த.சத்திய நாராயணன், அயன்புரம் 


அரசு ஊழியர் களுக்கு இருப்பதுபோல அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு வயது நிர்ணயித்தால்?

Advertisment

நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றுவது யார்? அரசியல்வாதிகள்தானே. அவர்கள் தங்களுக்குத் தாங்களே சூன்யம் வைத்துக்கொள்வார்களா?

Advertisment

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

இந்தியாவில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே உள்ளது என்ற பா.ஜ.க. எம்.பி அனுராக்சிங் தாக்கூரின் பேச்சு?

அவர் பேசி தகவலைப் பகிர்ந்துகொள்கிறாரா... இல்லை, இந்துத்துவ தொண்டர்களுக்கு "இப்படியொரு மாநிலம் இருக்கிறது. கொஞ்சம் கவனிச்சுக்கோங்க' எனப் போட்டுக் கொடுக்கிறாரா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தமிழக பா.ஜ.க.விலும் கோஷ்டி மோதல் வலுத்துவருவது பற்றி?

அகில உலகத்திலும் கோஷ்டி மோதல் இல்லாத கட்சியென்பது கிடையவே கிடையாது. கோஷ்டி மோதல் அளவோடு இருக்கும்போது ஒருவிதத்தில் போட்டி போட்டுக்கொண்டு கட்சி வளரவும் வழிசெய்யும். ஆனால் இந்த கோஷ்டி மோதல் வலுக்கும்போது கட்சி பலவீனமாகும். தமிழக பா.ஜ.க. வலுவாகிறதா... பலவீனமாகிறதா என்பதை தேர்தல் ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்.

சிவராம சுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி

தேர்தல் சீசனுக்கு மட்டும் அமித்ஷா தமிழகம் வந்துசெல்வார் என கார்த்தி சிதம்பரம் நக்கலடித்திருக்கிறாரே?

கார்த்தி சிதம்பரமும், சசிதரூரும் எந்தப் பக்கம் பேசுவார் களென கணிக்கவே முடியாது. எந்தக் கணத்திலும் சேம் சைடு கோலடிப்பார்கள். திடீரென அமித்ஷா பக்கம் பாய்ந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். அமித்ஷாவைக் குற்றம்சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டார். அமித்ஷா, தமிழகத் தொகுதி எதிலும் நின்று வென்று பாராளுமன்றம் போகவில்லை. அதனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வந்துசெல்கிறார் என்று சொல்ல நியாயமில்லை.

mavali1

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி லியோனல் மெஸ்ஸி அணியுடன் கால்பந்து போட்டியில் விளையாடி அசத்தியுள்ளாரே..?!

அதெல்லாம் புரமோஷன் ஈவண்ட். அழைத்து வரும்போதே ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். மெஸ்ஸி மாதிரி சர்வதேச கால்பந்து வீரருடன் வெறுமனே செல்ஃபியா எடுக்கமுடியும்? தெலுங்கானாவி லிருக்கும் மெஸ்ஸி ரசிகர்களிடையே  ரேவந்த் ரெட்டிமீது இப்போது ஒரு சாஃப்ட் கார்னர் உருவாகியிருக்குமல்லவா! அரசியல்வாதிகளின் நிகழ்வுகளில் பலவும், "அடடா, இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா, தில்லானா மோகனாம்பாள் சிவாஜி- பத்மினியைப் பார்க்கிற மாதிரி இருக்கு'ன்னு "கரகாட்டக்காரன்' படத்தில் துணை நடிகர் சொல்வாரே, அதுபோல ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள்தான்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலுள்ள காந்தி பெயரை நீக்கிவிட்டு விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்று பெயர்மாற்றம் செய்துள்ளதே ஒன்றிய அரசு...?

முதலில் இந்தத் திட்டம் ஊழல் திட்டம், பயனில்லாத திட்டம் என பா.ஜ.க. அரசு விமர்சித்தது. கடந்த பத்தாண்டுகளாகவே இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதைக் குறைத்துவந்தது ஒன்றிய அரசு. சமீபகாலமாக பொருளாதாரரீதியான சரிவிலிருக்கும் இந்தியாவுக்கு இந்தத் திட்டம் அவசியம் என யாரோ எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். வேறுவழியில்லாமல், திட்டத்தின் பெயரில் அவர்கள் வெறுக்கும் காந்தியின் பெயரை எடுத்துவிட்டு, பெயரையும் இந்தியில் மாற்றி, திட்டத்துக்கான நிதியிலும் பாதியை மாநிலங்களின் தலையில் கட்டி அடித்தாடியிருக்கிறது மோடி அரசு.

க.அருச்சுனன், செங்கல்பட்டு

சில டி.வி.களில் மூட நம்பிக்கை வளர்க்கிற மாதிரி விளம்பரங்கள் வருகின்றனவே, அரசு தடை போடமுடியாதா?

காவி அரசு, பகுத்தறிவை வளர்க்கிற மாதிரி விளம்பரங்கள் இருந்தால் தடைபோடுமே தவிர, மூடநம்பிக்கையை வளர்க்கிற மாதிரி இருந்தால் தடைபோடாது.

கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

நடிகை பலாத்கார வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டிருக்கிறாரே?

விடுங்கள். அதை அந்த நடிகையும் கேரள அரசும் மேல் முறையீட்டில் பார்த்துக்கொள்வார் கள். தவிரவும், கேரள காவல்துறை திலீப்தான் இந்த சதியைத் திட்ட மிட்டார் என நிரூபிக்கத் தவறி விட்டது என நீதிபதி குறிப்பிட்டி ருக்கிறார். வெறுமனே குற்றம் சாட்டி வழக்குப் பதிவுசெய்தால் மட்டும் ஒருவர் குற்றவாளி யாகிவிடமாட்டார். அரசுத் தரப்பில் வழக்கை நிரூபிப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.