வைரபாலா, மன்னார்குடி
பாண்டிச்சேரி கூட்டணி ஆட்சியில் என்.ஆர். காங்கிரஸ் முதல்வர் ரெங்கசாமி படும்பாட்டைப் பார்த்தாவது எடப்பாடி தப்பித்துக் கொள்வாரா?
கிளி வளர்ப்பவர்கள் முதலில் அதன் சிறகுகளைக் கத்தரித்துவிடுவார்கள். பிறகு அதைக் கூண்டிலும் அடைத்துவிடுவார்கள். கிக்கி கிக்கி என கிளி கத்தலாம். அவ்வப் போது அதற்கு பழமும் பருப்பும் கொடுப்பார் கள். ஆனால் சுதந்திரம் மட்டும் கொடுக் கமாட்டார்கள். எடப்பாடியும் அ.தி.மு.க.வும் இப்போது கூண்டிலடைக்கப்பட்ட கிளி.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
கார்கேவை ரிமோட் கண்ட்ரோல் தலைவர் என்று விமர்சித்துள்ளதே பா.ஜ.க.?
அங்கேயாவது கார்கே ஒருவர் தான் ரிமோட் கண்ட்ரோல் தலைவர். பா.ஜ.க.வில் பெரிய தலைகள் இரண் டையும் தவிர்த்துவிட்டால் மற்ற தலைவர் கள் எல்லாம், பெரிய தலைகள் ரிமோட் டுக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரிமோட்டுக்கும் இயங்கும் தலைவர்கள்தானே.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது பற்றி?
சபிஹ் கானைச் சொல்கிறீர் களா! முதலில் அவருக்கு வாழ்த்து. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளின் பெருநிறுவனங் களில் எத்தனையோ இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக வந்துவிட்டார்கள். அது பழகிப் போய்விட்டது. ஆப்பிளைப்போல உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் பெருநிறுவனங்களின் உரிமைதாரர்களாக இந்தியர் கள் உருவாகிவரவேண்டும். அடுத்த கட்ட வளர்ச்சி அதை நோக்கி அமைந்தால்தான் இந்தியாவும் அதன் பொருளாதாரமும் வளரும்.
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
மக்களவை, மாநிலங்களவை யில் எடுக்கப்படும் ஓட்டெடுப்பிலும் நோட்டா முறையை அறிமுகப்படுத்தி னால்?
வாக்கெடுப்பு நடக்கும் தினத் தில் அவைக்கு வரவில்லையென்றாலே அது நோட்டா போலத்தானே. பலமுறை கட்சிகள் மாநிலங்களவை, மக்களவையில் ஓட்டெடுப்பின்போது எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் இருந்த நிகழ்வுகள் உண்டு.
அ.கேசவன், ஸ்ரீவில்லிபுத்தூர்
இரண்டு கோடி உறுப்பினர் களைச் சேர்க்க விஜய் டார்கெட் கொடுத்திருக்கிறாராமே?
வாக்காளர்களில் பெரும்பகுதி எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாதவர்கள்தான். சிலர் கட்சி சார்புடையவராக இருந்தாலும், கட்சி உறுப்பினர், தொண்டர் என்று அடுத்தகட்ட சடங்குகளில் ஆர்வமில் லாதவராக இருப்பார்கள். கட்சிகள் தான், தங்களின் பிரமாண்டத்தையும், வேறெந்தக் கட்சியையும்விட தங்க ளிடம் அதிக உறுப்பினர்கள் இருப்ப தாகக் காட்டுவதற்காகவும், மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராகுங்கள். ஆன்லைனில் அடிப்படை உறுப்பின ராகுங்கள் என அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்கும். கட்சிப் பாகுபாடு இல்லாமல் இன்னொரு சம்பிரதாயமும் நடக்கும். மாவட்ட அளவிலான நிகழ்வு கள் நடத்தி, அந்தக் கட்சியிலிருந்து வந்து 1,000 பேர் இணைந்தார்கள், இந்தக் கட்சியிலிருந்து வந்து 2000 பேர் இணைந்தார்கள் என்று மார் தட்டிக்கொள்வார்கள். தொலைக் காட்சியின் பிரதான நிகழ்வுகளுக் கிடையில் வரும் விளம்பரங்கள் போன்றவை இவை. சில கட்சியில் பிரதான நிகழ்வைவிட விளம்பரங்களுக்கான நேர ஒதுக்கீடு அதிகமாக இருக்கும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் 10 சதவீதம் கூடுதல் வரி விதித்திருக்கிறாரே?
பிரிக்ஸ் அமைப்பு, செங்கல் செங்கலாக உதிரும்வரை விடமாட்டார்போல!
எஸ்.கதிரசேன், பேர்ணாம்பட்டு
புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறாரே?
தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், ராஷ்மிகா புகைபிடிப்பார் என்று எதிர்பார்த்தா வருகிறார்கள். மற்ற விஷயங்களில் பாலிசியை மாற்றாமல் இருந்தால் சரிதான்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தாயின் பெயரால் ஒரு மரம் நடுவோம் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்திருக்கிறாரே?
அதெப்படி மற்றவருக்குப் பேர் போக மோடி விட்டுவிடுவாரா! அந்தத் திட்டத்தை ஏற்கெனவே மோடி அறிவித்துவிட்டார். இரண்டாவதாகத் தான் டெல்லி முதல்வர் அறிவித்திருக் கிறார். அம்மாவையே சரிவரக் கவனிக் காத தலைமுறை, அம்மா பெயரில் நடும் மரத்தை மட்டும் சரிவர பராமரித்து விடுவார்களா?.
க.நாராயணன், சிதம்பரம்
பாலியல் குற்றங் களுக்கு ஆண்மை நீக்க சிகிச்சை பற்றி இங்கிலாந்து யோசித்து வருகிறதாமே?
அரபு நாடுகள் மேற்கத் திய நாடுகள்போல மாறும் என எதிர்பார்க்கையில், மேற்கத்திய நாடுகள் அரபு நாடுகள்போல மாறிக் கொண்டிருக்கின்றன. கொடுமை!