Advertisment

மாவலி பதில்கள்! 18.02.26

mavali


எஸ்.ஏ.ஃபயாஸ், குடியாத்தம் 

நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஒட்டகங் களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளதே..?

Advertisment

ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கை உதவும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒட்டகம், சவூதி அரேபியாவின் தேசிய விலங்கு. பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படுவது. இன்றைக்கு நவீன வாகனங்கள் வந்துவிட்டன. ஆனால் அன்று ஒரு பாலைவனத்தைக் கடக்க ஒட்டகத்தைவிட சிறந்த துணை கிடையாது. இதனை ஒட்டகங்களைக் கௌ ரவப்படுத்தும் நடவடிக்கையாகத்தான் பார்க்கவேண் டும். ஒட்டகங்களுக்கு விருது வழங்குவதோ, பாஸ்போர்ட் வழங்குவதோ அதை சந்தோஷப்படுத்தப் போவதில்லை. ஆனால் மனிதர்கள் ஒட்டகங்களைக் கௌரவித்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Advertisment

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

உண்மையிலேயே ராகுல்காந்திக்கு காங்கிரசை வளர்க


எஸ்.ஏ.ஃபயாஸ், குடியாத்தம் 

நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஒட்டகங் களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளதே..?

Advertisment

ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கை உதவும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒட்டகம், சவூதி அரேபியாவின் தேசிய விலங்கு. பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படுவது. இன்றைக்கு நவீன வாகனங்கள் வந்துவிட்டன. ஆனால் அன்று ஒரு பாலைவனத்தைக் கடக்க ஒட்டகத்தைவிட சிறந்த துணை கிடையாது. இதனை ஒட்டகங்களைக் கௌ ரவப்படுத்தும் நடவடிக்கையாகத்தான் பார்க்கவேண் டும். ஒட்டகங்களுக்கு விருது வழங்குவதோ, பாஸ்போர்ட் வழங்குவதோ அதை சந்தோஷப்படுத்தப் போவதில்லை. ஆனால் மனிதர்கள் ஒட்டகங்களைக் கௌரவித்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Advertisment

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

உண்மையிலேயே ராகுல்காந்திக்கு காங்கிரசை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லையா? 

அவ்வப்போது வெளிநாட்டுக்குச் செல்லும் ராகுலின் பயணங்களைத் தவிர அவரிடம் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. தேசத் தையே ஆண்ட கட்சி வீழ்ச்சியடைந்திருக்கிறது. அது மீண்டெழாதபடிக்கு பா.ஜ.க. பார்த்துக்கொள்கிறது. இப்போதைக்கு பா.ஜ.க.வையும் மீறி, காங்கிரஸை வளர்த்தெடுக்கும் உத்வேகமுள்ள தலைவர் தேவை என்று சொல்லலாம். அல்லது ராகுல் இன்னும் புதிய வியூகங்களை யோசிக்கவேண்டும்.


நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

நாட்டில் ஒருபோதும் இனி பாபர் மசூதி கட்டப்படாது என யோகி எந்த அர்த்தத்தில் கூறியிருக்கிறார்?

பாபர் மசூதி என்ற பெயரில் புதிதாக மசூதி யைக் கட்டவிடாமல் பா.ஜ.க. பார்த்துக்கொள் ளும் எனச் சொல்கிறார். ஒரு அரசின் சாதனைகளை அகற்றுவதும் மூடிமறைப் பதும்தான் சாதனை என ஆகிவிட்டால், நாளை பா.ஜ.க. அரசின் வெற்றிச் சின்னங்களுக்கும் சாதனைகளுக்கும் அதே கதிதான் நேரும் என்பதையும் யோகி மறக்கக்கூடாது. பாரசீகர்கள், கிரேக்கர்கள், ஹூணர்கள், அரேபியர் கள், துருக்கியர்கள், முகலாயர்கள், ஐரோப்பியர்கள், போர்த்துக்கீசியர் கள், பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் என எத்தனையோ பேர் இந்தியாவின் மீது படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அத்தனைக்கும் நினைவுச் சின்னங் களும் வரலாறும் உண்டு. அவை யனைத்தையும் இந்தியாவிலிருந்து அழிப்பதென்பது முட்டாள்தனம்!

என். இளங்கோவன். மயிலாடுதுறை.

ராமதாஸை சுற்றி சில துரோகி கள் உள்ளனர். அதில் முக்கியமான வர் ஜி.கே.மணிதான் என்று கூறுகிறாரே அன்புமணி..?

ஒருவேளை ஜி.கே.மணி, அன்பு மணி ஆதரவாளராக இருந்திருப்பார் என வைத்துக்கொள்வோம். அப்போது பிள்ளைக்குப் பதில் அப்பா, அன்பு மணியைச் சுற்றி சில துரோகிகள் உள்ளனர் என விமர்சித்திருப்பார். எப்படியானாலும் ஜி.கே. மணி துரோகிதான். இரண்டு அணியிலும் இடம்பெறாமல் வேறு கட்சிக்குத் தாவியிருந்தாலும் பா.ம.க.வின் இரு அணியும் அவரை துரோகி என்றுதான் சொல்லியிருக்கும். சில தலைவிதி களை மாற்றியெழுத முடியாது.

கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு கமல் அளித்த பதில் எப்படி?

கமல் தன் கடமை யைச் செய்துவிட்டார். ஆனால் மிச்சமுள்ள ஏழரைக் கோடி தமிழர்கள் தங்கள் கடமையை மறக்கக்கூடாது! அந்தக் கட்சியினர் இந்தத் தேர்தலில் ஓட்டுப் பிச்சைக்கு வரும்போது, உங்கள் வாக்குகளால் தக்க பதில் மரியாதை செய்யுங்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

சிறுபான்மையினருக்கு என்ன செய்தீர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கூறுகிறாரே அ..மலை...? 

வெள்ளை அறிக்கை விடாவிட்டாலும்கூட, பாபர் மசூதி விவகாரம் முதல் வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் முதல், தேசிய குடியுரிமைச் சட்டம் வரை பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எத்தனை எத்தனை நன்மை(?) செய்திருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாகவே அறிவார்கள். அந்த நன்மையின் தாக்கம் தங்களைப் பொசுக்கிவிடக்கூடாது என்பதற்காக எஸ்.ஐ.ஆர். திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் பெரும்பான்மையான பெயர்களும் சிறுபான்மையரில் இருந்துதான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். 

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

ஜெயலலிதா நினைவிடத்தில், “கூட்டணியில்லாமல் தனித்துநின்றே எதிரிகளைத் தோற்கடிப்பேன்” என சசி கலா சவால்விட்டிருக் கிறாரே?

தோற்கடிக்கிறாரோ… இல்லையோ… முதலில் பேசவேண்டும். அரசியல் வாதியின் சொத்து பேச்சுதான். பேசவே தயங்கினால் வேலைக் காகாது. பேசினால் தான் மக்கள் கவனிப் பார்கள். ஜெ.வுடன் ஆண் டாண்டு காலமாக இருந்து விட்டு இந்த எளிய உண் மையைக்கூட அறியாமல் இருப்பாரா மன்னார்குடி நாயகி!

nkn180226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe