Advertisment

மாவலி பதில்கள் 23.08.25

mavali


நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தி.மு.க.வில் உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படு கிறார்கள்... மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது என பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து? 

Advertisment

அதிருக்கட்டும், எடப்பாடியார் தி.மு.க.வில் உழைத்த வர்கள் புறக்கணிக்கப்படுவதற்காக அக்கறைப்படுகிறாரா... அல்லது அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வைத் தஞ்சமடை பவர்களை எண்ணி ஆத்திரப்படுகிறாரா?

Advertisment

அ.யாழினிபர்வதம், சென்னை.78. 

நடிகை கஸ்தூரி பா.ஜ.க.வில் இணைந்து விட்டாரே?

பா.ஜ.க.வில் இணைவதற்கு முன்பே, அக்கட்சியின் தொண்டர் போலத்தான் வெளியில் பேசிவந்தார். அதனால் பொருத்தமான இடத்தில்தான் இணைந்திருக்கிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்- தேனி*

ராகுல் காந்தி Vs தேர்தல் ஆணையம் யள் நீதிமன்றம் முடிவு!?

இப்போதுவரை பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம


நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தி.மு.க.வில் உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படு கிறார்கள்... மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது என பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து? 

Advertisment

அதிருக்கட்டும், எடப்பாடியார் தி.மு.க.வில் உழைத்த வர்கள் புறக்கணிக்கப்படுவதற்காக அக்கறைப்படுகிறாரா... அல்லது அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வைத் தஞ்சமடை பவர்களை எண்ணி ஆத்திரப்படுகிறாரா?

Advertisment

அ.யாழினிபர்வதம், சென்னை.78. 

நடிகை கஸ்தூரி பா.ஜ.க.வில் இணைந்து விட்டாரே?

பா.ஜ.க.வில் இணைவதற்கு முன்பே, அக்கட்சியின் தொண்டர் போலத்தான் வெளியில் பேசிவந்தார். அதனால் பொருத்தமான இடத்தில்தான் இணைந்திருக்கிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்- தேனி*

ராகுல் காந்தி Vs தேர்தல் ஆணையம் யள் நீதிமன்றம் முடிவு!?

இப்போதுவரை பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவ ரங்கள் மின்னணு வடி வில் தரப்படவேண்டும் என தேர்தல் ஆணையத் துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குச் சரி! ராகுல், நவீன் பட் நாயக், பினராய் விஜயன், மகாராஷ்டிர எதிர்க் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலே வந்ததாய்த் தெரியவில்லையே. அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன் றும் சாதாரணமான வையாய்த் தெரிய வில்லையே. ஜனநாய கத்தின் தூண்களை ஆட்டிச்சாய்க்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருப்பதாக அல்லவா குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஏன் இந்த குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் தானே முன்வந்து எடுத்து விசாரிக்கக்கூடாது?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

உக்ரைன் நேட்டோவில் சேரமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே ட்ரம்ப்?

நேட்டோவில் சேர அழைக்காவிட்டால், இன்றைக்கு உக்ரைன் ஒரு கட்டடத்துக்குக்கூட சேதாரமின்றி முழுதாக இருந்திருக்கும். தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டு பின்வாங்குவது அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ அழகல்ல... ட்ரம்பின் நோபல் பரிசு பேராசைக்காக உக்ரைன் பலிகொடுக்கப்படுகிறது. 

செந்தில், சென்னை.

இந்தியாவின் தலிபான் ஆர்.எஸ்.எஸ் என விமர்சனம் எழுந்திருக்கிறதே...?

சமூகத்தின் சுதந்திரத்தில் தலையிட்டு மதம் சொல்கிறது, அதைச் செய்யக்கூடாது. இதைச் செய்யக்கூடாது என மிரட்டுவதுதான் இரு தரப்பின் வேலையும். டிகிரி அளவில் பார்த்தால், தலிபான் முன்னால் இருந்தாலும், தேசத்தின் அளவையும், இந்திய மக்கள்தொகையையும் கணக்கிடும்போது, ஆர்.ஆர்.எஸ்.ஸால் பாதிக்கப்படுபவர்கள் பெருந் தொகையினராக இருப்பார்கள். தலிபானோ... ஆர்.எஸ்.எஸ்.ஸோ, சொந்த விரல்களால் கண்களைக் குத்திக்கொள்வதுதான் அவர்கள் செயல்பாட்டின் ரிசல்ட்.

எஸ்.கதிரவன், பேரணாம்பட்டு 

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஆடு விநியோகத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சொல்கிறதே?

வழக்கு நடந்துமுடியட்டும் முடிவுக்கு வரலாம். ராவ் மகள் கவிதா, தங்களது கட்சியை பா.ஜ.க. தங்கள் கட்சியுடன் இணைப்பதற்கு நெருக்குதல் தருவதாக புகார் கூறிவருவதையும் இணைத்துப் பார்க்கவேண்டும். தவிரவும் அமலாக்கத்துறை, தன் குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ள வழக்குகள் மிகக் குறைவானவைதான் என்ற புள்ளிவிவரத்தையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

mavali1

த.சத்தியநாராயணன், அயன்புரம்

திரையுலகில் பொன்விழாவைத் தொட்டு விட்ட சூப்பர் ஸ்டாருக்கு மாவலியின் வாழ்த்து என்ன? 

பொன்விழா வைரவிழாவாகட்டும்! இன்னும் பல வெற்றிப் படங்கள் ரசிகர்களை மகிழ்விக்கட்டும். அதற்கு இன்னும் நீளாயுளை ரஜினிகாந்துக்கு இறைவன் அளிக்கட்டும்!

வண்ணை கணேசன், கொளத்தூர்

பெங்களூருவில் கர்ப்பிணி மனைவியை கவனிக்க ரூ1.25 கோடி வேலையை உதறியிருக்கிறாரே?

உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் பைத்தியக்காரத் தனம். ஒன்றே கால் கோடி சம்ப ளத்தில் ஒரு நர்ஸ், உதவ இரண்டு வேலைக்காரர்கள் வைத்து மனைவி யை மிகச்சிறப்பாக கவனிக்கலாம். இந்த மூன்று பேரையும் 1 லட்சத்துக்கும் குறை வான சம்பளத்தில் அமர்த்திவிடலாம்.  ஒரு விளம்பரத்துக் காக இந்த வேலை யைப் பண்ணியிருப் பார் அந்தக் கணவன். திரும்ப அதுபோன்ற வேலை கிடைக்காமல் போனால் தெரியும், அதன் பின்னா லுள்ள வலி.

வைரபாலா, மன்னார்குடி

இஸ்ரேலைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் அறிவுறுத்தல்கள் வழங்குகிறாரே?

அமெரி?க்க அரசியலிலும் பொருளா தாரத்திலும் யூத கெடுபிடி அதிகம். அங்கே கைவைத்தால் ட்ரம்பின் பதவிக்கே இக்கட்டு வருமென்பதால் கண்டும்காணாமலும் போய்       விடுவார்.

nkn230825
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe