ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்
பீகார் SIRதான் இப்போ ஹாட் டாபிக்கா?
பீகார் எஸ்.ஐ.ஆரைவிடவும் டெல்லி செய்தியாளர் சந்திப்பில் ராகுல் அம்பலப் படுத்திய ஆதாரங்கள்தான் இப்ப ஹாட் டாபிக். பீகார், ஒடிஸா என வரிசையாக மாநிலங்கள் ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தின் காலரைப் பிடித்து உலுக்க ஆரம்பித் திருக்கின்றன.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஒரு தொழில் செய்பவர் யாரை நம்பவேண்டும்? யாரை நம்பக்கூடாது?
அப்படி முன்கூட்டியே பட்டியல் போட்டு எடுத்துப்போய் தொழில் செய்யமுடியாது. தொழில் செய்பவருக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். தன் வாடிக்கையாளர்களை நம்பவேண்டும். தெளிவும், விழிப்புணர்வும் இருந்தாலே யாரை நம்பவேண்டும், நம்பக்கூடாதென்ற தெளிவு வந்துவிடும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
புத்தகம் பார்த்து தேர்வெழுதும் முறையை அறிமுகப்படுத்துகிறதாமே சி.பி.எஸ்.இ?
நெட்டுரு போட்டு மனப்பாடம் செய்யும் முறைக்கு மாற்றாக இந்த முறையைக் கொண்டுவருமாயிருக்கும். சி.பி.எஸ்.இ. புத்தகங்கள் கனமாக, பரந்த பாடத்திட்டங் களுடன் இருக்கும். நீங்கள் அவ்வப்போது பாடங்களைப் படித்திருந்தால்தான், பார்த்து எழுதும்போதுகூட எது எந்தப் பக்கத்தில் இருக்கும் என தெரியும். தேர்வன்று உட்கார்ந்து, புத்தகத்தைப் புரட்டினால் இரண்டு கேள்விக்கு பதில் தேடுவதற்குள் தேர்வு முடிந்து போயிருக்கும்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தர தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது?
ஏற்கெனவே முடிந்த தேர்தலில் செய்த குளறுபடிகளையே மாநிலவாரி யாகப் போட்டு தேர்தல் ஆணை யத்தைப் புரட்டிக்கொண்டிருக்கிறார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை வைத்து கதவு எண் 0 வந்த 3 லட்சம் வாக்காளர் களைக் காட்டி உச்சந்தலை வீங்குமளவுக் குக் குட்டுகிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்ற பழ மொழியை மறந்திருக்கமாட்டீர்கள்தானே!
என்.இளங்கோவன், மயிலாடுதுறை
அடுத்த நாடுகள் மீது வரிவிதிப்ப தால் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தமுடியாது என்று கூறுகிறாரே அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே?
ஸ்டீவுக்கு புரிந்து என்ன பயன்? நம் அதிர்ஷ்டம் ட்ரம்ப்தானே அமெரிக்க அதிபராக இருக்கிறார்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் மினிமம் பேலன்ஸை 50,000 ஆக உயர்த்தியிருப்பது பற்றி?
இருக்கிற வாடிக்கையாளர் போதும். இல்லை ராயல் கஸ்டமர் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. இதையெல்லாம் அனுமதிக்கிறதல்லவா ரிசர்வ் வங்கி, ஆக அரசின் ஆதரவோடுதான் இது நடக்கிறது போலிருக்கிறது. ஹோட்டலிலே பைவ் ஸ்டார் ஓட்டல்போல, வங்கிகளில் பைவ் ஸ்டார் வங்கியாக அவதார மெடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்திவருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளதே உயர்நீதிமன்றம்?
அதுசரி. பா.ஜ.க. ஆட்சியிலில்லாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் இணை அரசாங்கத்தை நடத்தவில்லையா? அதுவும் காஷ்மீர், டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களில் அரசே இரண்டாவது இடத்திலிருக்க, துணைநிலை ஆளுநர் கள்தானே முதலிடத்தில் இருந்தார்கள். அப்போதெல்லாம் இப்படி ஒரு குரல் எழுந்ததாக ஞாபகமே இல்லை.
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
கூலி படத்தின் மோனிகா பெல்லூசி பாடலை மாவலி கேட்டாரா?
ஓ! பாடலை மட்டுமல்ல! ஒரிஜினல் மோனிகா பெல்லூசி நடித்த படங்களையே பார்த்து ரசித்திருக்கிறார்.
ஆர்.கார்த்திக், ஜோலார்பேட்டை
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் மரணம் பற்றி?
ஆமாம், பா.ஜ.க. வினரை திரும்பத் திரும்ப அம்பலப்படுத் திக் கொண்டேயிருந்தார். ஆனால் அவரே முன் னாள் பா.ஜ. கட்சி உறுப்பினர். பா.ஜ.க. வினர் பேசிய வச னங்களையெல் லாம் முன்பு பேசியவர். பா.ஜ.க. தய வால் ஆளுநர் ஆனவர் என்ப தால், கட்சியில் அவர் கேட்டது கிடைக்காமல் இந்தக் குற்றச் சாட்டுகளை அடுக்குகிறார் என்று அதிகம் பொருட் படுத்தப்படாமல் விடப்பட்டன அவரது குற்றச்சாட்டுகள்.