என். இளங்கோவன், மயிலாடுதுறை.
இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மைல் கல் என்று கூறுகிறாரே தலைமை தேர்தல் ஆணையர்?
தேர்தல் ஆணையம் நினைத்தால், லட்சம், கோடி வாக்காளர் களின் வாக்குகளைப் பறித்துக்கொண்டு அவர்களை அம்போ என விடமுடியும் என நிரூபித்த மைல் கல்லா? இல்லை, திட்ட மிட்டே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தேர்தலுக்கு நெருக்கமாக தீவிர திருத்தத்தை மேற்கொண்டு அந்தக் கட்சிகளையும், அம்மாநில மக்களையும் பரி தவிக்க விடுவதில் புதிய மைல் கல்லா?
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவிகூட கிடைக்கமாட்டேங்குதே ஏன்...?
ஒருசமயம் பா.ஜ.க. மேல்மட்டப் புள்ளிகள் அனைவரும் ஒன்றுகூடி இருக்கும்போது, போனால் போகுது, ஏதாவது ஒரு மாநில கவர்னராக அவரைப் போட்டுவிடலாம் என்று முடி
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மைல் கல் என்று கூறுகிறாரே தலைமை தேர்தல் ஆணையர்?
தேர்தல் ஆணையம் நினைத்தால், லட்சம், கோடி வாக்காளர் களின் வாக்குகளைப் பறித்துக்கொண்டு அவர்களை அம்போ என விடமுடியும் என நிரூபித்த மைல் கல்லா? இல்லை, திட்ட மிட்டே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தேர்தலுக்கு நெருக்கமாக தீவிர திருத்தத்தை மேற்கொண்டு அந்தக் கட்சிகளையும், அம்மாநில மக்களையும் பரி தவிக்க விடுவதில் புதிய மைல் கல்லா?
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவிகூட கிடைக்கமாட்டேங்குதே ஏன்...?
ஒருசமயம் பா.ஜ.க. மேல்மட்டப் புள்ளிகள் அனைவரும் ஒன்றுகூடி இருக்கும்போது, போனால் போகுது, ஏதாவது ஒரு மாநில கவர்னராக அவரைப் போட்டுவிடலாம் என்று முடிவுசெய்தார்களாம். இரண்டு மாநிலங்களில் ஆளுநர் போஸ்ட் காலி யாக இருக்க, திட்டவட்டமாக எந்த மாநிலமென முடிவுசெய்ய கட்சிக் காரர்கள் ஒரு நாணயத்தை மேலேவீச, சுழன்றிறங்கி வந்த நாண யம் தலையாக வும் விழாமல், பூவாகவும் விழாமல் பிடித்துநிறுத்தி யதுபோல் அப்படியே நின்றுவிட்டதாம். நாண யத்துக்கே சம்மதமில்லாத விஷயத்தில், நாம் என்ன கூந்தலுக்கு அக்கறை காட்டவேண்டுமென அப்படியே விட்டுவிட் டார்களாம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
தற்போது எல்லாம் லட்சக்கணக்கான பணம் கட்டுக்கட்டாக தெருவில் கிடக்கிறதே?
மக்களிடம் நேர்மை, நாணயம் ஏதாவது மிச்சம் மீதியிருக்கிறதா என இயற்கை சோதிக்கிறது போல. உங்களை ஏன் இயற்கை சோதிக்கவில்லை என கவலைப்படுகிறீர்கள்போல் தெரிகிறதே!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பீஹாரில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன..?
இன்னொரு கட்டத் தேர்தலும் முடிந்து ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விகிதமும் வரட்டும். வெறும் வாக்குப் பதிவு விகிதத்தை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. ஆனால் அதிக வாக்குப் பதிவு விகிதம், ஆளும்கட்சி கூட்டணிக்குச் சிக்கல் என்றொரு நம்பிக்கை உண்டு. அது பொய்க்கிறதா... பலிக்கிறதா பார்க்கலாம்.
எஸ். இளையவன், சென்னை
பீகாரில் தங்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் பல சமூகங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தேஜஸ்வி கூறியுள்ளாரே?
தேர்தல் வந்தால் பல சமயங்களில் கட்சித் தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதைவிட, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். பீகாரில் நிதிஷ், தேஜஸ்வி இருவரும் பல ஜிம்னாஸ்டிக் வித்தைகள் காட்டினார்கள். அதில் ஒரு வித்தை இது.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45
கூட்டு பலாத்கார வழக்கைக்கூட எதிர்க்கட்சிகள் ஓட்டாக மாற்ற நினைக்கிறார்களே?
ஆட்சியிலிருக்கும் கட்சி அனைத்துக்கும் பதிலளித்துத்தான் ஆகவேண்டும். ஒருவேளை தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கோவையில் போராடத்தான் செய்திருக்கும். ஆட்சியிலிருப்பவர்களும், எதிர்க்கட்சிகளும் பேசும்போது யார் பொறுப்பாகச் செயல்படுகிறார்கள், யார் வெறும் பேச்சு பேசுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்தேயிருப்பார்கள்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
பீஹாரில் ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் கூட்டணியினர் ராமரை வெறுக்கின்றனர் என மோடி கூறியிருப்பது பற்றி?
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக ராமரைத் துரத்திக்கொண்டு திரிவதும், அதில் ஓட்டு ஆதாயம் பார்த்ததும் பா.ஜ.க.தான். கறவை நின்ற பிறகும் பசுவின் மடியை இழுத்துப் பார்ப்பதுபோல், பீகார் தேர்தலிலும் ராமர் பெயரை இழுத்துப் பார்க்கிறார் மோடி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/mavali1-2025-11-10-17-22-58.jpg)
க.சந்திரகலா, பாபநாசம்
ஆனைக்கும் அடி சறுக்குமாமே?
ஆமாம், உசேன் போல்ட்டைத் தெரியுமா? சிறுதொலைவு ஓட்டங்களான 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் மின்னல் வேகத்தில் ஓடிக் கடந்து சாதனை புரிந்தவர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றவர். ஒலிம்பிக்கில் 8, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 11, இதர தங்கப் பதக்கங்கள் 4 என மொத்தம் 23 தங்கப் பதக்கங்களை குவித்திருப்பவர். கடந்த வருடம் ஆதரவற்றோருக்காக வெஸ்ட் லண்டனில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு, காயமடைந்தார். அதனால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் படியானது. தூரங்களை நொடிக்கணக்கில் கடந்தவர் இப்போது சிலஅடி தூரம் நடக்க நொண்டிக்கொண்டிருக்கிறார். அதுவும் இடையில் படியேற வேண்டிவந்தால் யாருடைய உதவியாவது வேண்டி யிருக்கிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us