நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ. மச்சாடோ நோபல் பரிசு பெறும்போதே, இவர் நோபல் வாங்குவதும் ட்ரம்ப் நோபல் பரிசு பெறுவதும் ஒன்றுதான், அந்தளவு ட்ரம்ப் ஆதரவாளர் என விமர்சனம் எழுந்தது. நோபல் பரிசை, ட்ரம்புக்குப் பரிசாக வழங்கி அதை நிரூபித்துவிட்டார். ஆனால் பணம், உடைமைப் பொருட்களைப்போல விருது, பட்டங்களை மற்றவருக்கு வழங்கமுடியாது. எனது மருத்துவப் பட்டத்தை ஒருவர் பையனுக்கு வழங்குவதால் அவர் மகன் மருத்துவராக முடியாது. அதைத்தான் நோபல் அமைப்பும் கூறியிருக்கிறது. பரிசு யாருக்கு வழங்கப் பட்டதோ, அவர் பெய ரில்தான் அறியப்படு மேயன்றி, டரம்ப் பெயரில் அறியப்படாது. ஆக, ட்ரம்ப் கையி லிருப்பது கொஞ்சம் காஸ்ட்லி பொம்மை... அவ்வளவுதான்.
ஜெனிஃபர் ஏஞ்சல், புதுடெல்லி
2027 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித் துள்ளாரே?
உத்தரப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அழிவின் பாதையில் இருக்கிறது. தேர் தலுக்கு தேர்தல் அதன் வாக்கு சதவிகிதமும் வெற்றிபெறும் தொகுதிகளும் தேய் மானமடைந்துவருகின்றன. தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு மட்டும் கட்சியை உயிர்ப்பித்துவிடப்போவதில்லை. ஒன்று, கட்சிக்கு புதிய தலைவர் வரவேண்டும் அல்லது உயிர்த்தெழுந்து வந்ததுபோல் புதிய ஆற்றலுடன் மாயாவதி செயல்களை ஆற்றவேண்டும்.
வாசுதேவன், பெங்களூரு
உலகில் இன்று அமைதியான நாடு எது?
அன்டார்டிகாதான். இன்றைய நாள் வரை அன்டார்டிகாவில் நிரந்தரமாக வசிக்கும் மனிதர்கள் என்று எவரும் கிடையாது. விஞ்ஞானிகள், அவர்களுக்குத் துணையாக வரும் பணியாளர்கள் என சுமார் 5000 பேர்தான் அன்டார்டிகாவாசிகள். மிச்சமிருப்பது பனியும், பனி யில் தாக்குப்பிடிக்கும் உயி ரினங்களும்தான். அதனால் தான் அது அமைதியாக இருக்கிறது. ஒருவேளை அன்டார்டிகாவில் விலை மதிப்புமிக்க கனிமம் கிடைத்து, அதற்கு நாடுகள் அடித்துக்கொள்ள ஆரம்பித்தால் அன்டார்டிகாவின் அமைதியும் காணாமல் போய்விடும்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45
தைப்பொங்கலை மோடி பொங்கல் என்று அழைக்கிறார்களே பா.ஜ.க. கட்சியினர்?
தைத் திருநாள் உழவர் திருநாள். கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நாள். அதில் குறியீடாக தி.மு.க.வின் சின்னம் வருவதால், மோடி பொங்கல் என்று சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள்போல. கட்சிப் பைத்தியக்காரத் தனங்களை ஓரம் கட்டிவிட்டு, நாம் பொங்கலைக் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியதுதான்.
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு
தன்னைக் கைதுசெய்ய வந்த போலீசாரைப் பார்த்து ஆடையைக் களைந்திருக்கிறாரே பா.ஜ. பெண் நிர்வாகி?
படத்தில் வடிவேலு காமெடியில் பார்த்தது நிஜமாகவே மாறியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் நில ஆக்கிரமிப்பு புகாரில் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரைக் கைதுசெய்யப் போகும்போது, தனது ஆடைகளைத் தானே களைந்து அரை நிர்வாணமானதுடன், போலீசாரின்மேல் பழியையும் போடமுயன்றி ருக்கிறார். வழக்கமாக சொந்த வாகனத்துக்குத் தீவைத்துவிட்டு, பிற கட்சிகளின் மீது பழிபோட்டுக்கொண்டிருந்தனர். இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர் பா.ஜ.க. நிர்வாகிகள்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் ஆதரவுடன் வெற்றிபெற்ற நகராட்சி பா.ஜ. தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறி யிருக்கிறாரே?
கிட்டத்தட்ட மும்பை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகளுடன் 84 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி. 72 இடங்கள் வரை வெற்றிபெற்று இரண்டாவது இடத்தில் உத்தவ் சிவசேனா கூட்டணி. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மிச்சசொச்சமுள்ள இடங்களில் கோட்டைவிட்ட பா.ஜ.க. தலைவர்கள்மீது நடவடிக்கை என அறி வித்திருக்கிறார் பட்னாவிஸ். ஆனால், மும்பை உள்ளாட்சித் தேர்தலில் விரலில் பல இடங்களில் அழியாத மை வைப்பதற்குப் பதிலாக, சாதாரண மார்க்கர் பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, அழிகிற மையைப் பயன்படுத்தியதன் மூலம் கள்ள ஓட்டுகள் புழங்கியிருக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. பா.ஜ.க. மீது யார் நடவடிக்கை எடுப்பது?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/mavali-2026-01-19-16-58-36.jpg)