வாசுதேவன், பெங்களூரு

வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளதே..!

Advertisment

mavali2

முதலில் இந்திய அணியின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஃபுகே மூவருக்கும் வாழ்த்துகள்! இந்தியா முழுவதும் அர்ஜுனனின் வாரிசுகள்தான். ஆனால் வில்வித்தையில் பதக்கங்களைக் குவிக்க திண்டாட வேண்டியிருக்கிறது. வாத்தியார் பிள்ளை மக்கு என்னும் சொலவடைக்கு ஏற்ப, அர்ஜுனன், கர்ணன் போன்ற புராண வில்வித்தை நாயகர்கள் இருந்தும் ஒலிம்பிக்கிலும், சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வாங்க தடுமாற வேண்டியிருக்கிறது.

வைரபாலா, மன்னார்குடி

அரசியல் களத்தில்  நயினாரின் செயல்பாடுகள் தங்களுக்கு  திருப்தியாக உள்ளதா?

Advertisment

எனக்கு திருப்தியாக இருந்தாலென்ன... இல்லாவிட்டா லென்ன! பா.ஜ. தொண்டர்களுக்கும், மத்தியிலுள்ள பா.ஜ.க. தலைமைக்கும் நயினாரின் செயல்பாடுகள் திருப்தியா... இல்லையா என்பதுதான் முக்கியம். தவிரவும், அவர் தலைமைப் பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகிறது. ஒரு தேர்தலையாவது எதிர்கொள்ளட்டும். அப்புறம் மதிப்பீடு செய்யலாம்.

சி. கார்த்திகேயன், சாத்தூர் 

அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை ஜெ. நீக்கியதற்கும், தற்போது எடப்பாடி பழனிச்சாமி நீக்கியதற்கும் என்ன வித்தியாசம்?

அன்று தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ற பயம் கொஞ்சம் இருந்திருக்கும். இன்று தலைமையைக் கோபமூட்ட வேண்டும் என்பதுதான் செங்கோட்டையன் செயல்பாடுகளின் நோக்கம். என்னதான் கட்சியின் நலன், எதிர்காலம் எனப் பேசினாலும், எங்கிருந்தோ வரும் உத்தரவை ஏற்று கட்சியைப் பலவீனப்படுத்துவதுதான் இப்போதைக்கு அவருக்கான அசைன்மெண்ட்.

அ.யாழினிபர்வதம், சென்னை-78. 

Advertisment

சுருட்டுக்கும் சிகரெட்டுக்கும் ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டு பீடிக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதேன்? 

சாதாரண கார்களுக்கு 12 சதவிகிதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டு, சொகுசுக் கார் களுக்கு 40 சதவிகிதமாக ஜி.எஸ்.டி. அதிகரிக் கப்பட்டது போல்தான். அதைக் கேட்டீர்களா? சுருட்டும், சிகரெட்டும் சொகு சானவர்களுக்கு, அதனால் வரி அதிகரிப்பு. பீடி... ஏழைபாளை களுக்கு, அதனால் வரிக் குறைப்பு. ஆனால், புகை பிடிப்பவர்கள் ஏழைபாளை களாக இருந்தாலும், சொகுசானவர்களாக இருந் தாலும் பேதமில்லாமல் புற்று நோய் வரும். அதில் யாருக் கும் சலுகை கிடையாது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

அரசியல்வாதிகளின் வழக்குகளில் மட்டும் விசாரணை காலதாமதமாவது ஏனென உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளதே?

அரசியல்வாதிக்கு உடல்நலமில்லை, முக்கிய வேலையிருக்கிறது, ஆவணங்கள் தயாராகவில்லை, சார்ஜ்சீட் ரெடியாகவில்லை என நீதியரசர்களிடம்தானே சாக்குப்போக்குச் சொல்லி வாய்தா கேட்பார்கள். அந்த வழக்கறிஞர்களிடமே இந்த கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டுவிடலாமே!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. 

நேரு வசித்த பங்களா விற்கப்படுவதேன்? 

mavali1

இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்குமுன்பாக அமைந்திருந்த இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கையில் நேரு தங்கியிருந்த பங்களாதான் இது. நேருவுக்குச் சொந்தமான பங்களா அல்ல. ராஜஸ்தான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான இந்த பங்களா, 1400 கோடிக்கு விலை பேசப்பட்டு 1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான பங்களா என்ற பெயரையும் பெற்றுள்ளது. இதை வாங்கியிருப்பது குளிர்பானத் துறையில் ஆர்வமுள்ள ஒரு பிஸினஸ்மேன் என புதிர்போடுகிறது பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும். 

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி 

வதந்திகளில் மிஸ் இன்ஃபர்மேஷன், டிஸ் இன்பர்மேஷன் என இரண்டு வகை உண்டு என உதயநிதி கூறியிருப்பது பற்றி? 

இரண்டுமே தவறான தகவல்தான். டிஸ்இன்பர் மேஷன் தெரிந்து செய்வது. மிஸ்இன்பர்மேஷன் தெரியாமல் நிகழ்ந்துவிடுவது. தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டார்கள் என்று பரப்பப்பட்டது டிஸ்இன்பர்மேஷன்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

தமிழக ஒட்டல்களில் அமெரிக்க உணவுகளை புறக்கணிக்க ஓட்டல் உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது குறித்து?

ஒருகாலத்தில் வணிகர் சங்கம் தமிழக கடைகளில் பெப்ஸி, கோக்கைப் புறக்கணிப்போம் என்று வீர அறிக்கை வெளியிட்டது. நடந்ததா? கொஞ்சநாள் முன்புவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஆகவில்லை. அப்போது சீனப் பொருட்களைப் புறக்கணித்தோமா? (இன்று விற்பனையாவ தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீனாவுடையவை தான்). உணர்ச்சிவசப்பட்டு அறிக்கை விடுவதைவிட சிந்தனைவயப்பட்ட செயல்பாடுகள்தான் தேவை.