ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
வெட்கத்தைவிட்டுச் சொல்வது- என்பதற்கு விளக்கம் தர இயலுமா?
இயல்பான சூழ்நிலைகளில் ஒருவர் சொல்லத் தயங்கும் ஒன்றை இக்கட்டான சூழலில் சொல்வதுதான். பிள்ளைகள் கைவிட்டுவிடுகிறார்கள். வீதியில் திரியும் முதியவர்கள், இரண்டு மூன்று நாட்கள் பசியைப் பொறுத்துவிட்டு பிறகு, "சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க'’என்று கேட்பது. சொந்த ஊரை விட்டு பிழைப்புக்கு எங்கும் போகக்கூடாதென்பது உங்கள் லட்சியம். ஊரிலோ கஞ்சிக்குக்கூட வழி யில்லை. இந்நிலையில் வெளியூரில் ஒருவன் வேலைக்குக் கூட்டிச்செல் கிறான் என்றால், அவனிடம் உங்களையும் சேர்த்துக்கொள்ளச் சொல்வது என நிறைய சொல்ல லாம்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
ஐ.சி.சி. தொடர்களின் ஒளிபரப்பு உரிமையிலிருந்து விலக விரும்புவதாக ஐ.சி. சி.யிடம் ஜியோஸ்டார் நிறு வனம் தெரிவித்துள்ளதே..?
ஐ.சி.சி. தொடர்கள் அனைத்திலுமிருந்து ஜியோ ஹாட் ஸ்டார் விலக விரும்புகிறதா என தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் நடைபெறும் டி-20 தொடருக்கான ஒளிபரப்பு உரிமை யை வேறெவருக்காவது மாற்றும்படி கேட்டுள்ளது. முன்பு ரூ.12,319 கோடியாக இருந்த உரிமத் தொகையை 2024-25-ல் ரூ.25,760 கோடியாக உயர்த்தியது. ஆசைப்பட்டு உரிமத்தை வாங்கிய ஜியோ- ஹாட் ஸ்டாருக்கு பலத்த நஷ்டம். எனவே எங்களை விட்டுடுங்க என கெஞ்சுகிறது. ஆனால் இன்னும் மூன்று வருடம் கான்ட்ராக்ட் பாக்கியிருக்கிறது. ஜியோவுக்குப் பதிலாக சோனி, நெட்பிளிக்ஸ் போன்ற இதர சேனல்களை ஐ.சி.சி. கேட்டுப்பார்த்தும் இவ்வளவு காஸ்ட்லியாக உரிமத்தை வாங்கத் தயாராயில்லை. அதனால் ஜியோ ஹாட் ஸ்டார் கதறுகிறது.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடி எதற்கும் அடிபணியமாட்டார் என புதின் புகழாரம் சூட்டியிருப்பது எதற்காக?
சுற்றிவளைத்து, அமெரிக்க மிரட்டலுக்குப் பணிந்து எங்களிடம் பெட்ரோல் வாங்குவதை நிறுத்திடாதீங்க எனச் சொல்கிறார்.
வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
2026 தேர்தல் முடியும்வரை பிரதமரின் தமிழக விஜயத்தை அடிக்கடி பார்க்கலாமோ?
தாராளமாகப் பார்க்கலாம். அகநானூற்று, புறநானூற்றுப் பாடல் வரிகளைச் சொன்னால்தான் தமிழகத்தில் வெற்றிபெற முடியும் என பா.ஜ.க. வியூக அமைப்பாளர் யாராவது சொன்னால், தட்டுத் தடுமாறி திருக்குறளைப் பந்தாடியதுபோல், மோடி சங்கப் பாடல்களின் சங்கை நெரிப்பதையும் பார்க்கலாம்.
தே. மாதவராஜ், கோயம்புத்தூர்-45
நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை கட்சிகள் தாவத் தயாராக இருக்கிறார்?
அதை நாம் எப்படிக் கணக்கிடமுடியும்? இருக் கிற இடத்தில் பேட்டா, பிழைப்புக்குப் பிரச்சனை வராத வரை இந்த இடத்தி லேயே செட்டிலாகவும் வாய்ப் பிருக்கிறது. அந்தக் காலத்தில் மன்னரிடம் புலவர்கள் இரந்து நின்றதுபோல், இந்தக் காலத்தில் பேச்சுத் திறமையுள்ளவர்கள் கட்சிகளை அண்டிப் பிழைப்பு நடத்தியாகவேண்டியிருக்கிறது.
வாசுதேவன், பெங்களூரு
ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள் என்று சவுமியா அன்புமணி கூறியிருப்பது..?
வாஸ்தவம்தான். யாராவது ஒருவர் நாயகர்களை கட்சியில் தேடாதீர்கள் என்று சொல்லலாம். இப்போது போய்க்கொண்டி ருக்கிற காட்சிப் படி பார்த்தால், தந்தையையே தடுமாறவைத்து, மனம் கொந்தளிக்க வைக்கிற ஒருவரை மக்கள் நாயகர்களாக ஏற்றுக்கொள்ள முன்வருவார்களா?
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
இன்டிகோ விமான சேவை ரத்தால் மணமக்கள் இல்லாமலேயே ஒரு திருமண வரவேற்பு நடந்ததைப் பார்த்தீர்களா?
அது பரவாயில்லை. மரணம் நிகழ்ந்த இடங் களுக்கு நெருங்கிய உறவினர்கள் செல்லமுடியாதது, சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டியவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்குச் செல்லமுடியாதது, திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட இடத்தில் இருக்கமுடியாமல் தொழில்வாய்ப்பு நழுவியவர்கள், வேலைவாய்ப்பைக் கோட்டைவிட்டவர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். நியாயமாக, இண்டிகோ நிறுவன உரிமையாளர்கள் தண்டிக்கப் படவேண்டியவர்கள். அரசோ மௌனமாக நழுவப்பார்க்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/mavali1-2025-12-12-16-09-52.jpg)
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஏழு நாட்களும், தினசரி 24 மணி நேரமும் மக்களுக்காக பிரதமர் பணியாற்றுகிறார் என்று கூறுகிறாரே அமித்ஷா?
என்ன ஹோம் ஒர்க் செய்தோம் என்பது முக்கிய மில்லை. அதன் ரிசல்ட் என்ன என்பதுதான் முக்கியம். இந்திய கரன்ஸி விழும் வேகத்தை யும், ட்ரம்புடனான டேரிஃப் விவகாரத்தில் கடந்த நான் கைந்து மாதங்களாய் ஒரு முடிவுக்கு வரமுடியாததையும் பார்த்தால், ப்ராக்ரஸ் கார்டில் குட், வெரிகுட் போடமுடியாது போலத்தானே தோன்றுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/mavali-2025-12-12-16-08-26.jpg)