கே.வல்லவன், பேரணாம்பட்டு
உலக அளவில் வாழைப்பழ உற்பத்தி யில் இந்தியா முத லிடம் வகிப்பதாக, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளாரே?
கரகாட்டக்காரன் படக் காலகட்டத்திலே இந்தியா இந்த சாதனையைச் செய்திருந்தால், கவுண்டமணிக்கு ஒரு வாழைப்பழம் நட்டமாகியிருக்காது. செந்திலுக்கும் கவுண்டமணியிடம் வாங்கிக்கட்டும் இக்கட்டு ஏற்பட்டிருக்காது. இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் வாழை உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. சில தகவல்கள் சீனா முதலிடம் என்றும் சொல்கின்றன.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
டைம் மெஷின் கிடைத்தால் பிரதமரை மாற்றுவேன் என நடிகர் கிஷோர் பேசியிருக்கிறாரே?
டைம் மெஷின் கிடைத்தால் காலம் விட்டு காலம் மாறலாம். பிரதமரை மாற்றமுடியுமா எனத் தெரியவில்லை. திரும்ப 2014-க்கு முந்தைய காலகட்டத்துக்குப் போய் தனி ஆளாக பிரச்சாரம் செய்து அனைத்தையும் மாற்றமுடியும் என்பது சாத்தியமா தெரியவில்லை.
திலகர் ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
ரஷ்யாவிடம், இனி இந்தியா எண்ணெய் வாங்காது என வெள்ளை மாளிகையிலிருந்து அறிவிப்பு வருகிறதே?
அடுத்து எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லவேண்டும் என்கிற விவரம், பெட்ரோல், டீசலை என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதையெல்லாம் வெள்ளை மாளிகை அறிவிக்காதவரையில் இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்.
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்க்கை இருக்காதா சார்?
இசைக்கருவிகளில் ஒற்றைத் தந்தி வாத்தியம் என உண்டு. அதை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தால் சலித்துப் போய் தூங்கிவிடுவோம். மேடு- பள்ளம் இல்லாத வாழ்க்கையும் ஒற்றைத் தந்திக் கருவியிலிருந்து வரும் இசைபோலதான் சலிப்பாக இருக்கும். பரவாயில்லையா?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/mavali1-2026-02-19-17-57-34.jpg)
வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
பத்து மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட செயலை பாராட்ட வார்த்தைகள் உண்டோ?
கொச்சியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் -ஷெரின் அன்ஜான் தம்பதியினருக்கு, இந்தப் பிரபஞ்சத்தைவிட பெரிய மனது. விபத்தில் உயிரிழந்த தங்கள் மகள் அலிஷெரின் ஆபிரகாம் உடலுறுப்புகளை தானம் வழங்கி, 5 பேரின் மறுவாழ்வுக்கு வழி வகுத்திருக்கின்றனர். காலம் அவர்களின் இதயக்காயத்தை ஆற்றுவதற்கு மருந்திடவேண்டும்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
காங்கிரஸ்தான் நாட்டை விற்றுவிட்டது, மோடி அல்ல என்கிறாரே நிர்மலா சீதாராமன்?
சிறு குழந்தைகள் பொருளை உடைத்துவிட்டால், வேகமாக ஓடிவந்து மற்றவர்தான் பொருளை உடைத்துவிட்டதாக கேட்காமலே சொல்வார்கள். நிர்மலா சீதாராமனின் பேச்சும் அத்தகையதுதான். மோடி ஆட்சிக்குவந்த பிறகுதான் இந்தியா கிட்டத்தட்ட புதிதாக 150 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்தியா வுக்கு ஏற்றுமதி செய்யும் தங்கள் பொருட்களுக்கு வரிச்சலுகை கேட்கிறது அமெரிக்கா. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிதிக்கிறது. காங்கிரஸ் ஒரு ரபேல் விமானம் 600 கோடி என ஒப்பந்தம் போட்டது. ஆட்சி மாறிவந்த மோடி அரசு, அதே ரபேல் விமானத்தை 1,600 கோடிக்கு வாங்கியது. தற்போது இன்னும் 114 ரபேல் விமானம் வாங்கப்போகிறது இந்தியா. இந்த முறை ஒவ்வொரு ரபேல் விமானமும் 2500 கோடி. மொத்த டீல் 3.5 லட்சம் கோடி. யார் நாட்டை விற்றதென்ற முடிவை நீங்களே எடுத் துக்கொள்ளுங்கள்.
எச்.மோகன், மன்னார்குடி
தாயின் மடி, காதலி யின் மடி, மனைவியின் மடி - இவற்றுள் சுகமான மடி எது?
நல்லா இருக்கிறதே கதை. காலத்துக்கும் நீங்கள் சொகுசாக மடியில் படுத்தே காலம் தள்ளிவிடுவீர்கள் போலிருக்கிறதே! ஒரு மாற்றத்துக்கு அம்மாவையோ, மனைவியையோ, மகளையோ உங்கள் மடியில் படுக்கவைத் துப் பார்க்கலாம் என்று தோன்றவில்லை அல்லவா!
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
நிலவில் குடியிருப்பை நிறு வப்போவதாக எலான்மஸ்க் அறிவித்திருக்கிறாரே?
அதற்கெல்லாம் நாளா கும். அதுவரைக்கு தங்கள் நிறுவனத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால் எலான் மஸ்க் அடித்துவிடுவார்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
"ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்திய பிர தமராக வேண்டும் என்பது தனது கனவு' என்று கூறுகிறாரே ஓவைசி..?
இஸ்லாமியப் பெண் ணொருவர் இந்தியப் பிரதம ராக வரவேண்டும் என ஆசைப்பட்டிருந்தால் பரவா யில்லை. ஒரு பெண் பிரதம ரானாலும், ஹிஜாப் அணிந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா? இந்தக் கருத்தில் மாவலிக்கு உடன்பாடில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/mavali-2026-02-19-17-57-15.jpg)