மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

குடும்பத்துக்கு ஒரு அரசு வேலை சாத்தியமா?

mavali1

எந்தக் கட்சியாக இருந்தாலும், சாத்தியமா என யோசித்துவிட்டு வாக்குறுதிகள் அளிப்பதில்லை. வாக்குறுதி அளித்து, தேர்தலில் ஜெயித்து வந்தபிறகே சாத்தியம் குறித்து யோசிப்பார்கள். சாத்தியமெனில் செய்வார்கள், இல்லையெனில் அடுத்த தேர்தலிலும் அதே வாக்குறுதியை அளிப்பார்கள். கடந்த இரண்டு தேர்தலாக பா.ஜ. -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 1 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றது. இந்தத் தேர்தலிலும் அதே உத்தரவாதத்தை பிரதமர் கூறுகிறார். தேஜஸ்வியும் தன் பங்குக்கு குடும்பத்துக்கு ஒரு வேலையென அடித்துவிடுகிறார்.

Advertisment


நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"கொடநாடு கொலை வழக்கில் பழனிச்சாமி ஏ ஒன் அக்யூஸ்ட்' என்று செங்கோட் டையன் கூறியிருக்கிறாரே? 

Advertisment

சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? தன்னை தி.மு.க. ஆதரவு பி டீம் என விமர்சித்த பழனிச்சாமிக்கு எதிராக, கொடநாடு வழக்கின் ஏ-1 என பூமராங் வீசியிருக் கிறார் செங்ஸ். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அ.தி.மு.க. ரெண்டுபட்டா பா.ஜ.க.வுக்குக் கொண்டாட்டம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

முதன்முதலாக ஓரினச் சேர்க்கையாளர் ராப் ஜெட்டன் நெதர்லாந்து நாட்டு பிரதமரானது பற்றி? 

Advertisment

அவரது அந்தரங்க விஷ யங்கள் மக்களை என்ன செய் யப்போகிறது? அவர் நாட்டை எப்படி நிர்வாகம் செய்யப் போகிறார், மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பது தானே முக்கியம். தவிரவும், தேர்ந்தெடுத்த மக்களுக்குத் தெரியாதா, ராப்ஜெட்டனின் பாலியல் தேர்வு என்னவென்பது?

க.அருச்சுனன், செங்கல்பட்டு  

தி.மு.க. பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சியில் ஆந்திராவைப்போல பங்கு வேண்டும் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?

தி.மு.க. கொடுக்கிறதோ,… இல்லையோ… அது இரண்டாம்பட்சம். கேட்கும்போது கட்சித் தலைமை முதல் அனைவரும் ஒரே குரலாகக் கேட்கவேண்டும். உதிரிக் குரல்கள் பொருட்படுத்தப்படாது. ஆட்சியில் பங்கு தர பிரதான கட்சிக்கு, கூட்டணிக் கட்சி இல்லாவிட்டால் வெற்றிக்கு வாய்ப்பேயில்லை என்ற இக்கட்டு நிலவவேண்டும். அதனால் கார்த்தி சிதம்பரத்தின் குரல் எடுபடப்போவதில்லை என்பது நிச்சயம்.

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

இந்தியாவிலேயே கேரளாவை வறுமை இல் லாத முதல் மாநிலமாக அறி வித்துள்ளாரே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்..?

முதலில் பினராயி விஜயன் கேரளாவை வறுமையில்லாத மாநிலம் எனச் சொல்ல வில்லை. தீவிர வறுமை இல்லாத மாநிலம் என்கிறார். அதாவது எக்ஸ்ட்ரீம் பாவர்ட்டி. தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார் பினராயி விஜயன் என எதிர்க்கட்சிகள் முதல்வரை விமர்சிக்கின்றன. திருவனந்த புரத்தில் பட்டினியால் ஒரு முதிய பெண்மணி இறந்த தாகவும், அதற்கு ஆதாரத்தை முன்வைக்கின்றன. ஐக்கிய நாடு கள் முன்வைக்கும் நீடித்த வளர்ச்சிக் குறியீட்டில் கேரளம் முன்னேற்றம் கண்டுள்ளது என்கிறார் முதல்வர். முதல்வர் சொல்வதில் சற்று முன்பின் இருக்கலாம். அதற்காக இல்லா ததை இருப்பதாகச் சொல்ல மாட்டார். கேரளத்தை பாராட் டித்தான் ஆகவேண்டும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத் தில் தமிழ்நாடு இருக்கிறது.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

"இனி வெள்ளிக்கும் வங்கிகளில் கடன் வழங்கப் படும்' என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறேதே?

அறிவித்திருக்கிறதுதான். ஆனால் நடைமுறைக்கு வர 2026 ஆகிவிடும். அசல் மதிப்பீட்டிலிருந்து 75% கடன் கிடைக்குமென ரிசர்வ் வங்கி சொல்கிறது. ஆனால் உண்மை யில் அசல் மதிப்பீட்டிலிருந்து 50 முதல் 60 சதவிகித மதிப்புக்குத்தான் கடன் கொடுப்பார்கள். "வெள்ளியின் விலை மிகவும் நிலையற்றது, ஊசலாட்டமிக்கது என்பதால் ஜாக்கிரதையாகவே கடன் தருவார்கள்' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இப்பவும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் சேட்டு கடைகளில் வெள்ளிக்குக் கடன் கிடைக்கும். ஆனால் அவர்கள் வெள்ளியை வாங்கும் விலை மிகவும் அடிமட்டத்தில் இருக்கும். 

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

மத்திய அரசில் ஜனாதி பதி ஆட்சியே நிரந்தரமாக இருந்து விட்டால் பல கோடி ரூபாய் மிச்சமல்லவா?

அதற்குப் பெயர் சர்வாதிகார ஆட்சி. அதற்கு எதற்கு ஆங்கிலேயர்களிடம் மல்லுக் கட்டியிருக்கவேண்டும். சுமக்க முடியாத அளவுக்கா கனமாக இருக்கிறது சுதந்திரம்?

வண்ணை கணேசன், கொளத்தூர்

அரும்பாக்கத்தில் முருகன் சிலை கண் திறந்து பார்த்ததாகச் செய்தி வருகிறதே…?

பிள்ளையார் பால் குடிப்ப தாயிருந்தாலும், முருகன் கண் திறப்பதாயிருந்தாலும் உட்கார்ந்த இடத்திலே அதிசயம் நிகழ்த்து வதை விட்டு, பக்தருடன் எழுந்துபோய் ஒரு டீ சாப்பிட்டு வரட்டும்... அப்புறம் விவாதிக்கலாம்!