அன்னூரார் பொன்விழி, அன்னூர்
பீகார் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது தானா?
2025, அக்டோபர் 22-24 நக்கீரன் இதழில், பீகார் தேர்தல் குறித்த கட்டுரையின் முடிவில், "இப்போதைக்கு மஹாபந்தன் கூட்டணிக்கு முன்னால் இமயமலையைப் புரட்டும் பணி இருக்கிறது. மாறாக என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றியை மறு உறுதிப் படுத்தும் வேலை மட்டும்தான்'’ என்று குறிப்பிட்டி ருக்கும். விசேஷமான வியூகத்துக்குப் பதில் வழக்கமான தேர்தல் வியூகத்தில் இறங்கி கோட்டைவிட்டிருக்கிறது மஹாபந்தன் கூட்டணி. கூடவே, என்.டி.ஏ. கூட்டணிக்கு, கூட்டணிக் கட்சிகளோடு தேர்தல் ஆணையமும் பணியாற்றிய தால் பிரம்மாண்ட வெற்றி வாய்த்திருக்கிறது.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
அறிவாளிக்கு அறிவுரை, முட்டாளுக்கு அறிவுரை -என்ன வித்தியாசம்
நல்ல வாளியில் பிடிக்கும் நீருக்கும், ஓட்டை வாளியில் பிடிக்கும் நீருக்குமான வித்தியாசம்தான்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78.
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி யில் தீவிரவாத தாக்குதல் தொடங்கிவிட்டதே?
ஏதோ இந்த ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலே நடைபெறாத மாதிரியே பேசுகிறீர்களே உரியில் ராணுவ வீரர்களைப் பறிகொடுத்தோம். பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உயிர் சூறையாடப்பட்டது. பதான்கோட் விமானப்படை தாக்குதல், புல்வாமா தற்கொலைப் படை தாக்குதல், தண்டேவாடே குண்டுவெடிப்பு என நீண்ட பட்டியல் இருக்கிறது. தலைநகர் கூடுதல் பாதுகாப்பு இருக்கும் என்பதால், அதை நெருங்க தீவிர வாதிகள் அஞ்சுவார்கள். அதையும் மீறித் தாக்கி யிருக்கிறார்கள் என்றால், பாதுகாப்பிலும் கோட்டை விடப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கும் குளிர்விட்டுப் போயி ருக்கிறது.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சாதகமான தீர்ப்பு வராவிட்டால் நீதிபதி களுக்கு எதிராக அவதூறு பரப்புவது அதிகரித்து வருவது பற்றி வேதனை தெரிவித்துள்ளாரே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்..?
"நான் ஓய்வுபெற்றதற்குப் பின்தான் சில வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும்' என அரசு நினைக்கிறதா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்” என 2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் அரசியலமைப்புரீதியாகச் செல்லுபடியாகாதது என்று தொடரப்பட்ட வழக்கில் சீறியிருந்தார் கவாய். சட்டம் குறித்த அறிவுபெற்ற நீதிபதியே பொங்கும்போது, அதில் நடைமுறை அறிவில்லாதவர்கள், தவறான கற்பனைகளுக்குள் செல்ல இடமிருக்கிறதுதானே.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனீ
"டெல்லியில் அமர்ந்துகொண்டு மன்னர்கள் போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" என்று அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் கூறியுள்ளது குறித்து..?
இரவுகளில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்கள் நிலையை அறிந்து செல்லவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவுபோடவேண்டும் என்கிறாரா, இல்லை... சிறப்பு தீவிர திருத்தத்தை எளிமையாக்கவேண்டும் என்கிறாரா?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"அமெரிக்கர்களுக்கு திறமை இல்லை' எனக் கூறி ட்ரம்ப் சர்ச்சையில் மாட்டிக்கொண்டாரே?
அமெரிக்கர்களுக்கு அத்தனை திறமையிருந் திருந்தால், இன்னும் நல்லதொரு அதிபரை தேர்ந்தெடுத்திருக்கமாட்டார்களா? தவிர, மக்களும் ட்ரம்புக்கு திறமையில்லை என குற்றம்சாட்டலாம் தானே. அதனால் அமெரிக்கர்களுக்கு இருக்கும் திறமையை வைத்து அமெரிக்காவை முன்னேற்றும் வேலையைப் பார்க்கவேண்டியதுதான் ட்ரம்ப்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு
காவல்துறை தற்காப்புக்காக குற்றவாளிகளைப் சுட்டுப்பிடிக்கும் முறை வரவேற்கத்தக்கதுதானே?
தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் இருக்கும்போது... கை, கால்களை உடைப்பது, சுட்டுப் பிடிப்பது என்ற பெயரில் நீதிமன்றத்துக்கு வெளியில் தண்டனையளிக்கும் செயல்களை, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் ஆதரிக்கக்கூடாது. ஏனெனில், கொலைகாரன், பாலியல் குற்றவாளி, அரசியல்வாதி, பாமரன் என யாருக்கு வேண்டுமானாலும் காவல் துறை அதே திரைக்கதையை விவரித்துவிட்டு, துர திர்ஷ்டவசமாக குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் இறந்துவிட்டார் என்று சொல்லிவிடமுடியும்.
பி.ஓம்பிரகாஷ், சென்னை-66
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறதே?
அதுதான் பீகார் தேர்தல் முடிவு வந்து விட்டதல்லவா! அதை வைத்தே காங்கிரஸை, தி.மு.க. தலைமை சமாளித்துவிடும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/17/mavali1-2025-11-17-16-29-53.jpg)
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன்கள், டி.வி.யுடன் கைதிகள் இருக்கும் வீடியோ வைரலாகிறதே?
ஜெ. மறைவுக்குப் பின் சிறை சென்ற சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து கைப்பை சகிதம் ஷாப்பிங் கிளம்பிய விவரங்களையே நக்கீரனில் வெளிப்படுத்தியிருந்தோம். டி.வி., செல்போன்கள் வைத்திருப்பதெல்லாம் அதிசயமா!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/17/mavali-2025-11-17-16-29-35.jpg)