Advertisment

மாவலி பதில்கள் 170925

mavali

 


ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

ஓ.பி.எஸ். மௌனமாக இருக்கிறாரே..?

mavali1

Advertisment

என்னவோ வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பக்கம் பக்கமாக வசனம் பேசிய மாதிரி ஓ.பி. எஸ்., அரசியலில் முழங்கிக் கொண்டிருந்ததுபோல் பேசுகிறீர்களே... அதிகம் பேசாமல் அடக்க ஒடுக்க மாய் இருந்ததால்தானே ஜெ.வே இருமுறை முதலமைச்சர் இருக்கை யைப் பத்திரமாக பார்த் துக்கொள்ளச் சொன்னார். அவருக்கும் சேர்த்துத்தான் செங்கோட்டையன் பேசு கிறாரே, போதாதா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

அரசியலில் எப்போ தும், எல்லோருக்கும் நல்லவ னாக இருக்க முடியாது என்கி றாரே பா.ஜ.க. மு.மா.த?

தொடக்கம் முதலே அவரை நக்கீரன் தொடர்ந்து அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது. இப்போது நிலம் வாங்கிய விவகாரத்தில் அவரே அம்பலமாகியிருக்கிறார். ரபேல் வாட்ச்

 


ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

ஓ.பி.எஸ். மௌனமாக இருக்கிறாரே..?

mavali1

Advertisment

என்னவோ வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பக்கம் பக்கமாக வசனம் பேசிய மாதிரி ஓ.பி. எஸ்., அரசியலில் முழங்கிக் கொண்டிருந்ததுபோல் பேசுகிறீர்களே... அதிகம் பேசாமல் அடக்க ஒடுக்க மாய் இருந்ததால்தானே ஜெ.வே இருமுறை முதலமைச்சர் இருக்கை யைப் பத்திரமாக பார்த் துக்கொள்ளச் சொன்னார். அவருக்கும் சேர்த்துத்தான் செங்கோட்டையன் பேசு கிறாரே, போதாதா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

அரசியலில் எப்போ தும், எல்லோருக்கும் நல்லவ னாக இருக்க முடியாது என்கி றாரே பா.ஜ.க. மு.மா.த?

தொடக்கம் முதலே அவரை நக்கீரன் தொடர்ந்து அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது. இப்போது நிலம் வாங்கிய விவகாரத்தில் அவரே அம்பலமாகியிருக்கிறார். ரபேல் வாட்ச் தொடங்கி திண்டுக்கல் புளியம்பட்டி செங்கல் சூளை என இப்போது பெரிய தொகைக்கு நிலம் வாங்கி அம்பலமாகியிருக்கிறார். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கமுடியாவிட்டால் கட்சிக்காரர்களுக்காவது நல்லவராக இருந் திருக்கலாம். அப்படியும் இல்லாததால் சிக்கிக் கொண்ட ஆடு, எப்போது பிரியாணி போடப்படும் என்று அவரது கட்சிக்காரர்களே சந்தோஷ மாயிருக்கிறார்கள்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும் என்கிறாரே நிர்மலா?

முதலில் ஜி.எஸ்.டி. போடாமலே இருந்திருந்தால் ஒவ்வொரு குடும்பமும் இன்னும் அதிகமாகப் பலனடைந்திருக் குமே! காப்பீட்டு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பால் கிடைக்கும் பணத்தை, பிரீமியத் தை அதிகரித்து சரிக்கட்டுவோம் எனச் சொல்கின்றன. சோப்பு, ஷாம்பு, பௌடர் தயாரிப்பாளர்கள், மிச்சமாகும் ஜி.எஸ்.டி. தொகைக்கு அதன் எடையை அதிகரிப்போமே தவிர காசெல்லாம் தரமாட்டோம் என்கிறார்கள். கார், டூவீலர் வாங்குபவர்கள் மட்டும்தான் வெளிப்படையாகப் பலனடைவார்கள் போலத் தெரிகிறது. எதற்கும் உங்கள் பழைய மளிகை பில் வைத்திருந்தால், கடந்த மாத பில்லோடு, அக்டோபர் மாத பில்லை ஒப்பிட்டு ஏதாவது லாபம் இருக்கிறதா என சரி பாருங்கள்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

மனைவிக்கு சொத்து, வருமானம் இருந்தால் ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

கணவனைப் பிரிந்ததால் மனைவி நிர்க்கதி யாகிவிடக்கூடாது. குழந்தைகள் அவள் வசமிருந்தால் அவர்களது எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஜீவனாம்சம். சொத்தோ, நல்ல வருமானமோ இருந்தால் எந்தப் பெண்ணும் கதியற்றவளாகப் போவதில்லை. குழந்தைகள் இருக் கும்பட்சத்தில், இருவரும் செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதுதான்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் மேலும் வரிவிதிப்பேன் என்கிறாரே ட்ரம்ப்?

எங்களிடம் எண் ணெய் வாங்கினால் இன் னும் இரண்டு, மூன்று டாலர் குறைப்பேன் என்கிறார் புதின். அம்பானிக்குப் பதில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங் கள் பெருமளவு சலுகை பெட்ரோலை வாங்கி, மக்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும் படிச் செய்யலாம்... ஆனால் அதைச் செய்யமாட்டார்கள்.

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

வேறு மாநிலங்களில் தமிழ் மொழியை யாராவது இழிவாகப் பேசினால் தமிழகத்தில் உள்ளவர்கள் இவ்வளவு கொதிப்பதில்லையே ஏன்?

மாறி மாறிக் கொந்தளித்து, பஸ்ஸை, ரயிலைக் கொளுத்தி, வியாபார நிறுவனங்களை மூடச் செய்வதால் யாருக்கு லாபம்? பதிலுக்கு, தமிழ்நாட்டில் பிற இந்திய மொழிகளை இழிவாகப் பேசினால் சரியாகிவிடுமா? பள்ளிக்கூடங்களில் ஒருபக்கம் பெற்றோரே ஆங்கில வழியில் சேர்த்துக்கொண்டிருக் கிறார்கள். மற்றொரு பக்கம் ஒன்றிய அரசு இந்தி யைத் திணிக்க மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கு உண்மையிலே தமிழ் மீது அக்கறையிருந்தால், பிள்ளைகளுக்கு பிழையின்றி தமிழ் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுத்தாலே போதும்.

பா.ஜெயப்பிரகாஷ் -அரண்மனைப்புதூர், தேனி

"இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியா பேச்சு வார்த்தைக்கு வரும்'' என்று அமெரிக்க வர்த்தக அமைச் சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளது குறித்து?

நான்கு லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தகம். அப்படி ஈஸியாய் விட்டுவிட முடியாது. எப்படியும் வழிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கைதான்.

nkn170925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe