Advertisment

மாவலி பதில்கள்! 10.01.26

mavali

அ. கந்தவேல், சிதம்பரம்

இன்ஸ்டாவில் எந்தெந்த நடிகைகளை யெல்லாம் பின்தொடர்கிறார் மாவலி?

mavali1

இந்தியாவில் அதிக நபர்களால் பின்பற்றப்படும் நடிகை ஷ்ரத்தா கபூர் என கேள்விப்பட்டேன். சமீபத் தில் மோடியைவிட அதிக பாலோயர்களைப் பெற்று, ஓவர்டேக் பண்ணியிருக்கிறாராம். மற்றபடி மாவலி இப்பத்தான் வாட்ஸ்அப், முகநூல் பக்கமே தலை காட்டியிருப்பதால், இன்ஸ்டாவெல்லாம் மாவலிக்கு ஏலியன் சமாச்சாரம்.

Advertisment

வி.எ.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.

த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தானே காங்கிரஸ் விரும்புகிறது? 

காங்கிரஸ் என்றால் மாணிக்தாகூரா, ஜோதிமணியா, செல்வப்பெருந்தகையா, கார்த்தி சிதம்பரமா யாரைச் சொல்கிறீர்கள்? எப்படியும் தலைமையின் முடிவைத்தான் மாநில காங்கிரஸ் வழிமொழியப் போகிறது. த.வெ.க. புதிய கட்சி என்ப தால்

அ. கந்தவேல், சிதம்பரம்

இன்ஸ்டாவில் எந்தெந்த நடிகைகளை யெல்லாம் பின்தொடர்கிறார் மாவலி?

mavali1

இந்தியாவில் அதிக நபர்களால் பின்பற்றப்படும் நடிகை ஷ்ரத்தா கபூர் என கேள்விப்பட்டேன். சமீபத் தில் மோடியைவிட அதிக பாலோயர்களைப் பெற்று, ஓவர்டேக் பண்ணியிருக்கிறாராம். மற்றபடி மாவலி இப்பத்தான் வாட்ஸ்அப், முகநூல் பக்கமே தலை காட்டியிருப்பதால், இன்ஸ்டாவெல்லாம் மாவலிக்கு ஏலியன் சமாச்சாரம்.

Advertisment

வி.எ.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.

த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தானே காங்கிரஸ் விரும்புகிறது? 

காங்கிரஸ் என்றால் மாணிக்தாகூரா, ஜோதிமணியா, செல்வப்பெருந்தகையா, கார்த்தி சிதம்பரமா யாரைச் சொல்கிறீர்கள்? எப்படியும் தலைமையின் முடிவைத்தான் மாநில காங்கிரஸ் வழிமொழியப் போகிறது. த.வெ.க. புதிய கட்சி என்ப தால் அடித்துப் பேசி தற்போது உள்ளதைவிட கூடுதலாக நான்கைந்து சீட்டுகளைப் பெறலாம் என சிலர் நினைக்கலாம். காங்கிரஸ் தலைமையின் சிந்தனையோட்டம் எப்படிப் போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Advertisment

அன்னூரார், பொன்விழி அன்னூர் 

அமித்ஷா தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வம்பிழுத்துச் சென்றுவிடுவது ஏன்?

அதுதானே அரசியல். ஏதாவது வம்பிழுத்து ஸ்கோர் பண்ண முடியுமா என்பதுதானே அவர்களது நோக்கம். வம்பிழுக்கிறார், என்று நீங்கள் வருத்தப் படுகிறீர்கள். இதையெல்லாம் சமாளிக்க தி.மு.க.வுக் கும் தெரிந்திருக்கும். தி.மு.க. கூட்டணியிலிருக்கும் வடமாநிலக் கட்சியொன்றின் அழைப்பின் பேரில் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு தமிழக முதல்வர் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். மேடையில் பா.ஜ.க.வுக்கோ, மோடிக்கோ சுருக்கென்று தைக் கிறமாதிரி பேசாமல் வருவாரென்றா நினைக்கிறீர்கள்.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45 

"இந்தியா -பாகிஸ்தான் போரை நாங்கள்தான் முடிவுக்கு கொண்டுவந்தோம்' என்று சீனா சொல்கிறதே?

அமெரிக்கா சொல்லும்போது சீனா சொல்லக் கூடாதா? சீன அதிபர் ஜின் பிங்குக்கு ஒரு நோபல் பரிசு கனவிருக்கக் கூடாதா? இந்தியா -பாகிஸ்தான் அமைதியில்தான் சர்வதேச நாடுகளுக்கு எவ்வளவு அக்கறை.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை "பழைய பானையில் புதிய கள்' என்கிறாரே தமிழிசை?

எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே, ஆளும் கட்சியின் திட்டங்கள், “சீச்சீ... இந்தப் பழம் புளிக் கும்” வகையறாதான். பழைய பானையாய் இருந்தால் என்ன, புதிய பானையாய் இருந்தால் என்ன, குடிக்கிறவர்களுக்கு ருசியாய் இருந்தால் சரிதான். 

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை

அ.தி.மு.க.வுக்கு சாதகமான அறுபது தொகுதிகளை, பா.ஜ.க. போட்டியிட அமித்ஷா கேட்டுள்ளாராமே? 

அறுபது என்ன... நூற்றி இருபது தொகுதிகள் கேட்டாலும் அசரமாட்டார் எடப்பாடி. பா.ஜ.க.வுக்கென எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என ஒரு பட்டியல் வைத்திருப்பார். கடைசி நேரப் பேச்சுவார்த்தையில் சிலபல சமரசம் நடக்குமே தவிர, அந்தப் பட்டியலிலிருந்து பெரிதாக மாறமாட்டார் பழனிச்சாமி.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

"பிரிவினைவாத அரசியல் தமி ழகத்தில் ஒருபோதும் எடுபடாது' என்று கூறுகிறாரே டி.டி.வி. தினகரன்?

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மாதிரி பிட்ச், 20-20 கிரிக்கெட்டுக்கு ஒரு மாதிரி பிட்ச் அமைப்பது மாதிரி, நேரத்துக்குத் தகுந்த மாதிரி பேசுவார். இப்போது பா.ஜ.க. -அ.தி.மு.க.வுக்கு எதிராகப் பேசவேண்டிய அவசியம் வந்திருக்கும் தினகரனுக்கு. 

ப. தினேஷ்குமார், கரூர்

"மோடிக்கு, பிரதமர் பதவியி லிருந்து பணி ஓய்வளிப்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ்., ட்ரம்பை பின்தொடர்பவராக மோடி மாறிவிடுவார்போலத் தெரிகிறது' என விமர்சித்திருக்கிறாரே சுப்பிர மணியசாமி?

வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தலுக்கெதிரான இந்திய விமர்சனத்திலும் சுரத்தில்லை. என்னைத் திருப்திபடுத்தா விட்டால், இந்தியா மீது கூடுதல் டேரிஃப் விதிப்பு பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்கிறார் ட்ரம்ப். அதற்கு பதிலடி கொடுக் கப்போய், புது டேரிஃப் வந்து விடுமோ என சர்வநாடியும் ஒடுங்கிநிற்கிறார். இதுதான் சரியான நேரமென தன் தேள் கொடுக்கு நாக்கால் மோடி மீது விமர்சனம் வைத்திருக்கிறார் சுப்பிர மணியசாமி.

nkn100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe