சிவா, கல்லிடைக்குறிச்சி

"காசாவை இஸ்ரேலுடன் இணைக்கமாட் டோம்' என இஸ்ரேல் பிரதமர் கூறியிருப்பது பற்றி?

Advertisment

நாளுக்கு 50, 100 என்று இஸ்ரேல் கொன்று குவிக்கும் வேகத்தைப் பார்த்தால், சில மாதங்களில் அனைவரையும் கொன்று தீர்த்துவிட்டு, பிறகு காசாவை இணைத்தால் கேட்பதற்கு யார் இருக்கப்போகிறார்கள்? 

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

கேரளாவில் முறையாக பணிக்கு வராத 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனரே..?

அவர்கள் பணிக்கு முறையாக வராதது உண்மையெனில், கேரள அரசின் நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை. தேவையெனில் மற்ற மாநிலங்களும் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றலாம்.

Advertisment

mavali1

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்வதை எதிர்ப் பதற்காகத்தான் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு 50% இறக்குமதி வரிவிதிக்கிறாரா?

ரஷ்யாவின் எண்ணெய் விற்பனைக்கு கட்டுப் பாடு விதிப்பதன் மூலம், எரிபொருள் விற்பனையின் ஏகபோகத்தை தன் வசம் வைத்துக்கொள்ள நினைக்கிறார். கூடவே, அடுத்தமுறை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதென்பதால் கொஞ்சம் கூடுதலாகவே கோமளித்தனம் செய்கிறார். ட்ரம்புக்கு சேணம் கட்டி, சரியான பாதையில் பயணிக்க வைக்கத்தான் அமெரிக்காவில் யாருக்கும் திராணியில்லை.

வைரபாலா, மன்னார்குடி 

Advertisment

பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு கள்ள உறவு நண்பருடன் செல்லும் அளவிற்கு தமிழகப் பெண்கள் மாறிவிட்டதைப் பார்க்க தங்களுக்கு என்ன தோன்று கிறது?

அற மதிப்பீடுகளும், நியாய உணர்வுகளும் புறந்தள்ளப்பட்டு... சுயநலமும், இன்பவெறியும் மிகுந்த காலத்துக்குள் உலகம் அடியெடுத்து வைத்திருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

குடந்தை பரிபூரணன், திருமலைராஜபுரம் 

ஆதார் அட்டையை நம்பகமான ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தமிழ்நாட்டுக்கும் தலைவலிதானே?

ஆமாம், நிச்சயம். தமிழக கட்சிகள் உடனடியாக உரிய தலைவலித் தைலத்தையோ, தலைவலி தீர்க்கும் மருத்துவரையோ கண்டுபிடிக்கவேண்டும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

"இந்திய பொருளாதாரம் செத்த பொருளாதாரம்' என்றிருக்கிறாரே ட்ரம்ப்?

ஆமாம், வல்லரசின் அதிபர் என்ற வாய்த்துடுக்கில் சொல்லிவிட் டார். ரோஷமிருந்தால் நிர்மலா சீதாராமனும் நம் பிரதமரும் செத்த பொருளாதாரத்தை எழுப்பி நடன மாடவைத்துக் காட்டவேண்டும். அதாவது 6 சதவிகிதத்தில் இருப்ப தாக நிதியமைச்சர் சொல்லிக் கொள்ளும் நம் பொருளாதார வளர்ச்சியை 9 சதவிகிதம் வரை உயர்த்திக்காட்டினாலே சாதனை தான்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நம் நாட்டில் தனியார் முதலீடு மந்தமாக உள்ளது என்கிறார்களே?

என்னதான் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் இருந்தா லும், மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவதில் முன்னணி யில் இருப்பவை சிறு தொழில் கள்தான். இந்தியாவின் வேலைவாய்ப்புகளில் 45 சத விகிதம் சிறு, குறு தொழில் களால் வருபவைதான். என்றைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வந்ததோ, அதுமுதலே சிறு, குறு தொழில்கள் தேயத் தொடங்கின. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு தாராளமாக அள்ளித் தந்து, கடனையும் தள்ளுபடி செய்யும் வங்கிகள் சிறு,குறு நிறு வனங்கள் என்றால் கடன்தர யோசிக் கின்றன. பிறகெப்படி சிறுகுறு தொழில் கள் கொழிக்கும்? பிறகெப்படி மக்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும்? பிற கெப்படி பொருளாதாரம் வளரும்? பொரு ளாதார வளர்ச்சி தேக்கநிலையில் இருக்கும் நாட்டுக்கு எப்படி தனியார் முதலீடுகள் அதிகளவில் வரும்?

எஸ்.இளையவன், சென்னை

ரேவண்ணா சிறையில், மற்ற அரசியல்வாதிகள் எப்போது?

ரேவண்ணா வசமாகச் சிக்கினார். மற்ற அரசியல்வாதிகள் வசமாகச் சிக்கும்போது சிறைபோவார்கள்.

எச்.மோகன், மன்னார்குடி

ஜாதி, மதமற்ற அரசியலை ஆரோக்கியமான அரசியல் எனக் கூறலாமா?

கூடவே ஊழலும் அற்ற என்ற வாக்கியத்தை உங்கள் கேள்வியில் சேர்த்திருந்தீர்களென்றால், நான் தாராளமாக ஆம் என்று கூறியிருப்பேன்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

செங்கோட்டை அருகே வரி வசூலிக்கச் சென்றபோது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்திருக் கிறாரே நகராட்சி அதிகாரி?

தனக்குள் இருந்த அதிகாரியின் குரலைக் கேட்காமல், பொறுக்கியின் குரலைக் கேட்டதனால்தான் இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். ஊரில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, வசூலிக்க வந்துட்டு வெறுங் கையா போறீங்களே என்று செமத்தி யாக கவனித்து அனுப்பியிருந்தால் எதிர்காலத்திலும் அந்த சபலப் புத்தி எழாமல் போயிருக்கும்.