Advertisment

மாவலி பதில்கள் 11.02.26

mavali

வாசுதேவன், பெங்களூரு

சிந்தித்துச்  செயல்படுவது, செயல்பட்டுவிட்டு சிந்திப்பது -ஒப்பிடுக..!

வள்ளுவர் கூறுவதுபோல் எண்ணித் துணிக கருமம் என்று செயல்பட்டால் உங்களுக்கு நல்லது. இல்லை, செயலைத் தொடங்கிவிட்டு சிந்தித்தால், வடிவேலு போல வடைபோச்சே என வருத்தப்பட நேரிடலாம். எப்படிச் செயல்படுவது என்பது உங்கள் சாய்ஸ்!

Advertisment

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி 

நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் சரி செய்தி ஊடகங்களும் சரி  நடுநிலையாக  கருத்துக் கூறவே மாட்டார்களா?

Advertisment

கட்சித் தலைவர்கள் நடுநிலையாகக் கருத்துக் கூறினால் அரசியல் எப்படிப் பண்ணுவது? ஆனால் ஊடகங்களிடம் நடுநிலை மிஸ்ஸாவதுதான் தற்போது மிகவும் கவலை தரும் அம்சம்.

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு மிகப்பெரிய பொய்

வாசுதேவன், பெங்களூரு

சிந்தித்துச்  செயல்படுவது, செயல்பட்டுவிட்டு சிந்திப்பது -ஒப்பிடுக..!

வள்ளுவர் கூறுவதுபோல் எண்ணித் துணிக கருமம் என்று செயல்பட்டால் உங்களுக்கு நல்லது. இல்லை, செயலைத் தொடங்கிவிட்டு சிந்தித்தால், வடிவேலு போல வடைபோச்சே என வருத்தப்பட நேரிடலாம். எப்படிச் செயல்படுவது என்பது உங்கள் சாய்ஸ்!

Advertisment

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி 

நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் சரி செய்தி ஊடகங்களும் சரி  நடுநிலையாக  கருத்துக் கூறவே மாட்டார்களா?

Advertisment

கட்சித் தலைவர்கள் நடுநிலையாகக் கருத்துக் கூறினால் அரசியல் எப்படிப் பண்ணுவது? ஆனால் ஊடகங்களிடம் நடுநிலை மிஸ்ஸாவதுதான் தற்போது மிகவும் கவலை தரும் அம்சம்.

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு மிகப்பெரிய பொய்யர்.. மிகவும் ஆணவம் பிடித்தவர் என்று குற்றம்சாட்டி யுள்ளாரே மம்தா?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆணவம் பிடித்தவரா... இல்லையா என்பது நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று பா.ஜ.க. கூட்டணியிலுள்ள கட்சிகளைத் தவிர மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாமே வாக்காளர்களை கொத்துக்கொத்தாக தேர்தல் ஆணையம் நீக்குவதையும், கூடவே லட்சக் கணக்கான பேர் தொகுதிவாரியாக சேர்க்கப் படுவதையும் குற்றம்சுமத்தியுள்ளார்கள். அதற்குரிய ஆதாரங்களையும் கட்டுக்கட்டாக முன்வைத்துள்ளார்கள். இதற்கெல்லாம் சில வருடங்கள் முன்பாகவே தலைமைத் தேர்தல் ஆணையர் சட்ட நடவடிக்கைகளுக்கு அப் பாற்பட்டவர் என பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. இதையெல்லாம் கூட்டிப்பார்த்தால் மிகப்பெரிய அபாய மணி ஒலிக்கிறது. எதிர்க்கட்சிகளும், இந்திய மக்களும் உஷாராகவேண்டும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் எனக்கு சவக்குழி தோண்டமுடியாது என்கிறாரே மோடி...?

சில பேர் பிடிவாதமானவர்கள். அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கமாட்டார்கள். அவர்களுக்கான சவக்குழிகளை அவர்களேதான் தோண்டிக்கொள்வார்கள். 

mavali1

சிவா, கல்லிடைக்குறிச்சி.

என் தலைமையில் அம்மா ஆட்சி அமையும் என சசிகலா தமாஷ் பண்ணிக்கொண்டிருக்கிறாரே?

அவரை அரசியல்தான் பண்ண விடவில்லை. தமாஷாவது பண்ணிவிட்டுப் போகட்டுமே. 

அன்னூரார், பொன்விழி அன்னூர்

காதலியுடன் கைகோர்த்து தாஜ்மஹாலைத் சுற்றிக்காட்டி காதலர் தினம் கொண்டாடலாமா?

உங்கள் காதலி, உங்கள் விருப்பம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இத்தனை நாள் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியிலிருந்தது. அந்தக் காலத்தையெல்லாம் விட்டுவிட்டு பா.ஜ.க. ஆட்சியில் அமரும்போது காதலர் தினத்தன்று தாஜ்மகால் போக விரும்புகிறீர்கள். அவர்களுக்கு காதலர் தினமும் ஆகாது. தாஜ்மகாலும் ஆகாது. உடனே குங்குமம், மஞ்சள் கயிறுடன் வந்து இங்கேயே கல்யாணம் செய்தாகவேண்டும் என்பார்கள். இல்லை யெனில் காதலர் தினத்தன்று தாஜ்மகால் பக்கமே வரவிடாமல் கும்பலாக நின்றுகொண்டு வம்புசெய்தாலும் ஆச்சரியமில்லை. பேசாமல், உங்கள் அன்னூரிலோ, அல்லது பக்கத்திலுள்ள நகரிலோ காதலர் தினத்தைக் கொண்டாடுவது பாதுகாப்பானது. 

லி.சீனிராஜ், தொம்பக்குளம்  

மூன்றில் ஒரு பங்கு வேலைகூட முடியாத மதுரை எய்ம்ஸை பிரதமர் மோடி திறந்துவைக்கப் போகிறாராமே?

எப்போதோ அடிக்கல் நாட்டியது. தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் எய்ம்ஸ் பெயரைச் சொல்லியே விமர்சிக்கின்றன. திறந்துவைத்துவிட்டு முடிந்ததாகக் காட்டிக்கொண்டால் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம் இல்லையா! ஏற்கெனவே எஃப்ஸ்டீன் கோப்புகள், நரவணே சுயசரிதை, அமெரிக்க டேரிஃப் என நெஞ்சின் மீதே ஏகப்பட்ட அறை விழுந்து ஒடுங்கிப்போயிருக்கிறது. நிமிர்த்த ஒரு சந்தர்ப்பம் வந்தால், விடமாட்டீர்கள் போலிருக்கிறதே!

எஸ். இளையவன், சென்னை

ஜெ.யின் இடத்தில் மோடியைப் பார்க்கிறாராமே டி.டி.வி.தினகரன்?

புதிய எஜமான், புதிய பிஸ்கட்டுகள், வாலை ஆட்டி நன்றி பாராட்ட வேண்டியதுதான். கழுத்துப் பட்டை பிணைக்கப்பட்ட பிறகு விசுவாசம் காட்டாமலிருக்க முடியுமா?

கே.ஹரிகரன், சிவகாசி

புலி படத்துக்கான வரி ஏய்ப்பு விவகாரத்தில் நீதிமன்றம் கைகழுவிவிட்டதே?

ரசிகர்கள் அபிமானத்தில் இருக்க வேண்டியதுதான். நீதிமன்றமெல்லாம் நடிகர்கள் மீது அபிமானம் காட்டி தீர்ப்புச் சொல்லமுடியாதல்லவா!

nkn110226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe