க.அஜித், வேளச்சேரி

நடிகர் பிராட் பிட் வீட்டி லேயே கைவரிசை காண்பித் திருக்கிறார்களே திருடர்கள்?

Advertisment

mavali1

சமீபத்திய படம் ஒன்றின் பிரமோஷன் நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருக்கிறார் பிராட் பிட். திரும்பிவந்து பார்த்தால் வீட்டில் பல பொருட்கள், பணம் மிஸ்ஸிங். போலீஸில் புகார் கொடுத்தார். இப்போது போலீஸ் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறதாம். கைதான கும்பல், பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் வீடாய்ப் பார்த்து திருடியிருக்கிறார்கள். கதை நல்லாயிருக்கு. கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்தா ஒரு ஹாலிவுட் படத்துக்கே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிடலாம். 

அ. பாமா, திருச்சி

கோவா ஐ.ஐ.டி.க்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மாநில அரசு கோவிலுக்காக ஒதுக்கிவிட்டதாமே?

Advertisment

தேர்தலின்போது பா.ஜ.க. அரசால் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று கோவா ஐ.ஐ.டி. இதனால் தற்காலிக மாக தெற்கு கோவாவிலுள்ள பொறியியல் கல்லூரியிலிருந்து கோவா ஐ.ஐ.டி. செயல்பட்டுவந்தது. இதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க வுள்ளதாக கோவா மாநில அரசு நிலம் தேடிவந்தது. இந்நிலையில் வட கோவாவின் குலேலி கிராமத்தையொட்டி 10 லட்சம் சதுர அடியைக் கண்டடைந்து ஐ.ஐ.டி.க்காக ஒதுக்கப்பட்டது. அரசு ஒதுக்கிய இடத்தில் ஒரு கோவில் இருக்க, அக்கோவிலைச் சேர்ந்தவர் கள் ஐ.ஐ.டி.க்கு நிலம் ஒதுக்கியதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்க, எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் கைகோர்த்தனர். பார்த்தது கோவா அரசு, இந்துத்துவ ஆதரவாளர்கள் என்ற பெயருக்கே மோசம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு 45,000 ச.அடியை கோவிலுக்கு ஒதுக்கிவிட்டது. ஐ.ஐ.டி. முக்கியமா...… கோவில் முக்கியமா!

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவுமில்லை என்று கூறுகிறாரே நிர்மலா சீதாராமன்..?

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதாக பா.ஜ.க. எங்கும் வாக்குறுதியளிக்கவில்லை. அதைக் கொண்டு வருவதால் ஒன்றிய அரசுக்கும் எந்த ஆதாயமும் இல்லை. பிறகெதற்கு நட்ட நடு ராத்திரியில் சுடுகாடு வழியாக போகப்போகிறார் நிர்மலா சீதாராமன்.

சிவா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

தெருக்களில் உள்ள நாய்களை அகற்றினால் எலித் தொல்லை பெருகும் என மேனகா காந்தி கூறியிருப்பது பற்றி?

நாய்கள் வேட்டை விலங்குகள். இரவு நேரம் எலி, பெருச்சாளிகளை வேட்டையாடு வதால் அவற்றின் பெருக்கம் தடைப்பட்டு பிளேக் போன்ற நோய்கள் பெருகுமெனக் கூறுகிறார் மேனகா காந்தி. நாய்கள் வேட்டை விலங்கு என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியும். ஆனால் அவை பெருச் சாளிகளை வேட்டையாடுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் நாய் விவகாரத்தில் நாய்களைக் கொன்றுகுவிப்பதோ, அல்லது தெருநாய்களுக்கெல்லாம் அரசு புகலிடம் அளிப்பதோ சிரமமான விஷயம். மாறாக, தெருநாய் களுக்கெல்லாம் மேனகா சொல்லும் கருத்தடையை மேற் கொள்ளலாம். அது தான் இரண்டுக் கும் இடைப் பட்ட வழி. நல்ல தீர்வு என்பது மாவலியின் கருத்து.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது என்கிற  மோடியின் அறிவிப்பு குறித்து...?

மனிதரை நம்பமுடியாது. தேர்தல் ஆணைய விவகாரம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்குதல்கள் பலவற்றால் ஜி.எஸ்.டி.யில் 12, 28 சதவீத பிரிவுகளை நீக்குவதாகச் சொல்கிறார். அடுத்த ஆறு மாதத்தில் அரசுக்கு வரவேண்டிய வரி சதவிகிதம் குறைந்தால் பெட்ரோலிலும், சமையல் எரிவாயுவிலும் போட்டுத் தாளித்து விடுவார்.

ப. கண்ணன், சிதம்பரம்

பங்குச் சந்தையில் பணத்தை இழந்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறாரே சென்னை யைச் சேர்ந்த ஒரு பெண்?

தவறான நிதி நிறு வனத்தில் முதலீடு செய் வது, பங்குச் சந்தையில் ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் போன்றவற்றில் பணம் போட்டு இழப்பது இது எல்லாவற்றுக்குமே அடிப்படை பேராசை. தவிர, பங்குச் சந்தையில் பணம் போட்டால் ஒன்றுக்கு நான்காக எடுக்கலாம் என ஆசை காட்டி மோசம் செய்ய வாட்ஸ் ஆப், முகநூல் என எல்லாப் பக்கத்திலும் ஆயிரக்கணக்கில் மோசடிப் பேர்வழிகள் திரிகின்றனர். பிக்பாக்கெட்டுகள் அருகிவிட்டனர். ஆனால் தொழில்நுட்பத்தின் வசதியால், விதவிதமான டெக் மோசடியாளர்கள் பெருகிவிட்டனர். நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவேண்டும்.