எஸ்.இளையவன், சென்னை
தாய்லாந்து தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் காதலியை 10 முறை கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.81,000 பரிசு அறிவித்துள்ளாரே?
சில விஷயங்களில் பார்த்துப் பேசவேண்டும். யாராவது அறைந்து, அந்தக் காதலி காவல் துறையை அணுகினாலும் தொழிலதிபருக்குத்தான் சிக்கல். நாளை அதே காதலி, மகனின் மனைவியாக வந்துவிட்டால், தொழிலதிபரின் காசை வைத்தே என் மாமனாரின் கன்னத்தில் 10 முறை அறைபவர்களுக்கு பரிசு என அறிவிக்கலாம். அதுவும் சிக்கல்தான்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
"அரசியலில் உண்மை பேசுவோருக்கு இடமில்லை' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பற்றி?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடியிடம் சவுதி அரேபிய இளவரசர் இந்தியாவின் சாலைப் பணிகளைப் பார்த்துவிட்டு, நிதின்
எஸ்.இளையவன், சென்னை
தாய்லாந்து தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் காதலியை 10 முறை கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.81,000 பரிசு அறிவித்துள்ளாரே?
சில விஷயங்களில் பார்த்துப் பேசவேண்டும். யாராவது அறைந்து, அந்தக் காதலி காவல் துறையை அணுகினாலும் தொழிலதிபருக்குத்தான் சிக்கல். நாளை அதே காதலி, மகனின் மனைவியாக வந்துவிட்டால், தொழிலதிபரின் காசை வைத்தே என் மாமனாரின் கன்னத்தில் 10 முறை அறைபவர்களுக்கு பரிசு என அறிவிக்கலாம். அதுவும் சிக்கல்தான்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
"அரசியலில் உண்மை பேசுவோருக்கு இடமில்லை' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பற்றி?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடியிடம் சவுதி அரேபிய இளவரசர் இந்தியாவின் சாலைப் பணிகளைப் பார்த்துவிட்டு, நிதின் கட்கரியை கொஞ்ச நாட்களுக்கு தங்கள் நாட்டுக்குக் கொடுக்கும்படி கேட்டார் எனச் சொன்னார். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்? தவிரவும், இந்திய மக்கள் இந்த அடிப்படை உண்மையைத் தெரியாமல் இருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா!
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
"அரசியலில் எனக்கு ஓய்வே இல்லை… அரசியல்தான் எனது மூச்சு' என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்?
நிஜமாகவே அப்படி ஒரு எண்ணமிருந் தால், மகனிடம் எதற்கு பொறுப்பைக் கொடுத் தார். இப்போது எதற்கு தந்தையும் மகனும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வாரம்தோறும் அவர்கள் விடும் அறிக்கைப் போரால் கட்சிகளெல்லாம் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறதே!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
15 மனைவி, 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்பிரிக்க மன்னரால் அபுதாபி விமான நிலையம் கதிகலங்கிப் போனதாமே?
ஆமாம், ஒரு விமானம் முழுக்க ஒரு குடும்பமும், அவர்களைக் கவனிக்க நூற்றுக்கணக்கான பணியாளர்களும் வந்திறங்கினால் திக்குமுக்காடிப் போகாதா! ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வதினியின் மன்னர் மூன்றாம் எம்ஸ்வதிதான் அது. 15 மனைவி, 30 பிள்ளைகளின் பெயரைச் சரியாகச் சொன்னால்தான் திரும்பவும் சொந்த நாட்டுக்குச் செல்ல விமானச் சீட்டு என்று அவரிடம் சொன்னால், அவர் குடும்பத்தோடு அபுதாபியிலேயே தங்கநேர்ந்தாலும் நேர்ந்து விடும்.
எஸ்.கதிரவன், பேரணாம்பட்டு
9-ஆம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி தேவையென்று உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருப்பது சரியா?
காமவல்லூறுகள் ஐந்து, ஆறு வயது குழந்தைகளிடமே தங்கள் வேலையைக் காட்டும்போது 9-ஆம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி தந்தால் என்ன தவறு? பாலியல் கல்வி என்றால் மலினமான வலைத்தளத்தில் வரும் சங்கதிகள் என்று நினைத்தீர்களா! குட் டச், பேட் டச் எதுவென சொல்லித் தருவது கூட பாலியல் கல்விதான். இதுபோல, அடிப்படையான விஷயங்களை ஆரம்பத்திலே சொல்லித்தருவது பசுத்தோல் போர்த்திய புலிகளை மாணவர்கள் அடையாளம் காணவும், சமயங்களில் அவர்களிடமிருந்து தப்பிக்கவும் உதவும்.
ப. திருமலை, மதுரை
தான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை ரத்துசெய்வதாக பிரசாந்த் கிஷோர் சொல்கிறாரே?
தமிழகத்தில் மதுவுக்கு தடையில்லை. எதிர்க்கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என வாக்குறுதியளிக்கும். பீகாரில் மதுவிலக்கு அமலிலிருக்கிறது. அதனால் மதுக்கடை திறப்போம். மகிழ்ச்சியைக் கொடுப்போமென உத்தரவாதம் தருகிறார். கள்ளச்சாராயத்தால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த மாநிலங்களில் ஒன்று பீகார். "ஏம்பா கள்ளச்சாராயத்தைக் குடிச்சு சாகுறீங்க. நல்ல சாராயத்தைக் குடித்து அரசுக்கு வருவாய் கொடுங்கள்' என வியூகம் வகுக்கிறார்.
அ. யாழினி பர்வதம், சென்னை-78.
அமெரிக்காவுக்குப் பயந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெறுவதை நிறுத்திவிட்டதா?
அரசியலில் பயந்து, வியந்து என்பதெல்லாம் இல்லை. இந்தியா மீதான டேரிஃப் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி யில் எத்தனை லட் சம் கோடி நட்டம் ஏற்படும்? ரஷ்யாவி லிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு எத்தனை லட்சம் கோடி லாபம் கிடைக்கும்? இரண்டையும் கணக்கிடுவார்கள். இதில் எது லாபகரமானதோ, அதையே தொடர்வார்கள். அதுதான் புத்திசாலித்தனமான அரசு செய்ய வேண்டிய முடிவும்கூட. அதில் அமெரிக்கா பக்கம் தராசு சாயவே வாய்ப்பு அதிகம்.