Advertisment

மாவலி பதில்கள்! 15.11.25

mavali

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"தோசையைத் திருப்பிப் போடுங்க' என்கிறாரே லாலு?

ஆமாம், அவரும் எத்தனை நாளைக்குத்தான் பசித்த வயிற்றுடன் இருப்பார். கூடவே பிள்ளையின் வயிறும் காய்கிறதல்லவா! அதனால் மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

Advertisment

ஆர். கார்த்திக், சென்னை

பெண்கள், குழந்தைகளுக்கு தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பில்லை என்கிறாரே அ.தி.மு.க. கொ.ப.செ. வைகைச்செல்வன்?

Advertisment

எல்லா ஆட்சியிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி சில பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடக்கவே செய்யும். அதை ஆளும்கட்சியின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் நிறுவவே முயற்சிசெய்யும். அப்படியான நிகழ்வு            களில் அரசு, அதை மறைக்க முயற்சி செய்கிறதா.... விசாரிப்பதில் அக்கறை காட்டுகிறதா? தேசிய குற்ற ஆவணப் பிரிவின் பதிவின்படி         முந்தை

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"தோசையைத் திருப்பிப் போடுங்க' என்கிறாரே லாலு?

ஆமாம், அவரும் எத்தனை நாளைக்குத்தான் பசித்த வயிற்றுடன் இருப்பார். கூடவே பிள்ளையின் வயிறும் காய்கிறதல்லவா! அதனால் மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

Advertisment

ஆர். கார்த்திக், சென்னை

பெண்கள், குழந்தைகளுக்கு தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பில்லை என்கிறாரே அ.தி.மு.க. கொ.ப.செ. வைகைச்செல்வன்?

Advertisment

எல்லா ஆட்சியிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி சில பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடக்கவே செய்யும். அதை ஆளும்கட்சியின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் நிறுவவே முயற்சிசெய்யும். அப்படியான நிகழ்வு            களில் அரசு, அதை மறைக்க முயற்சி செய்கிறதா.... விசாரிப்பதில் அக்கறை காட்டுகிறதா? தேசிய குற்ற ஆவணப் பிரிவின் பதிவின்படி         முந்தைய ஆண்டைவிட இவ்வாண்டு பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா... இல்லையா என ஒப்பிட்டுத் தெளிந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

அ.தி.மு.க.வுக்கு எத்தகைய சோதனை வந்தாலும் எதிர்கொள்வேன் என்கிறாரே எடப்பாடி?

அவரால் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ்., புகழேந்தி, தினகரன் போன்றோர், அ.தி.மு.க.வுக்கு வந்த சோதனையே எடப்பாடிதான் என்கின்றனர். இதற்கென்ன பதில் சொல்வார் எடப்பாடி?

கே.எம். ஸ்வீட்முருகன், கரடி கொல்லப்பட்டி

10 வயது முதல் 13 வயதுக்குட்பட்டோரில் 51% பேர் செல்போன் உபயோகிக்கிறார்கள் என அதிர்ச்சிப் புள்ளிவிவரம் வந்துள்ளதே?

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்பது நியூட்டனின் விதி. இதற்கு எதிர்வினையாக எதிர்கால சந்ததி கண் பார்வைக் குறைவு, கழுத்தெழும்புத் தேய்மானம், மன பாதிப்பு, புரிந்துகொள்வதில் குறைபாடு, நடத்தை மாறுபாடு என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும். எந்த நாடுகளெல்லாம் செல்போன் பயன்பாட்டுக்கு வரம்பு விதிக்கிறதோ, அந்நாட்டின் மக்கள் ஓரளவுக்கு விளைவுகளிலிருந்து தப்பிப்பர்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

உலகை 150 முறை அழிக்கத் தேவையான குண்டுகள் எங்களிடம் உள்ளது என்று ட்ரம்ப் கூறியுள்ளாரே?

ஒருமுறை அழித்தாலே, அது நாகரிக சமூகமாக மீண்டும் உருவெடுத்து வர பல நூற்றாண்டுகள் ஆகும். 150 முறை அழித்து, பூமியின் அஸ்தியை எங்கே கொண்டுபோய் கரைப்பாராம்? ஏற்கெனவே ஜப்பான் மேல் அணுகுண்டு வீசிய நாடுதானே அமெரிக்கா.

ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

கமல் தயாரிப்பில் ரஜினி படம் -இதெப்படி இருக்கு?

கேட்க நல்லாத்தான் இருக்கு. படம் தயாரித்து ரிலீஸாகாட்டும். பார்க்க எப்படி இருக்குன்னு சொல்றேன்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தவேண்டும் என்று தமிழிசை சொல்கிறாரே?

பெப்பர் ஸ்ப்ரேயும் ஆயுதம்தான். காவலன் செயலியும் கூட ஒருவகையில் ஆயுதம்தான். அதுவே பெரும்பான் மையான சூழலுக்குப் போதுமானது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணைச் சீரழித்ததோடு, அவள் வழக்குத் தொடுத்ததற்காக தந்தை, அத்தையைக் கொன்று, வழக்கறிஞருக்கு காயமேற் படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டு களுக்கு ஆளான குல்தீப்சிங் செங்கர் மாதிரி நபர்களுக்கு எதிராக கத்தி, துப்பாக்கி வைத்திருந்தால்கூட சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

இன்னொரு வாய்ப்புக் கொடுங் கள், பீகாரை வளமாக்கிக் காட்டு கிறேன் என்று நிதிஷ்குமார் பேசி யிருக்கிறாரே?

இந்த முறை வெற்றிபெற்றால் ஒன்பதாவது முறையாக பீகாரின் முதல்வராவார் நிதிஷ்குமார். 2005 முதல் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்தான் இருக்கிறார். தொடர்ச்சியாக முதல்வர் பதவி வாய்ப்பது வெகுசில ருக்குத்தான். மக்கள் நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிவிட்டு, இன்னொரு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்க அசிங்கமாக இல்லையா?.

எஸ். இளையவன், சென்னை

ராஜஸ்தான் தொழிலதிபர் ராகுல் தனேஜா, தன் மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய காருக்கு பேன்சி நம்பர் வாங்க ரூ.31 லட்சம் செலவிட்டாராமே?

கிட்டத்தட்ட 6 குறைந்த விலை காருக்கான தொகையை மகனுக்கான பேன்சி நம்பர் வாங்கச் செலவிடுகிறார் இந்தியத் தொழிலதிபர். சாதாரண இந்தியர்கள், கடைசி ரூபாயையும் பிதுக்கியெடுத்து தங்கள் டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டி ருக்கின்றனர். பணமில்லாதோருக்கும் பணம் படைத்தோருக்குமான இடைவெளி இந்தியாவில் அதிகரித்தபடியே செல்கிறது.

nkn151125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe