மாவலி பதில்கள் 12.07.25

mavali

 


எச்.மோகன், மன்னார்குடி

நிம்மதியின் முழு விலாசம் என்ன?

அது எதை நீங்கள் நிம்மதி என நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. காஸாவில் வசிப்பவன், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினாலே நிம்மதி என நினைப்பான். காஷ்மீரில் இருப்பவன், தீவிரவாதத் தாக்குதல் நடக்காமல் இருந்தாலே ராணுவம், போலீஸ் கெடுபிடியில்லாமல் வாழ்க்கை நிம்மதியாகப் போகும் என நினைப்பான். வாழ்க்கை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம்போல சமதளமாக இருக்காது. மேடுபள்ளமாகத்தான் இருக்கும். கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் துயரமெனத்தான் வாழ்க்கை நகரும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. 

வலைத்தள செய்திகளின் உண்மைத் தன்மையை எப்படிக் கண்டறிவது? 

கொஞ்சம் விழிப்பாக செய்தியைப் படித்தாலே தெரிந்துவிடும். தெரியா தவர்கள், வலைத்தள செய்தியின் உண்மைத் தன்மையைச் சோதிக்கும் வலைத்தளங்களில் அந்தச் செய்தியையோ, புகைப்படத் தையோ பதிவிட்டால் செய்தியின் உண்மைத் தன்மையை அறிவித்துவிடும். க்ரோக், சாட் ஜி.பி.டி. போன்ற ஏ.ஐ. தளங்களும் செய்தி உண்மையா, இல்லையா என்று கண்டறிந்து சொல்லும்.

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

சென்னையிலுள்ள பாக்ஸ்கான் ஆலையிலிருந்து 300 முக்கிய சீனப் பொறியாளர்கள் நாடு திரும்பியதால் ஐபோன் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாமே?

மட்டமான நடவடிக்கை. ஐபோன் நிறுவனம், சீனாவிலிருந்து ஐபோன் உற்பத்தியை முழுக்க இந்தியாவுக்கு மாற்ற விரும்புகிறது. அதற்காக பாக்ஸ்கான் இந்தியாவில் ஆலையமைத்து, உற்பத்தி செய்துவருகிறது. ஏற்கெனவே அனுபவ முள்ளவர்கள் என்பதால் சீனப் பொறியாளர்களை இங்கே பயன்படுத்திவந்திருக்கிறது. தன் நாட்டை விட்டு ஐபோன் உற்பத்தியை மாற்றியதற்காக, அதில் பணியாற்றிவந்த பொறியாளர்களை தன் நாட்டுக்கு திரும்ப அழைப்பது என்பது ஒருவகை யில் மிரட்டல். இது சர்வதேச வர்த்தக விதிமுறை களுக்கே எதிரானது. இந்தச் சிக்கலையும் இந்தியா எதிர்கொண்டு வெற்றிகாணும்.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

அறியாமை இருளை அகற்றி, தமிழகத்தை ஒளி வீசச்செய்வதே என் தீராத ஆசை என்ற இ.பி.எஸ்.ஸின் பேச்சு?

ஸ்டெர்லைட்டில் போலீஸின் துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்றபோதும், கம்பராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்றபோதும் அவருடைய அறிவொளியின் வீச்சைத் தமிழகம் தெரிந்துகொண்டது. அந்த ஒளியை தமிழகமெங்கும் வீசச்செய்யப்போகிறேன் என்பதுதான் சற்று அச்சத்தைக் கிளப்புகிறது.

சிவா, கல்லிடைக்குறிச்சி.  

ராபர்ட் வதேரா நண்பர் பண்டாரி பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி?

உப்புத் தின்றவர்கள் நீரருந்துவதும், தப்புச் செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவதும் தவறல்ல. சமீபத்தில் எஸ்.பி.ஐ. வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் செய்தது பொருளாதார மோசடி என ஓபன் ஸ்டேட்மெண்டே விடுத்தது. பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான அதன் ஸ்டேட்மெண்டுக்குப் பின், அதற்குக் காரணமானவர்கள் மீது விசாரணையாவது மேற்கொள்ளப்பட்டதா?

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

நடிகை கியாரா அத்வானி, கர்ப்பவதியாக இருந்தும் படப்பிடிப்பில் சுறுசுறுப்புடன் நடித்திருக்கிறாரே?

நம் வீடுகளிலே கர்ப்பகாலத்தில் வேலைக்கும் போய்விட்டு, வீட்டில் வந்து சமையலையும் கவனித்துக்கொண்டு, சமயங்களில் முதற்குழந்தை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீட்டுப் பாடம் முதலியவற்றில் உதவிசெய்யும் கர்ப்பவதி களும் இருக்கிறார்கள். கிராமங்களில் கர்ப்பகாலத்திலும்கூட கடினமான விவசாய வேலை, சித்தாள் வேலை பார்க்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதனுடன் ஒப்பிட கியாரா அத்வானியின் சுறுசுறுப்பில் எந்த அதிசயமும் இல்லை.

கே. ராஜூ, திருநெல்வேலி

டேரிஃபை ஆகஸ்டுக்கு ஒத்திப்போட்டிருக்கிறாரே ட்ரம்ப்?

அடிப்படையில் ட்ரம்ப் ஒரு முதலாளி. இப்படி டேரிஃப் என அறிவிக் கும்போது பங்குச்சந்தை சரியும். ஒத்திப் போடும்போது பங்குச் சந்தை ஏறும். இப்படி மாறி மாறி இத்தனை சதவிகிதம் டேரிஃப், டேரிஃப் ஒத்திவைப்பு என அறிவிக்கும் போது, கன்னா பின்னாவென தடுமாறும் அமெரிக்க பங்குச் சந்தையில் ஷார்ட் அடிப்பவர்கள் மில்லியன்கணக்கில் காசுபார்த்து விடுவார் கள். ட்ரம்பின் டேரிஃப் அறிவிப் பின் பின்னால் பங்குச் சந்தை மெகா நிறுவனங் கள் இருக்கின்றன என்று இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

nkn120725
இதையும் படியுங்கள்
Subscribe