வாசுதேவன், பெங்களூரு

பராசக்தி படத்தில் வரும் செழியன் நான் தான் என்று சீமான் கூறியுள்ளாரே..?

mavali1

பராசக்தி படத்தில் வரும் குணசேகரன் பாத்திரமே தனக்கு வரவேண்டியது. அந்த நேரத்தில் சிவாஜிகணேசன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் விட்டுக்கொடுத்தேன் என்று கூட சொல்வார் சீமான். சீமா னின் அறிக்கைகள் பல சமயங்களில் இளைப்பாறுதல். இளைப்பாறிவிட்டு நகர்ந்துவிடவேண்டும். அதை ஆராய்ந்துகொண்டிருக்கக்கூடாது.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் வித்தியாசம் என்ன..?

Advertisment

முதலில் களம் வித்தியாசம். மூன்று ஜல்லிக்கட்டுக் களங்களும் வெவ்வேறு. பார்வையாளர்கள் வேறு. பல சமயங்களில் ஒரு போட்டியில் பங்கேற்ற வீரர்கள், காளைகள் இன்னொரு போட்டியிலும் பங்கேற்கலாம். மூன்றிலும் பங்கேற்ற வீரர்களின் உத்வேகமும், பார்வையாளர்களின் உற்சாகமும் ஒன்றுதான்.

சிவா, கல்லிடைக்குறிச்சி

எனக்கு எம்.ஜி.ஆர். பாடல்கள் பிடிக்கும் என ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை'’என சூசகமாகக் கூறுகிறாரோ! 

Advertisment

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி 

டிரம்ப் அமெரிக்க அதிபர்போல செயல்படாமல் பில் கலெக்டர்போல மற்ற நாடுகளுக்கு வரிமேல் வரி போடுவது எரிச்சலூட்டுகிறதே?

ஒரு அதிபரின் வேலை எதுவென உங்களுக்குத் தெரிந் திருக்கிறது. ஆனால் ட்ரம்புக்குத் தெரியவில்லையே. ஆபிரகாம் லிங்கன்- ட்ரம்ப் இருவருமே அமெரிக்க அதிபர்கள்தான். வரலாறு இருவருக்குமே அவர்களுக்குப் பொருத்தமான இடத்தை ரிசர்வ் செய்திருக்கும். முன்னவர் தைல வண்ண ஓவியம் என்றால் பின்னவர் கார்ட்டூன் கேலிச் சித்திரம். கேலிச் சித்திரங் கள் புன்னகையையும் வரவழைக்கலாம், எரிச்சலையும் மூட்டலாம்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளாரே முதல்வர் ஸ்டாலின்?

அந்தக் காலத்தில் காளையை அடக்கிய வீரர் களுக்கு தன் வீட்டுப் பெண்களையே மணமுடித்து வைத்திருக்கிறார்கள். தடகள வீரர்கள் சாதிக் கும்போது அரசு வேலை கொடுக்கிறார்கள் தானே. அதுபோல நமது பாரம்பரிய விளையாட் டில் வெற்றிபெறும் சிலருக்கு அரசு வேலை கொடுப்பதென்பது நல்ல யோசனைதான். ஆனால், அரசு வேலை சபலத்தில், காளைக் கொம்புக்கு, குடலை பரிசளிப்பவர்கள் அதிகரித்துவிடக்கூடாது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

ஆளுநர் உரையை நீக்கு வதற்கு சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்கப்படும் என் கிறாரே ஸ்டாலின்...?

சட்டமன்றத்துக்கு உரையாற்ற அழைத்தால், வாம்மா மின்னல் ரேஞ்சுக்கு வந்த வேகத்தில் மறைந்துவிடு கிறார் ஆளுநர். கேரள சட்டமன்றத் திலும் கிட்டத்தட்ட இதேபோன்ற காட்சிதான் நிகழ்ந் திருக்கிறது. ஆக, மத்திய அரசு எழுதிக்கொடுத்த காட்சிகளை நடித்து வச னங்களை பேசிவிட்டுப் போகிறார்கள் ஆளுநர் கள். பா.ஜ.க.வை மத்தியில் தோற்கடிக்க மக்கள் நட வடிக்கை எடுத்தால் மட் டும்தான் இது மாறும்.

கே. அருண்குமார், திருநெல்வேலி

தங்கம்தான் இனி வாங்கமுடியாதெனப் பார்த்தால், வெள்ளியும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடுமோ?

மற்ற பல நாடுகளில் தங்கம் முதலீட்டுப் பொருள். வெள்ளி தொழில் பயன்பாட்டுப் பொருள். இந்தியாவில் அந்த இரு வேலை களோடு, தங்கமும் வெள்ளியும் ஆபரணப் பொருளாகவும் இருப்பது தான் சிக்கல். யாரையாவது சித்தரைப் பிடித்து, இரும்பை தங்கமாகவும் வெள்ளியாகவும் மாற்றும் ரசவாதம் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இளங்கோ, ஆடுதுறை   

அறிவியல் பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டிய லில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தை பின்னுக்குத் தள்ளி முதல் இரண்டு இடங்களைப் சீன பல் கலைக்கழகங்கள் பிடித்துள்ளதே..?!

பொருளாதாரம், உற்பத்தி இரண்டிலும் சீனா மேலெழுந்து வந்தபடியே இருக்கிறது. தற்போது கல்வியிலும் அமெரிக்காவை பின் னுக்குத் தள்ள ஆரம்பித்திருக் கிறது. 2025-ஆம் ஆண்டுக்கான சி.டபிள்யூ.டி.எஸ். லெய்டன் தர வரிசையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகம் முத லிடத்தையும், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் இரண்டா மிடத்தையும் பெற்றுள்ளன. அமெ ரிக்காவின் கடன் நெருக்கடியால் பல பல்கலைக்கழகங்களுக்கு சரியான நிதி ஒதுக்கீடு கிடைக்கா ததும் அதன் பின்னடைவுக்குக் காரணம் என்கிறார்கள். இந்தியா வில் ஓரளவு சர்வதேச அளவில் அறியப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை, அதன் பெயருக்காகவே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.