அ.ராஜாரகுமான், கம்பம்

மல்லை சத்யா புதுக்கட்சி தொடங்கியிருப்பது பலனளிக்கும் என்று நினைக்கலாமா?

Advertisment

தானிருக்கும் சொந்த தொகுதியைத் தாண்டி ஓட்டுக்கள் விழாதென்பது அவருக்கும் தெரியும். இருக்கிற பிரபலத்தை வைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சியில் அடைக்கலம் ஆவதுதான் அவருக்கு நல்லது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியது நான். ஆனால் பெயர் வாங்கிக்கொண்டது ஸ்டாலின் என்கிறாரே அன்புமணி...?

பிறகென்ன, கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலிடம் சொல்வது போல், இதை கல்வெட்டுல வெட்டி வச்சுக்கிட்டு பக்கத்து லே படுத்துக்கொள்ள வேண் டியதுதான். ஆட்சி மாறி ஆட்சி வரும்போது, முந்தைய அரசின் சாதனைகளுக்கே வரும் அரசு கல்வெட்டில் பெயர் போட்டுக்கொள் கிறது. அப்போதுகூட அந்தப் போராட்டத்தில் முனைப்பாய் நின்ற அப்பகுதி மக்க ளுக்கு கிரெடிட் டைக் கொடுக்க மனது வருகிறதா பாருங்கள்! 

Advertisment

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை

மாடுகள், மரங்கள் மாநாட்டைத் தொடர்ந்து மலைகள், ஆறுகள், கடல்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறுகிறாரே சீமான்?

மாடுகள் மாநாட்டுக்கு, மாடுகளைப் பிடித்துவந்து கட்டி மாநாடு போட்டார். கடல்கள் மாநாட்டுக்கு சீமான் கடலுக்குள் போவாரா,… இல்லை கடலை நிலத்துக்குள் அழைத்து வருவாரா என இப்போதே பீதியாய் இருக்கிறதே.

mavali1

சிவா, கல்லிடைக்குறிச்சி

இந்தியாவைக் கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது என மோகன் பகவத் கூறியிருப்பது பற்றி?

Advertisment

நம் நாட்டைக் குறித்து நமக்கு உயர்வு மனப்பான்மை இருக்கலாம், தவறில்லை. அதற்காக யதார்த்தத்தைக் காணத் தவறக்கூடாது. இந்தியா வைக் கண்டு அமெரிக்கா அஞ்சவேண்டுமென்றால், அமெரிக்காவைவிட இந்தியா பெரிய பொருளா தாரமா, அமெரிக்காவைவிட பெரிய படை பலத்தையோ, இல்லை அழிவு பயக்கும் போராயுதத்தை வைத்திருக்கிறோமா?… இரண்டுமே இல்லையென்பதுதான் யதார்த்தம். அமெரிக்காவை விட்டால் ரஷ்யா, ரஷ்யாவை விட்டால் அமெரிக்கா என இரு நாடுகளிடம்தான் இந்தியா ஏவுகணைகள், விமானங்கள் வாங்குகிறது. இந்தியாவின் ஜி.டி.பி.யை விட அமெரிக்காவின் ஜி.டி.பி. ஏழரை மடங்கு அதிகம். மற்றபடி பகல் கனவு காணுவது நம் சௌகரியம்.

வைரபாலா, மன்னார்குடி 

கார்கள் விலை குறைப்பு பட்டியலுடன் பிரதமர் படத்தை வைக்கச் சொல்கிறதே ஒன்றிய அரசு?

நம் ஊர் அரசியல்வாதிகள் பேனர், போஸ்டர், ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதில் விருப்பமுடையவர்கள். அதில் மற்றவர்கள் எல்லாம் சின்னஞ்சிறு குன்றுகள் என்றால், மோடிதான் இமயமலை. கொரோனா சான்றிதழ், ரயில் நிலையத்தில் மோடி கட்அவுட், நாளிதழ் விளம்பரங்கள், அரசின் சாதனைகள் என, சுதந்திர இந்தியாவில் எவரையும் விட அதிகம் பயன்படுத்தப்பட்ட பிம்பம் மோடியுடையதுதான். ஜி.எஸ்.டி. விலைக்குறைப்பை முன்வைத்து கார் கம்பெனிகளின் கையாலேயும் விளம்பரம் தேடிக்கொள்ள முனைகிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

நேபாளத்தை இந்தியாவுடன் காங்கிரஸ் இணைத்திருந்தால் நேபாளத்தில் இவ்வளவு பிரச்னை நிகழ்ந்திருக்காது என்று பீகார் துணைமுதல்வர் சொல்லியிருக்கிறாரே?

வாஸ்தவம்தான். இந்தியாவுடன் அமெரிக்கா வை இணைத்திருந்தால் இப்போது டேரிஃப் பிரச்சனை வந்திருக்காது. சீனாவை இணைத் திருந்தால் எல்லைப் பிரச்சனை தொந்தரவு வந்திருக்காது. இந்த காங்கிரஸ்காரர்கள் கொஞ்சமாவது முன்யோசனையுடன் செயல்படு கிறார்களா?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்           

"பணத்திற்கு எனக்கு பஞ்சமில்லை... எனது மூளையிலிருந்து வரும் யோசனைகள் மட்டுமே மாதம் 200 கோடி மதிப்புடையவை' என்கிறாரே நிதின் கட்கரி?

இத்தனை மதிப்புமிக்க மூளையை வைத்துக்கொண்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கம்பெனி வைத்து, மகனுக்கு மட்டும் ஆதாயம் தேடாமல், இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் சில லட்சம் கோடி ஆதாயம் பயக்கும் சில யோசனைகளை நிதியமைச்சருக்கு தட்டிவிடலாம்தானே!

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

அரசியல் தலைவர்கள் சிலர், வந்தேறிகளை விரட்டவேண்டும் என்கிறார்களே?

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழர்களை விரட்டுவார்களே பரவாயில்லையா! ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் குடியேறிய பிற நாட்டவர்களுக்கு எதிராக பேரணிகள் நடக்கின்றன. அதனால் பிரிவினை சிந்தனைகளுக்கு எதிராகச் சிந்திப்பதுதான் இக்காலகட்டத்துக்குப் பொருத்தமானது.