கே.வல்லவன், பேரணாம்பட்டு

டெல்லியில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் கேண்டீன் திறந்திருக்கிறார்களே?

Advertisment

மகளிருக்கு பேருந்தில் இலவசப் பயணம், உரிமைத் தொகை திட்டங்களை பல மாநிலங்கள் பின் பற்றுவதால் தங்கள் திட்டங்கள் தேசிய அளவில் பின் பற்றப்படுவதாக தி.மு.க. பெருமையடித்துக்கொள்கிறது. இப்போது அ.தி.மு.க.வும் தங்களது அம்மா உணவகத் திட்டத்தை, தலைநகரான டெல்லியில், தேசியக் கட்சியே பின்பற்றுவதாக ஜம்பமடித்துக்கொள்ளலாம்.

Advertisment

எச்.மோகன், மன்னார்குடி

வாழ்க்கை தரும் அவமானங்களை எதிர்கொள் வது எப்படி?

இளவயதில் எடிசனின் அம்மாவிடம் அவனது வகுப்பாசிரியர், "அவனது மனநிலை சரியில்லை. அவனை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்று தெரிவித்திருந்த ஒரு கடிதத்தைக் கொடுத்தார். கடிதத்தில் எழுதியிருந்த விவரம் எடிசனுக்குத் தெரி யாது. வீட்டுக்கு வந்ததும் எடிசன் விவரம் கேட்க, கடிதத்தை வாசித்த எடிசனின் அம்மா, “"உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு ஏற்ற அளவில் எங்கள் பள்ளி இல்லை. வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்'’என வாசித்தார். அவமானத்தால் மகன் மனம்சுருங்கிப் போய்விடக்கூடாதென அவரது தாய் நினைத்தார். பின்னால் பெரிய விஞ்ஞானியான பின் இந்த உண்மை எடிசனுக்குத் தெரியவந்தது. எடிசனின் அம்மாவைப்போல நேர்மறைத்தன்மையோடு தான் எந்த அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

"மக்களுக்கு நல்லது செய்ய நடிகர் களுக்கு அதிகாரம் அவசியமில்லை' என் கிறாரே நடிகர் சிவராஜ்குமார்?

Advertisment

அரசியலுக்கு இன்னார்தான் வரவேண்டுமென எந்த விதிமுறையும் இல்லை. ஆனால் வெறுமனே நோட்புக் கொடுப்பது, ரத்ததானம் செய்வதை உள்ளூர் ரசிகர் மன்றத் தலை வர்களே செய்துவிடுவார்களே. அதற்கெதற்கு நடிகர்? ஆக, நடிகர் கள் அரசியலுக்கு வருவதில் மக் கள் நலம் இரண்டாம் பட்சம்தான். அதிகார வேட்கையே முதன்மை யானது. ஆனால் அதையெல்லாம் வெளிப்படையாகப் பேசமுடியுமா?.

பி.ஓம்பிரகாஷ், சென்னை-66

சாதாரண காதல் விவகாரம் கூட கொலை செய்யுமளவுக்குப் போக, சில நடிகர்கள் பேசும் வசனம்தானே காரணம்?

நடிகர்கள், நல்லதும் கெட்டதுமாய் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கத்தான் வேண்டியிருக் கும். பெண்களை ஈவ்-டீசிங் செய்வது, குடிப்பது, புகைப்பது போன்றவற்றை நடிகரிடமிருந்து கற்பவர் கள், ராணுவ தீரத்தை வெளிப்படுத்தும் படத்தில் நடித்ததைப் பார்த்து எல்லோரும் ராணுவத்தில் சேரப் போய்விடுகிறார்களா என்ன? அதனால் முழுப் பொறுப் பையும் நடிகர்கள் தலையில் கட்டுவது சரிவராது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"பிரியங்கா பிரதமராவது காலப்போக்கில் நடக்கும்' என்று அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கிறாரே?

mavali1

இன்னும் ராகுல் விவகாரத்திலேயே முடிவு தெரியவில்லை. அதற்குள் ராபர்ட் வதேரா, பிரியங்கா வுக்குத் தாவிவிட்டார். அது அவரின் ஆசையாக இருக்கும். முதலில் காங்கிரஸை உயிர்த்தெழ வைத்து பா.ஜ.க.வுக்கு சரியான எதிர்க்கட்சி என நிரூபித்துவிட்டு... பிரதமர் கனவு காணலாம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

இந்தியா -சீன உறவில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என்கிறதே சீனா?

அமெரிக்காவுடனான இந்திய உறவில் சீனாவும், சீனாவுடனான இந்திய உறவில் அமெரிக்காவும் விரிசலை ஏற்படுத்த இரு நாடுகளும் பரஸ்பரம் முயற்சிசெய்யும்தான். அமெ ரிக்காவாவது டேரிஃபோடு நின்றுவிட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதி, அருணா சலப்பிரதேசம், நேபாள எல்லை என வளைத்து வளைத்து குடைச்சல் கொடுத் துக்கொண்டு உறவைப் பற்றி சீனா பேசுவதுதான் வேடிக்கை. புதிதாக பாகிஸ்தான் வசமுள்ள பலுசிஸ்தான் பகுதியை பாகிஸ் தான் கட்டுக்குள் வைக்க முடி யாததால், அங்கே சீன ராணு வத்தை நிறுத்த திட்டமிடப்படு கிறது. இந்த லட்சணத்தில் சீனா வை நம்பி எப்படி உறவு வைக்கமுடியும்?

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு 

100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதைப் பாராட்ட தி.மு.க.வுக்கு மனம்வரவில்லை என்கிறாரே எடப்பாடி?

தமிழ் சினிமாவில் பெண்ணைச் சீரழித்தவ னுக்கே, கல்யாணம் செய்துவைக்க நாட்டாமை தீர்ப்பளிப்பாரே அதுபோல, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முடிந்தவரை சீரழித்தது மோடி அரசு. இப்போது நிதிச் சுமையை மாநில அரசு பக்கம் தள்ளிவிட்டு 125 நாட்களாக அதிகரித்ததாகச் சொல்வதை பாராட்டவேண்டும் என்கிறார் எடப்பாடி. எடப்பாடி நாட்டாமையாக இருந்தால், அவரும் தமிழ் சினிமா நாட்டாமை போலத்தான் தீர்ப்பு சொல்வார்போல.