வண்ணை கணேசன், கொளத்தூர்
ஆந்திராவில் தாலி கட்டியதும் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 3 சவுக்கடி கொடுக்கும் வழக்கம் உள்ளதாமே?
ஆந்திரா முழுவதுமெல்லாம் இந்த நம்பிக்கை இல்லை. கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே சமூகத் தைச் சேர்ந்தவர்களிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணமகனுக்கு வரதட்சணை யாக மூன்று சவுக்கடி தரப்படுகிறது. இது அவர்களது ஆன்மிக நம்பிக்கை என்பதால் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் வரதட்சணை கேட்பவர்களுக்கு பெண் வீட்டார் இந்த சவுக்கடி ட்ரீட்மெண்டைக் கொடுத்தால், வரதட்சணை எனும் சமூகநோய் குணமாக வாய்ப்பிருக்கிறது.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
விஜய் நடத்திய மாநாட்டில் பல விபரீதங்கள் நடந்திருப்பது எதைக் காட்டுகிறது?
விஜய்யின் இரண்டாவத
வண்ணை கணேசன், கொளத்தூர்
ஆந்திராவில் தாலி கட்டியதும் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 3 சவுக்கடி கொடுக்கும் வழக்கம் உள்ளதாமே?
ஆந்திரா முழுவதுமெல்லாம் இந்த நம்பிக்கை இல்லை. கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே சமூகத் தைச் சேர்ந்தவர்களிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணமகனுக்கு வரதட்சணை யாக மூன்று சவுக்கடி தரப்படுகிறது. இது அவர்களது ஆன்மிக நம்பிக்கை என்பதால் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் வரதட்சணை கேட்பவர்களுக்கு பெண் வீட்டார் இந்த சவுக்கடி ட்ரீட்மெண்டைக் கொடுத்தால், வரதட்சணை எனும் சமூகநோய் குணமாக வாய்ப்பிருக்கிறது.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
விஜய் நடத்திய மாநாட்டில் பல விபரீதங்கள் நடந்திருப்பது எதைக் காட்டுகிறது?
விஜய்யின் இரண்டாவது மாநாட்டில் எந்த விபரீதமும் நடைபெறவில்லை. மாநாட்டுக்கு வந்த வர்களில் மூன்றுபேர் இறந்துபோயிருக்கிறார்கள். இரண்டொரு பேர் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டிருக் கிறார்கள். மாநாடு நடந்த நாளில், வெயில் போட்டுத் தாக்கியதால் நிறைய பேர் மயங்கி விழுந்திருக் கிறார்கள். அனுபவத்திலிருந்து பாடம் படித்தால் எதிர்கால மாநாடுகளில் இதையும் தவிர்த்து விடலாம்.
எச்.மோகன், மன்னார்குடி
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அதிகமா.... அல்லது ஜெயலலிதா விசுவாசிகள் அதிகமா?
இதுகுறித்து முறையாக எடுக்கப்பட்ட எந்தக் கணக்கெடுப்பும் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான் அவர் மறைவுக்குப் பின்பு ஜெ. முதல்வரானபோது அவரது விசுவாசிகள் ஆனார்கள். எனவே அவர்கள் அடிப்படையில் எம்.ஜி.ஆர். விசுவாசிகள். எம்.ஜி.ஆர். மறைந்து எத்தனையோ ஆண்டுகளான பின்பும் அவர்மீது பக்தியும், விசுவாசமும் கொண்ட ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அதிகமென்பதுதான் மாவலியின் கணிப்பு.
எஸ்.இளையவன், சென்னை
அமித்ஷா பிரதமராகி விடுவார்போல் தெரிகிறதே?
அது கட்சி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கவலை. நமது கவலையெல்லாம், ராகுல் சுட்டிக்காட்டியதுபோல, மாலை ஆறுமணிக்கு மேல் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரிக்காமல், பட்டியலிலும், வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் பந்தாடப்படாமல் அமித்ஷாவுக்கென வாக்குகள் விழுந்து அவர் ஜெயித்துவந்தால் சரி!
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
சீனாவுடன் உறவு வைப்பது நல்லதா?
எந்த நாட்டையும் முற்றாகப் பகைத்துக்கொள்ளவும் கூடாது. எந்த நாட்டுடனும் ஆலிங்கனம் செய்வதுபோல் அணைத்துப் பிடித்துக்கொள்ளவும் கூடாது. "அகலாது அணுகாது தீக்காய் வார் போல்க/ இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்' என்பது வள்ளுவர் வாக்கு. தீயை ரொம்பவும் நெருங்காமல், ரொம்பவும் விலகாமல் குளிர்காய்வதுபோல் அதிகாரத்திலிருப்போரிடம் நட்பு பேணவேண்டும் என்பார். அது சாதாரணருக்கு மட்டுமின்றி, பிற நாடுகளிடம் நட்பு கொள்ளும்போது பிரதமர், அதிபருக்கும் பொருந்தும்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை தொண்டர்களுக்கும் எனக்கும் தூக்கமில்லை என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
ஆட்சியைப் பிடிக்கும்வரை எனக்குத் தூக்கமில்லை என்பதைத்தான் அலங்காரமாக அப்படிச் சொல்கிறார் எடப்பாடி. அதுவரை உறங்காமல் கொள்ளாமல் கட்சிப் பணியாற்றுங்கள் என தொண்டர்களுக்கு உத்தரவிடுகிறார்.
பு.முரளிதரன், சென்னை -87
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்கிறார் பாரதியார். அவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை பார்த்தவுடன் கண்டுகொள்ள நாம் ஞானிகள் அல்ல. பழகித்தான் அவர்களைக் கண்டுகொள்ள வேண்டும்.. தெரிந்தபிறகு தாமதிக்காமல் விலகி வந்துவிடவேண்டியதுதான்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு,
கென்யா நாட்டில் சுற்றுலாப் பயணி ஒருவர் யானைக்கு மது கொடுத்திருக்கிறாரே?
நம் நாட்டிலும் மிருகக்காட்சி சாலைகளில் குரங்குகளுக்கு சிகரெட் கொடுப்பவர்கள் இருக் கிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தோற் றத்தில் மனிதனாகவும், உண்மையில் குரங்காகவும் தொடரும் சிலர் எஞ்சியிருக்கின்றனர். அத்தகையவர் களில் ஒருவரே அந்த சுற்றுலா பயணி.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து டி.டி.வி. தினகரனும் விலகிவிட்டாரே?
அதுதான் புதிதாக செங்கோட்டையன் கிளம்பியிருக்கிறாரே…. அவர் எடப்பாடியை வழிக்குக் கொண்டுவந்து கூட்டணியைப் பலமாக்குகிறாரா பார்ப்போம்!