்ரல் என்ட்ரி எனும் பெயரில் ஆர்.எஸ்.எஸ். சார்புடை யவர்களை எடுத்துவருவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருக்கிறாரே..?
நியாயமான குற்றச்சாட்டுதான். லேட்ரல் என்ட்ரி என்பதே குறுக்குவழி நியமனம்தான். நிர்வாகப் பணித் தேர்வு எத்தனை கடுமையானது என்பதும் அதில் தேர்வாவது எத்தனை சிரமம் என்பதும் தெரிந்ததே. இத்தகைய லேட்ரல் என்ட்ரி என்பதை, எப்போதோ ஒருவருக்கு விதிவிலக்காக அளித்தால் பரவாயில்லை. ஏற்கெனவே இந்தமுறை யில் 63 பேர் உயர்பதவிகளில் திருட்டுத்தனமாக நுழைக்கப்பட்டுள்ளனர். இப்போது இன்னும் 45 பேரை இந்த முறையில் நியமிக்கப்போவதாக அறிவித்துவிட்டு, கூட்டணிக்குள்ளே எதிர்ப்பைப் பார்த்து பின்வாங்கியிருக்கிறது பா.ஜ.க. அரசு. சமீபத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தால், அதானிக்கு பேவரபிள் செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட மாதவி புச் கூட லேட்ரல் என்ட்ரியில் நுழைக்கப்பட்டவர்தான்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கிடுக்கிப் பிடி போட்டிருக்கிறதே?
அதுதான் வழக் குப் பதிந்தாகி விட் டது. சாட்சிகளைக் கலைத்து விடுவார் என ஒரு வருடம் வரை உள்ளே வைத் தாகிவிட்டது. பிற கென்ன விசாரணை நீதி மன்றத்தில் வழக்கைத் தொடங்க வேண் டியதுதானே. ஜாமீன் தரக் கூடாது என சாக்குப்போக்குச் சொல்லி சும்மா இழுத்தடித்துக்கொண்டே சென்றால்,… உச்சநீதிமன் றம் கிடுக்கிப் பிடிதான் போடும். வழக்கை நடத்தி, குற்றத்தை நிரூபித்து செந்தில்பாலாஜியை சிறையில் தள்ளுவது ஒரு வகை. வழக்கையே நடத்தாமல், அவரை சிறையிலேயே வைத்திருக்க நினைப்பது இன்னொரு வகை. அமலாக்கத்துறையின் நோக்கம் இரண்டாம் வகை என்பதால்தான் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையைக் கண்டித்திருக்கிறது.
எச்.மோகன், மன்னார்குடி
மோடியிடம் முன்பிருந்த சுறுசுறுப்பு எங்கே போனது?
முன்பு நினைத்ததைச் செய்யும் சுதந்திரம் இருந்தது, சுறுசுறுப்பாக இருந்தார். இப்போது கூட்டணிக் கயிறால் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற தடையுணர்வு சுறுசுறுப்பைக் காவு வாங்கிவிட்டது.