Advertisment

மாவலி பதில்கள் 14.02.25

mavali


எச்.மோகன், மன்னார்குடி 

எல்லா இடங் களுக்கும் நைட்டி யுடனே வலம் வரு கிறார்களே பெண் கள்?

ஆண்களில் பலர், லுங்கியுடனே எங்கும் சென்றுவர வில்லையா! இன்னும் பலர் ஷார்ட்ஸ் அல் லது ட்ராக் பேண்டு டன் காணப்படுகின்ற னர். தவிரவும் நைட்டி ஒன்றும் மோசமான ஆடை கிடையாது. ஒருவேளை நம் வீட்டுப் பெண்கள் எல்லா இடத்திலும் நைட்டியுடன் இருப் பதை விரும்பவில்லை என்றால் நாம்தான் பேசிச் சரிசெய்ய வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக, எது தனக்குப் பொருத்தமான, வசதி யான உடையென் பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

உலகின் நிச் சயமற்ற அரசியல் சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்குகின்றன என்கிறாரே பிரதமர் மோடி?

Advertisment

ஒரு டேரிஃப் விவகாரத்தில் அடித


எச்.மோகன், மன்னார்குடி 

எல்லா இடங் களுக்கும் நைட்டி யுடனே வலம் வரு கிறார்களே பெண் கள்?

ஆண்களில் பலர், லுங்கியுடனே எங்கும் சென்றுவர வில்லையா! இன்னும் பலர் ஷார்ட்ஸ் அல் லது ட்ராக் பேண்டு டன் காணப்படுகின்ற னர். தவிரவும் நைட்டி ஒன்றும் மோசமான ஆடை கிடையாது. ஒருவேளை நம் வீட்டுப் பெண்கள் எல்லா இடத்திலும் நைட்டியுடன் இருப் பதை விரும்பவில்லை என்றால் நாம்தான் பேசிச் சரிசெய்ய வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக, எது தனக்குப் பொருத்தமான, வசதி யான உடையென் பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

உலகின் நிச் சயமற்ற அரசியல் சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்குகின்றன என்கிறாரே பிரதமர் மோடி?

Advertisment

ஒரு டேரிஃப் விவகாரத்தில் அடித்துப் பேசி சாதகமான முடிவை வாங்கத் தெரியவில்லை. இத்தனை பெரிய பேச்சுத் தேவையா? என எதிர்க் கட்சிகள் கும்மாங்குத்து குத்திக்கொண்டி ருக்கின்றன. இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தின்படி பால், பால்பொருட்களும் பிரதான இறக்குமதிப் பொருட்களாக இருக்கும் என்கிறார்கள். அதனால் அமுல் நிறுவனத்துக்கு சிக்கல். ஆனால் தனது அரசியல் அதிகாரத்தால், அமுல் நிறுவனத்தை நெருக்கி இந்திய- அமெரிக்க டேரிஃப் ஒப்பந்தத்தைப் பாராட்டி விளம்பரம் வெளியிட வைத்திருக்கிறார்கள். பங்களாதேஷுக்கு ஜவுளிக்கு 0% டேரிஃப். நமக்கு 18%. கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டினாலும், அதைப் பாராட்டி விளம்பரம் செய்ய தனி டீம் வைத்திருக்கிறார் மோடி.

ஆ.ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

2026 தேர்தல் களத்தில் தமிழக மக்கள் தெளிவாக இருப்பார்களா?

அதற்கு தேர்தல் களத்தில் எது தெளிவானது என்பதை முடிவுசெய்ய வேண்டுமல்லவா! சிலருக்கு தி.மு.க. கூட்டணி ஜெயித்து வருவது தெளிவாகவும், இன்னும் சிலருக்கு அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்து வருவது தெளிவாகவும் படும். விஜய் ஜெயித்தால் தமிழக மக்கள் தெளிவானவர்கள், சீமான் ஜெயித்தால்தான் மக்கள் சிந்திக்கிறார்கள் என ஆளாளுக்கு ஒரு கணக்கிருக்கும். எது தெளிவு என்பது ஆளாளுக்கு வேறுபடும் என்பதை மட்டும் புரிந்து கொள்வோம்.

எஸ். இளையவன், சென்னை

சீனாவைச் சேர்ந்த கியோவா என்பவர் பழைய சிம் கார்டுகளிலிருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத் துள்ளாரே?

எல்லாம் சரி, அவர் எத்தனை சிம் கார்டுகளிலிருந்து இந்த தங்கத்தைப் பிரித்தார் என படித்தீர்களா? கிட்டத்தட்ட 2,000 கிலோ மின்கழிவுகளிலிருந்து இந்த சாதனையைச் செய்திருக்கிறார். ஒரு சிம் கார்டில் தோராயமாக 0.001 கிராம் தங்கம் இருக்குமாம். 191 கிராம் தங்கத்துக்கு முதலில் 4,00,000 பழைய சிம்கார்டுகளைச் சேர்க்கவேண்டும். பின் அவற்றைப் பிரித்து உருக்கி, தங்கத்தை மட்டும் தனியே பிரிக்கவேண்டும். நமக்கெல்லாம் நான்கு லட்சம் பழைய சிம் கார்டு சேர்ப்பதற்குள்ளே வயதாகிவிடும். 

கே.வல்லவன், பேரணாம்பட்டு

திருவண்ணாமலை அருகே நாய்க்கு வளைகாப்பு நடத்திவைத்த தம்பதியின் செயல் எதைக் காட்டுகிறது?

அந்தத் தம்பதிகளின் விளம்பர மோகத்தை! நாய் கருத்தரித்தால் வழக்கத் தைவிட கூடுதலாக கொஞ்சம் பாலூற்ற லாம். கொஞ்சம் கறியெடுத்துப் போடலாம். அதைவிட்டு இதுபோன்ற நடவடிக்கை களெல்லாம் ஆடம்பரத்தையும் தன் அகங்காரத்தையும் வெளிக்காட்டுவதுதான்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ்,குடியாத்தம் 

பாகிஸ்தானில் ஒரு சவரன் தங்கம் ரூ.5 லட்சத்தைத் தாண்டியுள்ளதே?

ஏன், ஈரானில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்திருக்கலாமே! விலையைக் கேட்பவர்களுக்கு மயக்கம் வர வாய்ப்பாக இருக்கும்!. இந்தியாவின் 1 ரூபாயை வாங்க, பாகிஸ்தான் ரூ 3.10-ம், ஈரான் 12,000-ம் செலவிடவேண்டும். உங்கள் கரன்ஸியின் மதிப்பு இறங்க இறங்க தங்கம் விலை அதிகரிக்கும். யூரோவில் வாங்கினால் 1 சவரன் தங்கம் வெறும் 1,090 யூரோக்கள்தான்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

பாலாற்றில் குப்பைகளைப் போடு கிறோம், வேறுவழியில்லை என்கிறாரே வேலூர் மாநகராட்சி மேயர்?

பாலாறோ, காவிரியோ, கங்கையோ தன் வினை தன்னைச் சுடும். நாம் போடும் குப்பையின் அசுத்தங்களெல்லாம் நீரில் கலந்து, நிலத்தடி நீருக்குள் சென்று அதைத்தான் நாம் திரும்பப் பருகப் போகிறோம். விதைத்ததை அறுக்காமல் தப்பித்துவிட முடியாது.

nkn140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe