சிவா, கல்லிடைக்குறிச்சி.
சர்வதேச பிரச்சனைகளுக்கு பல நாடுகள் இந்தியாவைத் தேடிவருகின்றன என மோகன் பகவத் கூறியிருப்பது உண்மையா?
அப்படியா, சமீபத்தில் எத்தனை சர்வதேச பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு சொன்னது? எத்தனை சர்வதேச நாடுகள் தீர்வு கேட்டு வந்து வரிசையில் நின்றன? சீனா, பாகிஸ்தானுடனான பிரச்சினைகளையே இந்தியாவால் தீர்த்துக்கொள்ள இயலவில்லை. குட்டி நாடு இலங்கை, தமிழக மீனவர்களைப் படுத்தியெடுக்கிறது. கொஞ்சம் சும்மா இருங்கப்பா என இலங்கை ராணுவத்தை இந்தியாவால் அதட்டமுடியவில்லை. பகல் கனவு காண்பது பிரச்சனையில்லை, கனவை உண்மையென நினைத்து பேசித் திரியக்கூடாது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பிரசாந்த் கிஷோர் முடிவைப் பார்த்தபின்னும் தனியாக நிற்க விஜய்க்கு தைரியம் வருமா..?
மற்றவர் அனுபவத்தில்
சிவா, கல்லிடைக்குறிச்சி.
சர்வதேச பிரச்சனைகளுக்கு பல நாடுகள் இந்தியாவைத் தேடிவருகின்றன என மோகன் பகவத் கூறியிருப்பது உண்மையா?
அப்படியா, சமீபத்தில் எத்தனை சர்வதேச பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு சொன்னது? எத்தனை சர்வதேச நாடுகள் தீர்வு கேட்டு வந்து வரிசையில் நின்றன? சீனா, பாகிஸ்தானுடனான பிரச்சினைகளையே இந்தியாவால் தீர்த்துக்கொள்ள இயலவில்லை. குட்டி நாடு இலங்கை, தமிழக மீனவர்களைப் படுத்தியெடுக்கிறது. கொஞ்சம் சும்மா இருங்கப்பா என இலங்கை ராணுவத்தை இந்தியாவால் அதட்டமுடியவில்லை. பகல் கனவு காண்பது பிரச்சனையில்லை, கனவை உண்மையென நினைத்து பேசித் திரியக்கூடாது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பிரசாந்த் கிஷோர் முடிவைப் பார்த்தபின்னும் தனியாக நிற்க விஜய்க்கு தைரியம் வருமா..?
மற்றவர் அனுபவத்தில் பாடம் படிப்பது நல்ல விஷயம்தான். சமயங்களில் கணக்கு தப்பாகவும் ஆகிவிடும். அதனால் அவரே அனுபவப்பட்டு பாடம் படித்துவிட்டுப் போனால், அப்படிச் செய்யத் தவறிவிட்டோமோ... இப்படிச் செய்யத் தவறிவிட்டோமோ என எதிர்காலத்தில் தடுமாற்றம் வராது. தவிரவும், அவர் தனியாக நிற்பேனென்று எப்போது சொன்னார்? எங்கள் தலைமையில் கூட்டணி என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வாசுதேவன், பெங்களூரு
தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணிக்கே வெற்றி உறுதி என்கிறாரே பிரேமலதா விஜயகாந்த்?
2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தே.மு.தி.க. கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணிதான் ஜெயித்ததா? இந்தத் தேர்தலில் மட்டும் தே.மு.தி.க. தொண்டர்கள் பலம் எங்கிருந்து திடீரென அதிகரிக்கும். அதெல்லாம் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உற்சாகத்துக்காகப் பேசுவது. தேர்தல் வெற்றி- தோல்விகள் ஒன்று, கட்சிகளின் வியூகங்கள், தேர்தல் பணியால் முடிவாகும். இல்லை, மக்களின் சென்டிமெண்டால் முடிவாகும். அதிர்ஷ்டவசத்தால், அப்படி வெற்றிபெறும் கூட்டணியில் தே.மு.தி.க. இருந்தால் பிரேமலதாவின் வாக்குப் பலிதமாகும்.
நடேஷ்கன்னா, கல்-டைக்குறிச்சி
காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் இருந்திருந்தால் கூடுதல் இடங்கள் கிடைத் திருக்கும் என தேஜஸ்வி கூறியிருக்கிறாரே?
சிந்தின பாலுக்கு அழுபவன் நல்ல தலைவன் அல்ல. முடிவு எதுவாக இருந்தாலும் அதைத் தேர்தலுக்கு முன்பே தீர்க்கமாக எடுத்திருக்கவேண்டும். ஏன், ஆர்.ஜே.டி.யின் வெற்றி எண்ணிக்கையும்தான் சரிந்திருக்கிறது. எங்கே கோட்டை விட்டோமென கணக்கிடுவதை விட்டு, மற்றவர்களைக் குறைகூறுவதால் எதுவும் சரியாகிவிடாது.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
வி.சி.க.வும் பா.ம.க.வும் ஒன்றாக இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருப்போம் என்று அருண் எம்.எல்.ஏ. சொல்வது சாத்தியம்தானா?
அருண் எம்.எல்.ஏ.வுக்கு அப்படியொரு நம்பிக்கை இருக்கலாம். இல்லை, மீண்டும் ஒருமுறை கைகோத்துப் பார்த்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம். ஆட்சியைப் பிடிப்பது இருக்கட்டும், இளவரசன்- திவ்யா மாதிரி இன்னொரு காதல் நிகழ்வு நடந்தால் என்னாவது? அப்போதும் இணக்கம் நீடிக்குமா அல்லது மீண்டும் இறுக்கம்கூடி இரு தரப்பும் அடித்துக்கொள்ளும் சூழல் வருமா?
க.அருச்சுனன், செங்கல்பட்டு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு அவர் தரப்பு வாதத்தை கேட்காமலே மரண தண்டனை அளித்தது சரியா?
கடைசிப் பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல சர்வாதிகாரத்தின் பாதையில் கால்வைத்தவர் ஷேக் ஹசீனா. அந்தக் காலகட்டத்தில் எத்தனை எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கியிருப்பார் ஷேக் ஹசீனா. அதிகாரம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி. அதைப் பக்குவமாகக் கையாளவேண்டும். இப்போது தீர்ப்பாயத்தைக் குறைசொல்பவர், இதே தீர்ப்பாயத்தின் துணையுடன் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும்போது இதையெல்லாம் நினைத்துப் பார்த்தாரா?
எச்.மோகன், மன்னார்குடி
தாரக மந்திரம் -தலையணை மந்திரம் என்ன வித்தியாசம்?
தாரக என்ற சொல்லுக்கு விடுவிக்கும் எனப் பொருள். முதல் மந்திரம் ஒன்றிலிருந்து உங்களை விடுவிக்கும். இரண்டாவது மந்திரம் ஒன்றுக்கு உங்களை அடிமையாக்கும். எல்லையற்ற தளைகளில் மாட்டிக்கொண்டிருப்பவர், ஒரு தாரக மந்திரத்தைக் கண்டறிந்து தளைகளை அறுத்துக்கொள்ளவேண்டியதுதான். எதிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள், வாழ்க்கை நின்று நிலைபெறுவதற்கு இனிக்க இனிக்க தலையணை மந்திரம் ஓதும் ஒரு துணையைக் கண்டுகொள்ள வேண்டியதுதான்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us