மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட் டதை நாங்களே சரிசெய்து தருகிறோம் என த.வெ.க. மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து...?
போராட்டத்தில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என போராட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தொண்டர்களின் மேல் அல்ல, கட்சியின் மீதே முத்திரை குத்தப்படும். கட்சி தொடங்கி ஆரம்பநிலையில் இருக்கும் விஜய்யும் அதன் மேல்மட்டத் தலைவர்களும் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஸ்டாலின் ஸாரி சொன்னதற்கு எதிராகப் போராட்டம் செய்யப்போய், விஜய் ஸாரி சொல்லும்படி ஆயிருக்கிறது.
அன்னூரார், பொன்விழி அன்னூர்
பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடிதானா... வேறு யாராவது லிஸ்டில் இருக்கிறார்களா?
அடுத்த பிரதமர் வேட்பாளர் என இதுவரை யாரையும் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. அறிவிக்க வில்லை. ஆனால் மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் தேர்தல் கமிஷன் துணையுடன் பா.ஜ.க. செய்துவரும் தகிடுதத்தங்களாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப் பார்த்தால், பேரில்லா பிச்சையைக்கூட நிறுத்தி பா.ஜ.க. பிரதமராக கொண்டுவந்துவிடும் போலிருக்கிறது. பிறகெதற்கு அவருக்கு பெயரும் புகழும். ஆர்.எஸ்.எஸ். ஆசீர்வாதம் இருந்தால் போதாதா?
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பது பற்றி?
காஷ்மீர் தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி யைப் பலவீனப்படுத்துவதற்காக குலாம் நபி ஆசாத் தைப் பயன்படுத்தினார்கள். இப்போது குலாம் பயன் படுத்தப்பட்ட கறிவேப்பிலை. எப்போதும் பயன் பாட்டுக்குப் பின் அது தட்டு ஓரத்திலோ, குப்பைத் தொட்டிக்கோ போவதுதானே நடைமுறை.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தகுதியானவர்கள் மட்டுமே வாக்களிக்க வாக்காளர் பட்டியலைத் திருத்துவது அவசிய மென்கிறதே தேர்தல் ஆணையம்?
வாக்காளர்களின் தகுதிகுறித்து, தேர்தலுக்கு நெருக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு திடீரென அக்கறை வந்தது ஏன்? தேர்தல் முடிவையே மாற்று மளவுக்கு அயல்நாட்டுக் குடிகள் இந்தியாவில் குடி யேறியிருக்கிறார்கள் என்றால், அதுவரை ஆட்சியிலிருந்த அரசு என்ன செய்தது? பீகார் மக்க ளின் குடியுரிமையில் தேர்தல் ஆணையம் திடீர் அக்கறை காட்டுவது ஏன்? பங்களாதேஷுக்கு நெருக்கமான அஸ்ஸாமில்தான், வெளிநாட்டினர் குடியேறியதாக அம்மாநில மக்களிடம் குடியுரிமை யைக் கேட்ட பா.ஜ.க. அரசு, போகிற போக்கைப் பார்த்தால், இந்தியா முழுமையும் குடியுரிமையைச் சோதிக்கும்போலத் தெரிகிறதே... பீகார் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்காக, அக்கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கும் தகுதியானவர்களை வடிகட்டத்தான் இந்தக் கெடுபிடியெல்லாம் என்றொரு தியரி ஓடுகிற தே... அது நிஜமா? என்று மாவலியிடமும் நிறைய கேள்விகள் இருக்கிறது. பதிலளிக்கத்தான் ஆளில்லை!
எச்.மோகன், மன்னார்குடி
தற்போதைய சூழலில் பகல் கனவு காணும் அரசியல்வாதி யார்?
எல்லா அரசியல்வாதிகளும்தான். அடுத்து நாம்தான் மா.செ., அடுத்து நாம்தான் எம்.எல்.ஏ., அடுத்து நமது ஆட்சிதான் என பகல் கனவு காணாவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி காலம் தள்ளுவது? அடுத்த முறை நாம்தான் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், அந்த நிராசையே அவர்களைப் பொசுக்கிவிடாதா?
வண்ணைகணேசன், கொளத்தூர்
மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு தமிழில் கடிதம் அனுப்பினால், தமிழிலேயே பதிலளிக்கப்படும் என்று நாடாளுமன்றக் குழு தகவலளித் துள்ளதே?
ஒரு கடிதம் அனுப்ப எத்தனை செலவாகப்போகிறது. நீங்களே அனுப்பிச் சோதித்துவிடுங்களேன்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை எது சக்திவாய்ந்தது?
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான 11 சான்றிதழ்களில் ஒன்றாகக்கூட ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆக, அரசியல்வாதிகள் நினைத்தால் ஒரு அட்டை சக்திமிக்கதாகும். அவர்கள் மறுத்தால் அதன் சக்தியும் போய்விடும். அசல் சக்தி அட்டையில் இல்லை. மத்தியில் ஆளும் அரசியல் வாதிகளிடம்தான்.
எஸ்.ராஜா, பூந்தமல்லி
முதல்வரையே சுவர் ஏறிக்குதிக்க வைத்துவிட்டார்களே?
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரிலுள்ள தியாகிகளின் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தவே தடை விதித்து வீட்டுக்காவலில் வைத்திருக் கிறார்கள். நாளை சாவர்க்கர், கோட்ஸே தவிர்த்து காந்தி, நேருவை சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று சொல் லக்கூட தடைபோடுவார் கள்போல!