ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
எதிர்காலத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய பிரதமர் ஆவதற்கு வாய்ப்புள்ளதா?
ஜோதிடத்தில் நான் கொஞ்சம் வீக். யோகி பிரதமர் ஆவாரா, மாட்டாரா என்பதை என்னால் கணிக்கமுடியாது. ஆனால் யோகி பிரதமரானால், இந்தியாவுக்கு என்னாகும் என்பதை துல்லியமாகக் கணிக்கமுடியும். ஒட்டுமொத்த இந்தியாவும் உத்தரப்பிரதேச மாக ஆகும். அதாவது மோப் லிஞ்சர்களும், ரோமியோ ஸ்குவாடுகளும் கோலோச்ச, போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நாடெங்கும் போக்குவரத்து வாகனங்கள் ஓடுகிறதோ... இல்லையோ புல்டோசர்கள் தாராளமாக ஓடும்.
லீலாராம், தக்கலை
அமெரிக்கா, ஈரான் இரண்டில் பதுங்கப் போவது யார்? பாயப்போவது யார்?
அதுதான் முந்திக்கொண்டு ஏற் கெனவே இஸ்ரேலும் அமெரிக் காவும் பாய்ந்துவிட்டதே. ஈரான் தற்காத்துக்கொள்ள வும், பதில் நடவடிக்கையாக வும்தானே போராடிக் கொண்டிருக்கிறது.
பீ.ஆர்.பூஜாரமேஷ், ஒரத்தநாடு
ஓ.பி.எஸ். திடீரென தி.மு.க. வில் இணைந்துவிட்டாரே? அவ்ளோ தான் ஜெயலலிதாமேல் வைத்திருந்த பற்றா?
சுயத்துக்கே சோதனை வரும்போது தலைமை மீதான பற்றை வெளிக் காட்டிக் கொண்டிருக்க முடியுமா? எப்படி அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றால் ஒடுங்கிவிடுவார் களோ, அதுபோல் அர சியல்வாதிகளும் அரசியலி லிருந்து விலகினால் தீர்ந் தார்கள். ரிட்டயர்மெண்ட் டைவிட கம்பெனி மாறி வேலையைத் தக்க வைத்துக்கொள்வது பெட்டர் என்று ஓ.பி.எஸ். நினைக்கிறார்போல.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
ஏப்ரல் 1 முதல் எத்தனால் கலந்த பெட் ரோல்தான் விற்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட் டுள்ளதே..?
இந்தியாவின் மிகப் பெரிய எத்தனால் உற்பத்தி ஆலை வைத்திருப்பது யார், எத்தனை கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்று கூகுள் செய்து பாருங்கள். உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும். பெட்ரோலை விட்டு முழுக்க எத்தனாலில்தான் வண்டியை ஓட்டவேண்டும் என சட்டம் கொண்டுவரவில்லையே என சந்தோஷப்படுங்கள்.
கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.
விபத்துக்களைத் தடுக்க, திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அதிகாரிகள் யாகம் நடத்தியுள்ளது பற்றி?
அப்படியே போக்குவரத்துத் துறையின் ஒட்டுமொத்தக் கடனும் தீர ஒரு யாகம் செய்துபார்க்கலாம் அல்லவா! பலித்தால் போக்குவரத்துத் துறையின் கடன் தீர்ந்துவிடும். பலிக்காவிட்டால், ஐம்பதாயிரமோ, 1 லட்சமோ தானே நட்டம்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
மோடிக்கு ஹிந்தியை தவிர வேறெதுவும் தெரியாது. இஸ்ரேல் பிரதமருக்கு இஸ்ரேல் மொழியை தவிர வேறெதுவும் தெரியாது. பிறகு இருவரும் என்ன பேசிக்கொள்வார்கள்?
டெலிப்ராம்ப்டர் உதவியுடன் ஆங்கிலத்தில் பேசிச் சமாளிக்க, மோடியால் முடியும். நெதன்யாகு வுக்கு ஹூப்ருவைப் போலவே ஆங்கிலமும் சரளமாகப் பேச வரும். தவிரவும் அதிபர்கள், பிரதமர்கள் சந்திக்கும்போது கட்டித்தழுவுவதும், கைகுலுக்கு வதும், உரையாடுவதும் காமிராவுக்குத் தானே தவிர, நிஜமான பேச்சுக்களை உயர் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். நவீன தொழில்நுட்பத்தில், நான் பேசும் என் தாய்மொழியை எதிரிலிருப்பவரின் தாய்மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லும் கருவிகள் வந்துவிட்டன. அதனால் இதைக்குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
அனில் அம்பானியின் ரூ. 3,716 கோடி மதிப்பிலான மும்பை இல்லத்தை.. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கி சீல் வைத்துள்ளதே.. அமலாக்கத்துறை..?
எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் நிறைய குடைந்து கொண்டிருக்கின்றன. அம்பானி, அதானி என்றால் ஆட்சியிலிருக்கும் அரசு பம்மிப் பதுங்கிவிடுகின்றது என நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அதனால் சொத்துக்கு சீல் வைத்திருக்கிறது. ஆனால் மோசடி நடந்து பல வருடங்கள் கடந்த நிலையில், அமலாக்கத் துறை அனில் அம்பானியின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயர் நிர்வாகியைக் கைதுசெய்ததே தவிர, அம்பானியைத் தொடக்கூட செய்யவில்லை. வழக்கு முடியும்போது என்ன ட்விஸ்ட் வருகிறது என்று பாருங்கள். அதன்பிறகு அமலாக்கத்துறையின் துணிச்சலையோ, துணிச்சலின்மையையோ பேசலாம்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
தி.மு.க. கூட்டணிக்கு பூஜ்ஜியம், எங்களுக்கு ராஜ்ஜியம் என்று இ.பி.எஸ். பேசியிருக்கிறாரே?
நல்ல ரைமிங்தான். விளம்பர நிறுவனங்களுக்கு வாசகம் எழுதித் தந்தால் நல்ல சில்லறை கிடைக்கும். ஆனால் டெல்லி யாருக்கு எத்தனை சீட்டு என பங்கு பிரிக்கும் தினுசைப் பார்த்தால், ஜெயித்தால்கூட ராஜ் ஜியம் எடப்பாடி வசம் வருமா, இல்லை வேறெவரும் தட்டிச்சென்றுவிடுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/mavali-2026-03-06-16-30-33.jpg)